சாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.! ரூ.14,490-முதல்.! எப்போது விற்பனை?

|

சியோமி ஸ்மார்ட் டிவிகளுக்கு போட்டி கொடுக்கும் வகையில் சாம்சங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த டிவி மாடல்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால்
சியோமி நிறுவனத்திற்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவி

சாம்சங் நிறுவனம் 4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவி மாடல்கள், எப்எச்டி மற்றும் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவிகளுடன் மிகவும் எதிர்பார்த்தஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது அதிகளவுவிற்பனை செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம் செய்துள்ள

மேலும் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் அனைத்தும் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் உள்ளிட்ட தளங்களில் வரும் ஜூன் 19 நள்ளிரவு முதல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு சாம்சங் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவிகளை ஆன்லைன் வழியாக தேர்வுசெய்யப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் பயனர்களுக்கு எக்கச்சக்கமான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும் - சென்னை விஞ்ஞானி கூறியது உண்மையா?சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும் - சென்னை விஞ்ஞானி கூறியது உண்மையா?

 சாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி விலை

சாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி விலை

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி ஆனது மூன்று வெவ்வேறு அளவுகளில் வாங்கலாம்- அதாவது 50-இன்ச்,55-இன்ச் மறறும் 65-இன்ச் என மூன்று அளவுகளில் கிடைக்கும்.

50-இன்ச் சாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.74,990
55-இன்ச் சாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.84,990
65-இன்ச் சாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.1,39,990

இந்த ஃபிரேம் 2020 மாடல்கள் 10 ஆண்டு ஸ்கிரீன் பர்ன்-இன் உத்தரவாதம், ஒரு வருட விரிவான உத்தரவாதம் மற்றும் கூடுதல் ஓராண்டு உத்தரவாதத்திற்கான விருப்பத்துடன் வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

சாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

சாம்சங் நிறுவனத்தின் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் கியூஎல்இடி டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்புகுவாண்டம் ப்ராசஸர் வசதி, அடாப்டிவ் சவுண்ட், ஆட்டோ ஹாட்ஸ்பாட், மல்டி வியூ, ஆர்ட் மோட், ஆர்ட் ஸ்டோர்,
இன்டெலிஜெண்ட் சென்சார்கள் உள்ளிட்ட அருமையான அம்சங்களை கொண்டுள்ளது.

மேலும் வாய்ஸ் அசிஸ்டென்ட்கள், ஸ்மார்ட் ஹோம், நோ கேப் வால் மவுண்ட், இன்விசிபிள் கனெக்ஷன் போன்ற தேர்வுசெய்யப்பட்ட அட்டகாசமான வசதிகளை கொண்டு இந்த ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் ஆன சாம்சங் ஷாப் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க கிடைக்கும்.

சாம்சங் 4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவி மாடல்கள்

சாம்சங் 4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவி மாடல்கள்

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 4கே யுஎச்டி ஸ்மாhர்ட் டிவிகளை பொறுத்தவரை,அதன் 43-இன்ச் மாடலானது ரூ.36,990என்கிற விலை நிர்ணயத்தில் தொடங்கி அதன் 65-இன்ச் மாடலானது ரூ.89,990-வரை நீள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிரிட்ஜுக்குள் அமர்நாத் பனி லிங்கம் - டீக்கடைக்கு குவியும் பக்தர்கள்., மதுரையில் பரபரப்பு!ஃபிரிட்ஜுக்குள் அமர்நாத் பனி லிங்கம் - டீக்கடைக்கு குவியும் பக்தர்கள்., மதுரையில் பரபரப்பு!

சாம்சங் எப்எச்டி மற்றும் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவிகள்

சாம்சங் எப்எச்டி மற்றும் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவிகள்

சாம்சங் நிறுவனத்தின் எப்எச்டி மற்றும் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவிகள பொறுத்தவரை, 32-இன்ச் மாடலானது ரூ.14,490 என்கிற விலை நிர்ணயத்தில் தொடங்கி அதன் 43 இன்ச் மாடலானது ரூ.31,990 வரை நீள்கிறது. இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் ஒரு வருட விரிவான உத்தரவாதமும் கூடுதல் ஓராண்டு உத்தரவாதத்திற்கான விருப்பமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ஸ் அசிஸ்டென்ட்கள்

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவி,எப்எச்டி மற்றும் எச்டி ரெடி மாடல்கள் ஆனதுவாய்ஸ் அசிஸ்டென்ட்கள், கன்டென்ட் கைட், கேம் என்ஹான்சர், மியூசிக் பிளேயர், பெர்சனல் கம்ப்யூட்டர் மோட்,
ஹோம் கிளவுட், ஆட்டோ ஹாட்ஸ்பாட், லைவ் காஸ்ட் போன்ற தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடதத்க்கது.

Best Mobiles in India

English summary
Samsung Smart TVs and The Frame 2020 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X