இந்தியா: சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல்கள் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் தனது புதிய அதிநவீன ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் பெயர் தி ஃபிரேம் ஸ்மார்ட் 7-இன்-1 32 இன்ச் எச்டி மற்றும் 40 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி டிவி என அழைக்கப்படுகின்றன. பின்பு இதன் உயர் ரக தி ஃபிரேம் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் மற்றும சாம்சங் வலைதளங்கள்
பிளிப்கார்ட் மற்றும சாம்சங் அதிகாரப்பூர்வ ஆன்லைன் வலைதளத்தில் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

பிரைட்னஸ் சென்சார்கள்
இப்போது அறிமுகம் செய்துள்ள சாம்சங் 7இன்-1 டிவிகளில் ஆன்லைன் தரவுகளை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவிகள் QLED தொழில்நுட்பம் மற்றும் இன்-பில்ட் மோஷன் மற்றும் பிரைட்னஸ் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

கலை சார்ந்த புகைப்படங்கள்
குறிப்பாக தி ஃபிரேம் டிவி பயன்படுத்தாத சமயத்தில் ஆர்ட் மோடிற்கு சென்று கலை சார்ந்த புகைப்படங்களை திரையில் காண்பிக்கும் இத்துடன் டிவி வைக்கப்பட்டுள்ள அறையின் சூழலுக்கு ஏற்ப ஸ்கிரீன் பிரைட்நஸ்
தானாக மாறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ரிமோட் கண்ட்ரோல்
மேலும் திஃபிரேம் டிவி மாடல்கள் பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களுடன் வயர்லெஸ் முறையில் இணைந்து கொண்டு ஸ்மார்ட் திங்ஸ் செயலி மற்றும் ஒன் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்குகிறது. பின்பு பில்ட்-இன் ஏர்பிளே 2 வசதியும் வழங்கப்பட்டு ஆப்பிள் சாதனங்களில் இருக்கும் தரவுகளைம் டிவியில் பார்க்க முடியும்.

அட்டகாசமான விலை
32-இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 டிவி விலை ரூ.22,500-ஆக உள்ளது.
40-இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 டிவி விலை ரூ.22,500-ஆக உள்ளது.
தி ஃபிரேம் 55- இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.1,19,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தகது.


Click it and Unblock the Notifications