Home
Gadgets

ஸ்மார்ட்போன்களுக்கு பயன்படும் வகையில் கீபோர்டு அறிமுகம் செய்த சாம்சங்.!

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனமும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களும் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கீபோர்ட் ட்ரியோ 500

கீபோர்ட் ட்ரியோ 500

இந்நிலையில் ஸ்மார்ட்போன்களுக்கு பயன்படும் வகையில் கீபோர்டு அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் வரும் ஜூன் மாதம் சாம்சங் நிறுவனத்தின் புதிய கீபோர்டு விற்பனைக்கு வரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் கீபோர்ட் ட்ரியோ 500 மாடலின் விலை 45 யூரோக்கள் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

ட்ரியோ 500 கீபோர்ட்

சாம்சங் நிறுவனத்தின் ட்ரியோ 500 கீபோர்ட் மாடலை ஒரே சமயத்தில் பல்வேறு சாதனங்களுடன் இணைக்க முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு இதை ப்ளூடூத் மூலம் மூன்று வெவ்வேறு சாதனங்களுடன் இணைக்க முடியும். அதேசமயம் எளிமையாக ஒவ்வொரு சாதனத்துடன் மாற்றி பயன்படுத்தலாம். பின்பு இந்த சாம்சங் டிராவல் கீபோர்டு ஆனது பல்வேறு ஷார்ட்கட் வசதிகளை கொண்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

ட்ரியோ 500 கேலக்ஸி

இந்த சாம்சங் கீபோர்டு ட்ரியோ 500 கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட் சாதனங்களுடன் டெக்ஸ் மோடில் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த சாதனத்தை லேப்டாப் உடன் இணைக்க முடியும் என்று கூறப்படுகிறது. அண்மையில் சாம்சங் நிறுவனம்
அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி எப்02எஸ், கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

  சாம்சங் கேலக்ஸி எப்12 விலை

சாம்சங் கேலக்ஸி எப்12 விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எப்12 மாடலின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. Sea Green, Sky Blue
மற்றும் Celestial Black போன்ற நிறங்களில் இந்த கேலக்ஸி எப்12 மாடல் கிடைக்கும்.

  சாம்சங் கேலக்ஸி எப்12 அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எப்12 அம்சங்கள்

  • டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்கள்)
  • 20:9 என்ற திரைவிகிதம்
  • 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • சிப்செட்: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் ஆதரவுடன் எஸ்நோஸ் 850 ஆதரவு உள்ளது.
  • ரேம்: 4ஜிபி
  • மெமரி: 64ஜிபி/128ஜிபி
  • கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
  • ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
  • செல்பீ கேமரா: 8எம்பி
  • பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி
  • 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
  • இரட்டை சிம், புளூடூத் 5.0, வைஃபை,
  • ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி
  • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
  • எடை: 221 கிராம்
  • சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் விலை

    சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் விலை

    3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எப்02எஸ் மாடலின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. மேலும் டயமண்ட் ப்ளூ, டயமண்ட் ஒயிட் மற்றும் டயமண்ட் பிளாக் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

    சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் அம்சங்கள்

    சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் அம்சங்கள்

    • டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி டிஸ்பிளே (1560 x 720 பிக்சல்கள்)
    • சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் உடன் அட்ரினோ 506 ஜிபியு ஆதரவு
    • ரேம்: 3ஜிபி/4ஜிபி
    • மெமரி: 32ஜிபி/64ஜிபி
    • கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
    • ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார்
    • செல்பீ கேமரா: 5எம்பி
    • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
    • 15 வாட் குவிக் சார்ஜ் ஆதரவு
    • OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
    • இரட்டை சிம், புளூடூத் 5.0, வைஃபை,
    • ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி
    • 3.5 மிமீ ஆடியோ ஜாக்

Best Mobiles in India

English summary
Samsung Travel Keyboard Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X