Home
Gadgets

இனி வீட்டுக்கு உள்ளயே சினிமா தியேட்டர்.. Samsung-ன் புது 83-இன்ச் WOLED ஸ்மார்ட் டிவி.. ஆறு 2026 மாடல்கள்!

2026 ஆம் ஆண்டு ஸ்மார்ட் டிவி ஆர்வலர்களுக்கு கொஞ்சம் ஸ்பெஷலாக இருக்கப்போகிறது. சாம்சங் (Samsung) நிறுவனம் ஆனது கடந்த 2022 ஆம் ஆண்டில் ஓஎல்இடி (OLED) டிவி சந்தையில் நுழைந்தது. அந்த ஆண்டில் சாம்சங் பிராண்டின் ஓஎல்இடி டிவி சீரீஸின் கீழ் S95B என்கிற ஒரே ஒரு மாடலை மட்டுமே அறிமுகம் செய்து இருந்தது.

பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டில், சாம்சங் நிறுவனம் அதை இரண்டு (S90C மற்றும் S95C) மாடல்களாக விரிவுபடுத்தியது. அதை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் சாம்சங் நிறுவனம் அதன் ஓஎல்இடி டிவி சீரீஸின் கீழ் மூன்று (S85D, S90D, மற்றும் S95D) மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது.

Samsung-ன் புது 83-இன்ச் WOLED ஸ்மார்ட் டிவி.. ஆறு 2026 மாடல்கள்!

2025 இல் இந்த எண்ணிக்கை மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2025 ஓஎல்இடி டிவி சீரீஸின் கீழ் 2024 ஆம் ஆண்டை போலவே 3 மாடல்கள் (S85F, S90F, மற்றும் S95F) தான் அறிமுகம் ஆகின. ஆனால் 2026 ஆம் ஆண்டில் இது மாறும் என்பது போல் தெரிகிறது. சாம்சங் நிறுவனம் "இந்த விரிவாக்கத்தை" அடுத்த ஆண்டு (2026) முதல் மீண்டும் தொடங்கலாம்.

2026 ஆம் ஆண்டில் சாம்சங் நிறுவனம் மொத்தம் 6 ஓஎல்இடி ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக S85H, S90H மற்றும் S95H ஆகிய 3 மாடல்கள் குறித்த விவரங்கள் லீக் ஆகின, இப்போது சாம்சங் பிராண்டின் உதிரி பாகங்கள் தரவுத்தளம் வழியாக மேலும் மூன்று (S82H, S83H மற்றும் S99H) மாடல்களின் விவரங்கள் (FlatPanelsHD வழியாக) லீக் ஆகியுள்ளன

மேற்குறிப்பிட்ட ஸ்மார்ட் டிவிக்களில் மாடல் பெயர்கள் குறிப்பிடுவது போலவே, S82H புதிய பேஸிக் மாடலாக இருக்கும், இது S83H மற்றும் S85H ஆகிய 2 மாடல்களுக்கு கீழே இருக்கும், மேலும் S99H ஆனது பிளாக்ஷிப் மாடலாக S95H க்கு மேலே வைக்கப்படும்.

தரவுத்தளத்தின்படி, S82H மாடல ஆனது 48 இன்ச் முதல் 77 இன்ச் வரையிலான அளவுகளில் கிடைக்கும், அதே நேரத்தில் S83H மாடல் ஆனது 48 இன்ச் முதல் 83 இன்ச் வரையிலான அளவுகளில் கிடைக்கும். இவைகள் அனைத்தும் எல்ஜி டிஸ்பிளேவின் WOLED பேனல்களை கொண்டிருக்கும்.

S99H மாடலை பொறுத்தவரை, இது 55-இன்ச், 65-இன்ச், 77-இன்ச் மற்றும் 83-இன்ச் அளவுகளில் கிடைக்கும். முதல் மூன்று மாடல்களில் சாம்சங் டிஸ்பிளேவின் QD OLED பேனல்கள் இருக்கும், கடைசி மாடலில் S95H மாடலை போலவே எல்ஜி டிஸ்பிளேவின் WOLED பேனல் இருக்கும்.

தற்போதுள்ள மாடல்களை விட மலிவு விலை மாடல்களை மற்றும் அதிக பிரீமியம் மாடல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், சாம்சங் அதன் ஓஎல்இடி டிவி சீரீஸிற்கு பரந்த அளவிலான பார்வையாளர்களை ஈர்க்க முடியும். இது பிராண்ட் அதிக டிவிகளை விற்கவும், ஓஎல்இடி டிவி சந்தையில் அதிக பங்கை பிடிக்கவும், துறையில் அதன் தலைமையைப் பராமரிக்கவும் உதவும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்.

ஒருவேளை நீங்கள் இப்போதே, சாம்சங்கின் புதிய 2026 மாடல்கள் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே ஒரு பெரிய ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்பினால் அமேசான் இந்தியா (Amazon India) தளத்தில், ஆபர் விலையில் கிடைக்கும் சில பிரபலமான ஸ்மார்ட் டிவிகளை கருத்தில் கொள்ளலாம்

1. 55 இன்ச் சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (55 inch Samsung Crystal 4K Vista Ultra HD Smart LED TV): தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 28% தள்ளுபடியை பெற்று ரூ.55,200 க்கு பதிலாக ரூ.39,990 க்கு வாங்க கிடைக்கிறது.

2. 55 இன்ச் சோனி பிராவியா 2எம்2 சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (55 inch Sony BRAVIA 2M2 Series 4K Ultra HD Smart LED Google TV): இது 42% தள்ளுபடியை பெற்று ரூ.99,900 க்கு பதிலாக ரூ.57,990 க்கு வாங்க கிடைக்கிறது.

3. 65 இன்ச் டிசிஎல் 4கே யுஎச்டி ஸ்மார்ட் க்யூடி-மினி எல்இடி கூகுள் டிவி (65 inch TCL 4K UHD Smart QD-Mini LED Google TV): இது 61% தள்ளுபடியை பெற்று ரூ.1,69,900 க்கு பதிலாக ரூ.66,990 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung to launch Total 6 OLED Smart TV models including 83 inch WOLED TV in 2026 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X