சுழலும் ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்த சாம்சங்.!

|

சுழலும் டிவியான Samsung Sero மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இது கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

வழங்கும் நிலையில் இருந்து

வெளிவந்த தகவலின்படி கொரிய மொழியில் Sero (செரோ) என்றால் செங்குத்து என்று பொருள்படும். பின்பு இது தனித்துவமான4K QLED டிவி ஆகும். இந்த சாதனம் பாரம்பரியமான கிடைமட்ட பார்வையை வழங்கும் நிலையில் இருந்து செங்குத்தாக சுழற்றப்பட அனுமதிக்கும் ஒரு நிலைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வி மாடல் சிங்கிள் 43-இன்ச்

குறிப்பாக இந்த டிவி மாடல் சிங்கிள் 43-இன்ச் அளவிலான 4கே கியூஎல்இடி மாறுபாட்டில் கிடைக்கும். இந்தியாவில் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகள் வழியாக இந்த சாதனத்தை வாங்க முடியும். பின்பு இந்த சாம்சங் செரோ 43 இன்ச் ஸ்க்ரீன் டிவி இந்தியாவில் ரூ.1,24,990 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 உடன் இயங்குகிறதா சாம்சங் கேலக்ஸி ஏ52: இதோ வெளியான தகவல்!ஆண்ட்ராய்டு 11 உடன் இயங்குகிறதா சாம்சங் கேலக்ஸி ஏ52: இதோ வெளியான தகவல்!

குறிப்பிட்டபடி சாம்சங் செரோ டிவி மாடல்

முன்பு குறிப்பிட்டபடி சாம்சங் செரோ டிவி மாடல் கிடைமட்டத்திலிருந்து செங்குத்து நோக்குநிலைகளுக்கு மாறக்கூடிய திறன் கொண்டது. அடிப்படையில் ஸ்மார்ட்போனில் உள்ள லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்ட்ரெயிட்மோட்-ஐ போன்றது தான். மேலும் இதன்பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 அளவு விருப்பத்தில் கிடைக்கும்

43-இன்ச் ஸ்க்ரீன் அளவு விருப்பத்தில் கிடைக்கும் சாம்சங் செரோ டிவி மாடல் அல்ட்ரா எச்டி கியூஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பின்பு 3,840x2,160 தீர்மானம், HDR10 + ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் செரோ டிவி.

அதேபோல் இந்த டிவி மாடல் சமூக ஊடக தளங்களுக்கு  மிகவும் நட்புறவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. காரணம் ஸ்மார்ட்போன் திரைகளின் செங்குத்து நோக்குநிலையைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இன்ஸ்டாகிராம்ää ட்விட்டர் போன்ற செங்குத்தாக ஸ்க்ரோலிங் செய்யப்படும் பயன்பாடுகளை இந்த டிவியின் வாயிலாக மிகவும் எளிதாக பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த டிவி மாடல் சமூக ஊடக தளங்களுக்கு மிகவும் நட்புறவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. காரணம் ஸ்மார்ட்போன் திரைகளின் செங்குத்து நோக்குநிலையைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற செங்குத்தாக ஸ்க்ரோலிங் செய்யப்படும் பயன்பாடுகளை இந்த டிவியின் வாயிலாக மிகவும் எளிதாக பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவை பின்னுக்குத் தள்ளிய ஏர்டெல்.. டிராய் வெளியிட்ட வயர்லெஸ் சந்தாதாரர் எண்ணிக்கை..ஜியோவை பின்னுக்குத் தள்ளிய ஏர்டெல்.. டிராய் வெளியிட்ட வயர்லெஸ் சந்தாதாரர் எண்ணிக்கை..

ஸ்மார்ட்போன் வீடியோ -

அதேபோல் பெரும்பாலான ஸ்மார்ட்போன் வீடியோ - போர்ட்ரெயிட் நோக்குநிலையில் தான் பதிவு செய்யப்படுகிறது. அதை டிவிகளின் வழியாக பாரக்கும் போது வீடியோவைச் சுற்றியுள்ள கருப்பு பார்களே அதிகமாக தெரியும். ஆனால் இந்த ஸ்மார்ட்டிவியில் அதுபோன்ற சிக்கலே இல்லை.

உள்ளிட்டவை உதவுகின்

இந்த சாதனத்தில் 4.1 சேனல் முன் பக்கமாக ஷூட் செய்யும் ஆடியோ சிஸ்டம் மூலம் 60W சவுண்ட் அவுட்புட்டை வழங்குகிறது. பின்பு சாம்சங் செரோ டிவி Tizen அடிப்படையிலான இயக்க முறைமை மூலம் இயங்குகிறது. மேலும் சாம்சங் செரோ டிவியில் ஆப்பிள்ஏர்ப்ளே 2, பிக்ஸ்பி மற்றும் அமேசான் அலெக்சா உள்ளிட்டவை உதவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Sero Rotating 4K QLED TV Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X