சாம்சங் அறிமுகம் செய்த புதிய 4கே ஸ்மார்ட் டிவிகள்.. எந்த மாடல்? என்ன விலை?
சாம்சங் நிறுவனம் புதிய சாம்சங் எக்ஸ்8எப் கியூ-மினி எல்இடி டிவியை (Samsung X8F QD Mini LED TV)இன்று அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 55 இன்ச், 65 இன்ச், 75 மற்றும் 85 அளவுகளில் இந்த புதிய டிவி வாங்க வாங்க கிடைக்கும். அதுவும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன. இப்போது இந்த புதிய சாம்சங் டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சாம்சங் எக்ஸ்8எப் கியூ-மினி எல்இடி டிவி அம்சங்கள் (Samsung X8F QD Mini LED TV Specifications): சாம்சங நிறுவனத்தின் NQ4 ஏஐ ஜென்2 (NQ4 AI Gen2) பிராசஸர் மூலம் இந்த புதிய சாம்சங் டிவிகள் இயங்குகின்றன. அதுவும் இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் மற்றும் தெளிவான 4K வீடியோக்களை பார்க்க அனுமதிக்கும். இதற்கு முன்பு வெளியான சாம்சங் டிவிகளில் உள்ள பிராசஸர்-ஐ விட 40 சதவீதம் அதிக சிபியு செயல்திறனையும் இரண்டு மடங்கு GPU சக்தியையும் வழங்குகிறது இந்த NQ4 ஏஐ ஜென்2 பிராசஸர்.

குறிப்பாக இந்த சாம்சங் எக்ஸ்8எப் கியூ-மினி எல்இடி டிவி மாடல்கள் சிறந்த திரை அனுபவம் வழங்கும். மேலும் இந்த சாம்சங் டிவிகள் பல அசத்தலான கேமிங் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் குவாண்டம் டாட் மினி எல்இடி பேனல் (Quantum Dot Mini LED panel) இந்த டிவிகளில் உள்ளன.
எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+), எச்டிஆர் விவிட் (HDR Vivid) போன்ற பல டிஸ்பிளே அம்சங்கள் புதிய 55 இன்ச், 65 இன்ச், 75 மற்றும் 85 இன்ச் டிவிகளில் உள்ளன. குறிப்பாக இவை தெளிவான வீடியோ மற்றும் துல்லியமான வண்ணங்களை வழங்கும். மேலும் இதன் இந்த டிவிகளின் டிஸ்பிளே ஆனது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவை வழங்குகிறது.
மற்ற சாம்சங் டிவிகளை விட எட்ஜ்-டு-எட்ஜ் பேனல் உடன் சாம்சங் எக்ஸ்8எப் கியூ-மினி எல்இடி டிவி மாடல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல் சூரிய சக்தியில் இயங்கும் ரிமோட் இந்த டிவிகளுடன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டீப்சீக் ஆர்1 (DeepSeek R1) ஆதரவைக் கொண்டுள்ளன இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக மேம்பட்ட ஏஐ அம்சங்கள் வசதி இந்த டிவிகளில் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
MEMC என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவும் சாம்சங் எக்ஸ்8எப் கியூ-மினி எல்இடி டிவி மாடல்களில் உள்ளன. பின்பு ஃப்ரீசிங்க் பிரீமியம் (FreeSync Premium), மினி-மேப் ஜூம் (mini-map zoom), 32:9 அல்ட்ரா-வைட் ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சாம்சங் டிவிகளில் உள்ளன.
சாம்சங் எக்ஸ்8எப் கியூ-மினி எல்இடி டிவி மாடல்களில் நான்கு எச்டிஎம்ஐ போர்ட் உள்ளன. இதுதவிர பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய சாம்சங் டிவிகள் வெளிவந்துள்ளன. One UI Tizen OS மூலம் இந்த சாம்சங் டிவிகள் இயங்குகின்றன. மேலும் 300-க்கும் அதிகமான ஆப்ஸ்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
ஆனால் சாம்சங் எக்ஸ்8எப் கியூ-மினி எல்இடி டிவி மாடல்கள் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டிவிகள் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. சாம்சங் எக்ஸ்8எப் கியூ-மினி எல்இடி டிவியின் ஆரம்ப விலை 5,299 yuan (இந்திய மதிப்பில் ரூ.61,983) ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








