சாம்சங் VS சியோமி: பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட் டிவி எது?
இந்தியாவில் சியோமி மற்றும் சாம்சங் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்தியாவில் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. காரணம் என்னவென்றால், பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் சியோமி ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்படுகிறது.

அதேசமயம் சாம்சங் ஸ்மார்ட் டிவிகளும் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களில் சாம்சங் ஸ்மார்ட் டிவிகளை விட சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்கள் தான் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.இப்போது சாம்சங் 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி 2020 எடிஷன் (UA32TE40FAKXXL) மற்றும் சியோமி மி 4ஏ ப்ரோ 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆகிய இரண்டு சாதனங்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன? மற்றும் எது சிறந்தது என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி மி 4ஏ ப்ரோ 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி
சியோமி மி 4ஏ ப்ரோ 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது 1366 x 768பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 16:09 என்ற திரைவிகிதம் மற்றும் 178-degree wide viewing angle உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது.

சியோமி டிவி மெமரி வசதி
அதேபோல் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரிவசதிஇடம்பெற்றுள்ளது. பின்பு 64-பிட் குவாட்-கோர் Amlogic பிராசஸர் வசதி இருப்பதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 7th generation imaging engine மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட் டிவி.

சியோமி டிவி ஆப் வசதிகள்
சியோமி மி 4ஏ ப்ரோ 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலில் பேட்ச்வால் 3.0 ஆதரவு, கூகுள் பிளே ஸ்டோர் உடன் பல ஆப் வசதிகள் (Netflix|Prime Video|Disney+Hotstar|Youtube), Chromecast ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட் வசதி உள்ளிட்ட பல்வேறு அட்டகாசமான அம்சங்களும் உள்ளன.

சியோமி டிவியின் விலை
மேலும் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 20 வாட் ஸ்பீக்கர் உள்ளிட்ட ஆதரவுகளும் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் குறிப்பிட்ட தள்ளுபடி கிடைக்கும்.

சாம்சங் 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி 2020 எடிஷன்
சாம்சங் 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி 2020 எடிஷன் ஆனது 1366 x 768 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் Tizen என்ற இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

சாம்சங் டிவி ஆடியோ வசதி
இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவியில் 20 வாட் ஸ்பீக்கர் ஆதரவு மற்றும் Dolby Digital Plus வசதியும் உள்ளது எனவே சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு சோனிலிவ், ஈரோஸ் நவ், ஜியோ சினிமா, கானா, யூடியூப், பேஸ்புக், ஸ்பாடிஃபை, இந்தியா டுடே, ஆஜ் தக், சன் நெக்ஸ்ட், பிக் ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட ஆப் வசதிகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்
டிவி மாடல்.

சாம்சங் டிவி விலை
குறிப்பாக சாம்சங் 32-இன்ச் எச்டி ரெடி மாடலில் வாய்ஸ் அசிஸ்டண்ட், பிசி மோட், Home Cloud, Live Cast, Screen Share, Universal Guide, Web Browser உள்ளிட்ட ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளும் இந்த ஸ்மார்ட் டிவியில் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவியின் விலைரூ.15,499-ஆக உள்ளது.

எது சிறந்தது?
சாம்சங் ஸ்மார்ட் டிவியை விட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது சியோமி டிவி. குறிப்பாக பட்ஜெட் விலையில் அருமையான இயங்குதளம் உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது. ஆனால் சாம்சங் டிவியின் விலை சற்று உயர்வாக இருந்தாலும் குறிப்பிட்ட அம்சங்கள் மட்டுமே உள்ளன. எனவே பயனர்கள் சியோமி ஸ்மார்ட் டிவி மாடலை தேர்வு செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications