வெளுத்து கட்டும் விற்பனை.. ரூ.4,000 ஆஃபரில் 43 இன்ச் Samsung டிவி.. Tizen TV ஓஎஸ்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் விஷன் ஏஐ 43 இன்ச் டைசன் டிவிக்கு (Samsung Vision AI 43 inch Tizen TV) தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.4,000 தள்ளுபடி கிடைப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது. ஏனென்றால், 4K அப்ஸ்கேலிங், ஆப்ஜெக்ட் சவுண்ட் டிராக்கிங் கொடுத்துள்ளது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 24 சதவீத தள்ளுபடி விலைக்கு சாம்சங் விஷன் ஏஐ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே மினி எல்இடி டைசன் டிவி 2026 எடிஷன் (Samsung Vision AI 43 inch Ultra HD 4K Mini LED Tizen TV 2026 Edition) கிடைக்கிறது. ஆகவே, ரூ.34,990 விலைக்கு வாங்கலாம். இதுபோக தகுதியான பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது.

இந்த தள்ளுபடியை பெற்றால், ரூ.30,990 விலையில் சாம்சங் விஷன் ஏஐ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே மினி எல்இடி டைசன் டிவி 2026 எடிஷனை வாங்கி கொள்ளலாம். 2 வருட வாரண்டி கிடைக்கிறது. இதில் 1 வருடத்துக்கு வழக்கமான வாரண்டி மற்றும் 1 வருடத்துக்கு கூடுதல் வாரண்டி கொடுக்கப்பட்டுள்ளது. டோர்-ஸ்டெப் சர்வீஸ் சப்போர்ட் கிடைக்கிறது.
சாம்சங் விஷன் ஏஐ 43 இன்ச் டைசன் டிவி முக்கிய அம்சங்கள்: 3840 x 2160 பிக்சல்களுடன் 43 இன்ச் மினி எல்இடி (Mini LED) டிஸ்பிளேவை இந்த சாம்சங் விஷன் ஏஐ 43 இன்ச் டைசன் டிவி கொடுத்துள்ளது.
அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன், 178 டிகிரியில் வியூ ஆங்கிள் மற்றும் 50 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.
மோஷன் மற்றும் கேமிங் என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode) மற்றும் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable Refresh Rate) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ப்யூர் கலர் ஸ்பெக்ட்ரம் (Pure Color Spectrum), 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling) மற்றும் கலர் பூஸ்டர் (Color Booster) கொடுக்கப்பட்டு உள்ளது.
சாம்சங் விஷன் ஏஐ கம்பேனியன் இந்த சாம்சங் விஷன் ஏஐ 43 இன்ச் டைசன் டிவிக்கு கிடைக்கிறது. ஆடியோவில் ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Sound Tracking Lite) மற்றும் அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) சப்போர்ட் கிடைக்கிறது. ஃபுட்பால் மோட் (Football Mode), மினி எல்இடி எச்டிஆர் உள்ளிட்ட சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
மினி எல்இடி ப்ராசஸர் 4கே (Mini LED Processor 4K) இந்த சாம்சங் விஷன் ஏஐ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே மினி எல்இடி டைசன் டிவி 2026 எடிஷனுக்கு கிடைக்கிறது. 8 ஜிபிக்கான ஸ்டோரேஜ் உள்ளது. டைசன் டிவி ஓஎஸ் (Tizen TV OS) கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன.
விஷன் ஏஐ சீரிஸ் (Vision AI Series) மற்றும் ஏ43எம்2ஈஎச்ஏயுஎல்எக்ஸ்எல் (UA43M2EHAULXL) மாடலின் கீழ் இந்த சாம்சங் விஷன் ஏஐ 43 இன்ச் டைசன் டிவி கிடைக்கிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட்களும், 1 யுஎஸ்பி போர்ட்டும் உள்ளது. வை-பை 5 (Wi-Fi 5) மற்றும் ப்ளூடூத் உள்ளிட்ட வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளும் இந்த சாம்சங் டிவிக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications