உலகின் முதல் சாம்சங் QLED 8K ஸ்மார்ட் டிவி Q900R(85'இன்ச்) வெறும் 15,000 டாலர்.!
சாம்சங் நிறுவனம் அறிவித்த அறிவிப்பின் படி தனது புது QLED 8K ஸ்மார்ட் டிவி, 85' இன்ச் இன் விற்பனைக்கான முன்பதிவு துவங்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் சாம்சங் QLED 8K ஸ்மார்ட் டிவி 85' இன்ச் Q900R மாடல்லை, உலக சந்தைக்கு விரைவில் அறிமுகம் செய்யுமென்று நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தது. அதன் படி தற்பொழுது சாம்சங் நிறுவனம் தனது 85' இன்ச் 8K ஸ்மார்ட் டிவி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறது.

சாம்சங் நிறுவனம் அறிவித்த அறிவிப்பின் படி தனது புது QLED 8K ஸ்மார்ட் டிவி, 85' இன்ச் இன் விற்பனைக்கான முன்பதிவு துவங்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய உலகின் முதல் QLED 8K ஸ்மார்ட் டிவி, 85' இன்ச் இன் விலை 15,000 டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி இந்த புதிய சாம்சங் 8K ஸ்மார்ட் டிவி, 85' இன்ச் இன் விலை ரூ.11,04,825 என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் QLED 8K ஸ்மார்ட் டிவி Q900R
இதனைத் தொடர்ந்து விரைவில் சாம்சங் QLED 8K ஸ்மார்ட் டிவி 65' இன்ச், 75' இன்ச் மற்றும் 82 இன்ச் Q900R டிவிகளின் விற்பனை வெகு விரைவில் முன்பதிவுடன் துவங்குமென்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சாம்சங் 85' இன்ச் 8K ஸ்மார்ட் டிவி அக்டோபர் 28 ஆம் தேதி ஷிப்பிங்கிற்கு தயாராக இருக்குமென்று சாம்சங் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த 8K சேவை
மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடலில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இருப்பதினால், 8K சேவை மிக மிகத் தெளிவாகவும், கூர்மையாகவும், மிகத் துல்லியமாகவும் ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்தி பயனர்களுக்குச் சிறந்த காட்சி அனுபவத்தைத் தருகின்றது.

ஆம்பியண்ட் மோடு
கூடுதல் சிறப்பாக இதில் ஆம்பியண்ட் மோடு சேவையும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆம்பியண்ட் சேவை மூலம் உங்களின் டிவி பின்னல் இருக்கும் இடத்தை மொபைல் இல் படம் பிடித்து, அதை டிவியின் வால்பேப்பராக வைத்து, உங்களின் டிவியை ட்ரான்ஸ்பரண்டாக மாற்றி மறைய வைக்க முடியும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

வெறும் ரூ.30,618-க்கு 8K ஸ்மார்ட் டிவி
சாம்சங் நிறுவனத்தின் 4K ஸ்மார்ட் டிவிகளை மிகக் குறைந்த விலையில் சுமார் 1,600 டாலர் முதல் 5,300 டாலர் வரையில் விற்பனை செய்யப்படுமென்ற அறிவிப்பை சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. சாம்சங் 8K டிவியின் விலை அதிகமா இருப்பதினால் சாம்சங் நிறுவனம் மாதாந்திர தவணை திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது, இதன்படி மாதம் 415 டாலர், ஆத்தாவது இந்திய மதிப்பில் மாதம் ரூ.30,618 மட்டும் 36 மாதத்திற்குச் செலுத்தி உங்களின் 8K ஸ்மார்ட் டிவியை வாங்கிக்கொள்ளம் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications