Home
Gadgets

ஆரம்பமே அதிரடி.. பிளிப்கார்ட் சேல்.. சாம்சங் 4K டிவிக்கு சூப்பர் ஆஃபர்.. 30W ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சாசா லேலே 2026 (Flipkart SASA LELE 2026) என்கிற சிறப்பு விற்பனை தற்போது நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதேபோல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் 4கே டிவி ஒன்று தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

சாம்சங் விஷன் ஏஐ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே மினி எல்இடி ஸ்மார்ட் டைஸன் டிவி 2026 எடிஷன் (Samsung Vision AI 43 inch 4K Mini LED Tizen TV 2026) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 26 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ33,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.5500 வரை தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆரம்பமே அதிரடி.. பிளிப்கார்ட் சேல்.. சாம்சங் 4K டிவிக்கு சூப்பர் ஆஃபர்

சாம்சங் விஷன் ஏஐ 43 இன்ச் 4கே மினி ஸ்மார்ட் டைஸன் டிவி 2026 அம்சங்கள் (Samsung Vision AI 43 inch TV 2026 Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 50 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்( 50Hz refresh rate), மினி எல்இடி எச்டிஆர், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக பியூர் கலர் (Pure Color), சாம்சங் விஷன் ஏஐ companion, 4K அப்ஸ்கேலிங் (4K Upscaling), கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Contrast Enhancer), ப்யூர் கலர் ஸ்பெக்ட்ரம் (Pure Color Spectrum), கலர் பூஸ்ட்டர் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

மினி எல்இடி பிராசஸர் 4கே உடன் சாம்சங் விஷன் ஏஐ 43 இன்ச் 4கே மினி ஸ்மார்ட் டைஸன் டிவி வெளிவந்தது. அதுவும் இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மோஷன் எக்ஸ்சலரேட்டர் (Motion Xcelerator), ஃபுட்பால் மோட், ஃபிலிம் மோட் (Film Mode) உள்ளிட்ட அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.

டைசன் ஓஎஸ் மூலம் சாம்சங் விஷன் ஏஐ 43 இன்ச் 4கே மினி ஸ்மார்ட் டைஸன் டிவி 2026 இயங்குகிறது. குறிப்பாக 7 ஓஎஸ் அப்டேட் இந்த சாம்சங் டிவிக்கு கிடைக்கும். இந்த ஓஸ் மூலம் அலெக்சா (Alexa) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கிடைக்கும். பின்பு சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) அக்சஸ் கிடைக்கிறது. அதேபோல வெப் பிரவுசர் (Web Browser), ஸ்மார்ட்திங்க்ஸ் ஹப் (SmartThings Hub), மேட்டர் ஹப் (Matter Hub) சப்போர்ட் வருகிறது. மொபைல் டூ டிவி மிரரிங், சவுண்ட் மிரரிங் (Sound Mirroring), வயர்லெஸ் டிவி ஆன் (Wireless TV On) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் கிடைக்கிறது.

ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Sound Tracking Lite) மற்றும் அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. 8ஜிபி மெமரி வசதியும் இந்த டிவியில் உள்ளது.

ஆரம்பமே அதிரடி.. பிளிப்கார்ட் சேல்.. சாம்சங் 4K டிவிக்கு சூப்பர் ஆஃபர்

அதுவும் எஎம்டிஎம்ஐ ( HDMI), யுஎஸ்பி-A போர்ட்கள் ( USB-A ports), வைஃபை, ஈதர்நெட், 1 டிஜிட்டல் ஆடியோ அவுட் போர்ட், 1 RF இன், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் விஷன் ஏஐ 43 இன்ச் 4கே மினி ஸ்மார்ட் டைஸன் டிவி 2026 மாடலில் உள்ளன.

ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM), வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable Refresh Rate) உள்ளிட்ட பல கேமிங் அம்சங்களுடன் இந்த சாம்சங் டிவி வெளிவந்தது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவி உடன் வாய்ஸ் கண்ட்ரோல் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Vision AI 43 inch TV 2026 available at discounted price on Flipkart SASA LELE sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X