புதிய தொழில்நுட்ப வசதியுடன் சாம்சங் ஃபிரட்ஜ் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

|

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட் டிவி உட்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களையும் அறிமுகம் செய்து வருகிறது,குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

சாதனப் பெட்டி (ஃபிரட்ஜ்)

நமது வீட்டில் குளிர் சாதனப் பெட்டி (ஃபிரட்ஜ்) இருக்கும், ஆனால் அதில் ஒரளவு தொழில்நுட்ப வசத இருக்கும்,ஆனால் இப்போதுவரும் குளிர் சாதனப் பெட்டி (ஃபிரட்ஜ்) மிகவும் அதிநவீன தொழில்நுட்ப வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவருகிறது.

 தனது SpaceMax Family

அதன்படி சாம்சங் நிறுவனம் தனது SpaceMax Family Hub Refrigerator எனும் குளிர் சாதனப் பெட்டியை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த குளிர் சாதனப் பெட்டி அதிநவீன வசதிகள், பல்வேறு இணைக்கப்புகளுடன் கூடிய வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

இனி ஆன்லைன் வகுப்புக்கு இதெல்லாம் செய்யனும்: மத்திய அமைச்சகம் அறிவிப்பு!இனி ஆன்லைன் வகுப்புக்கு இதெல்லாம் செய்யனும்: மத்திய அமைச்சகம் அறிவிப்பு!

பெட்டியின் உள்ளே என்ன

SpaceMax Family Hub Refrigerator ஆனது உணவுத் திட்டத்தை தானியங்குபடுத்தும் அம்சங்களுடன் வருகிறது, குளிர்சாதனபெட்டியின் உள்ளே என்ன இருக்கிறது என்பதை எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்க அனுமதிக்கிறது, அதாவது ஸ்மார்ட்போன் உட்பட உங்கள் வீட்டில் இருக்கும் பிற ஸ்மார்ட் சாதனங்களுடன் இந்த குளிர் சாதனப் பெட்டி எளிதில் இணைகிறது.

சமையலறையில் பணிபுரியும் போது

மேலும் உங்கள் சமையலறையில் பணிபுரியும் போது உங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை குளிர்சாதன பெட்டியின் பொழுதுபோக்கு திரையில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாம்சங் குளிர்சாதன பெட்டியை ஸ்மார்ட்போன் மூலம் கண்காணிக்க முடியும் என்பதால், உணவு மேலாண்மை அம்சம் குளிர்சாதன பெட்டியை உண்மையில் திறக்காமல் பார்க்க முடியும்.

இதில் மீல் பிளானர் அம்சம்

மேலும் இதில் மீல் பிளானர் அம்சம், நீங்கள் அமைத்த உணவு விருப்பங்களின் அடிப்படையில் ஸ்மார்ட் ரெசிபிகளை பரிந்துரைக்கிறது, உங்கள் குளிர்சாதன பெட்டி சரக்குகளின் அடிப்படையில் ஒரு வார கால உணவு திட்டத்தை கொண்டு வர உதவுகிறது.பின்பு உங்களுக்கு தேவையான அனைத்து சரியான பொருட்களுடன் உங்கள் ஷாப்பிங் பட்டியலையும் தயாரிக்கிறது.

எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!எல்ஜி அரிஸ்டோ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

 21.5-இன்ச் டச் டிஸ்பிளே வசதி

SpaceMax Family Hub Refrigerator ஆனது 21.5-இன்ச் டச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 25வாட் ஸ்பீக்கர்கள் இவற்றுள் அடக்கம். இந்த குளிர்சாதன பெட்டி பிரீமியம் பிளாக் மாட் பூச்சுடன் 657 லிட்டர் கொள்ளளவு கொண்டது மற்றும் பிளிப்கார்ட், samsung.com, relianacedigital.in, croma.com மற்றும் vijaysales.com ஆகியவற்றில் முன்பதிவு செய்ய ஜூலை 13 முதல் ஜூலை 26, 2020 வரை ரூ.1,96,990 என்ற சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கால உத்தரவாதத்துடன்

பின்பு இந்த முன்பதிவு ஸ்லாட்டுக்குப் பிறகு, நீங்கள் குளிர்சாதன பெட்டியை ரூ.2,19,900 விலை கொடுத்துதான் வாங்க முடியும்.குறிப்பாக முன்பதிவு சலுகையில் ரூ.9,000 வரை கேஷ்பேக் மற்றும், 37,999 மதிப்புள்ள கேலக்ஸி நோட் 10 லைட் இலவசம் போன்ற கூடுதல் நன்மைகளும் அடங்கும்.மேலும் SpaceMax Family Hub Refrigerato ஆனது 10 ஆண்டு கால உத்தரவாதத்துடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Samsung SpaceMax Family Hub Refrigerator Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X