2025 Samsung குடியரசு தின விற்பனை.. ரூ.19,000 வரை தள்ளுபடி.. Tablet, Watch, Buds-னு எல்லாத்துக்கும் ஆபர்!
அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் வலைத்தளங்களை போலவே சாம்சங் நிறுவனமும் 2025 குடியரசு தின சிறப்பு தள்ளுபடி விற்பனையை (Samsung Republic Day Sale 2025) அறிவித்துள்ளது. இதன் கீழ் சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் - பிரீமியம் டேப்லெட்கள், ஸ்மார்ட் வாட்சுகள், இயர்பட்ஸ்கள் மீது மிகப்பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. என்னென்ன மாடல்கள் மீது எவ்வளவு டிஸ்கவுண்ட்? என்னென்ன ஆபர்? இதோ விவரங்கள்:
கேலக்ஸி டேப் எஸ்10 பிளஸ் எல்டிஇ (Galaxy Tab S10 Plus LTE): இது ரூ.1,04,999 க்கு பதிலாக ரூ.85,999 க்கு வாங்க கிடைக்கும்.
கேலக்ஸி டேப் எஸ்10 பிளஸ் வைஃபை (Galaxy Tab S10 Plus Wi-Fi): இது ரூ.90,999 க்கு பதிலாக ரூ.71,999 க்கு வாங்க கிடைக்கும்.

கேலக்ஸி எஸ்10 அல்ட்ரா வைஃபை 256ஜிபி ஆப்ஷன்: இது ரூ.1,08,999 க்கு பதிலாக ரூ.89,999 க்கு வாங்க கிடைக்கும்.
கேலக்ஸி எஸ்10 அல்ட்ரா வைஃபை 512ஜிபி ஆப்ஷன்: இது ரூ.1,19,999 க்கு பதிலாக ரூ.99,999 க்கு வாங்க கிடைக்கும்.
கேலக்ஸி எஸ்10 அல்ட்ரா எல்டிஇ 256ஜிபி ஆப்ஷன்: இது ரூ.1,22,999 க்கு பதிலாக ரூ.1.02,999 க்கு வாங்க கிடைக்கும்.
கேலக்ஸி எஸ்10 அல்ட்ரா எல்டிஇ 512ஜிபி ஆப்ஷன்: இது ரூ.1,33,999 க்கு பதிலாக ரூ.1,13,999 க்கு வாங்க கிடைக்கும்.
கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் (Galaxy Tab A9 Plus): இது ரூ.20,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும்.
கேலக்ஸி டேப் எஸ்9 எப்இ (Galaxy Tab S9 FE): இது ரூ.36,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கும்.
கேலக்ஸி டேப் எஸ்9 எப்இ பிளஸ் (Galaxy Tab S9 FE Plus) இது ரூ.46,999 க்கு பதிலாக ரூ.30,999 க்கு வாங்க கிடைக்கும்.
கேலக்ஸி டேப் வைஃபை 256ஜிபி ஆப்ஷன் (Galaxy Tab S9 Wi-Fi 256GB): இது ரூ.83,999 க்கு பதிலாக ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கும்.
கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா (Galaxy Watch Ultra): அசல் விலை ரூ.59,999. இதன் மீது ரூ.10,000 கேஷ்பேக் அல்லது அப்கிரேட் போனஸ் மற்றும் 24 மாதங்கள் நோ காஸ்ட் இஎம்ஐ கிடைக்கும்.
கேலக்ஸி வாட்ச் 7 (Galaxy Watch 7): அசல் விலை ரூ.29,999. இதன் மீது ரூ.8,000 கேஷ்பேக் அல்லது அப்கிரேட் போனஸ் மற்றும் 24 மாதங்கள் நோ காஸ்ட் இஎம்ஐ கிடைக்கும்.
கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் (Galaxy Watch 6 Classic): இதன் அசல் விலை ரூ.36,999, ஆனால் ரூ.20,999 முதல் வாங்க கிடைக்கும்.
கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ (Galaxy Buds 3 Pro): அசல் விலை ரூ.19,999. இதன் மீது ரூ.5,000 பேங்க் கேஷ்பேக் அல்லது அப்கிரேட் போனஸ் மற்றும் 24 மாதங்கள் நோ காஸ்ட் இஎம்ஐ கிடைக்கும்.
கேலக்ஸி பட்ஸ் 3 (Galaxy Buds 3): அசல் விலை ரூ.14,999. இதன் மீது ரூ.4,000 கேஷ்பேக் அல்லது அப்கிரேட் போனஸ் மற்றும் 24 மாதங்கள் நோ காஸ்ட் இஎம்ஐ கிடைக்கும்.
கேலக்ஸி பட்ஸ் எப்இ (Galaxy Buds FE): அசல் விலை ரூ.9,999. இதன் மீது ரூ.4,000 கேஷ்பேக் அல்லது அப்கிரேட் போனஸ் மற்றும் 24 மாதங்கள் நோ காஸ்ட் இஎம்ஐ கிடைக்கும்.
இந்த ஆபர் பட்டியலில் சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் ரிங் ஆன கேலக்ஸி ரிங் (Galaxy Ring) உள்ளது. ஆனால் இதன் மீது நேரடி தள்ளுபடி எதுவும் அறிவிக்கப்படவில்லை. 24 மாதங்கள் நோ காஸ்ட் இஎம்ஐ மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இது ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கிறது.
சாம்சங் டேப்லெட்டுகள், ஸ்மார்ட் வாட்சுகள், பட்ஸ் மற்றும் ஸ்மார்ட் ரிங் மீது அறிவிக்கப்பட்டுள்ள இந்த குடியரசு தின சலுகைகள் ஆனது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பது போல் தெரிகிறது. மேலும் இந்த சலுகைக்கான இறுதி தேதியை சாம்சங் குறிப்பிடவில்லை, அறிவிக்கவில்லை. ஆக பெரும்பாலும் இந்த சலுகைகள் ஸ்டாக்குகள் தீர்ந்து போகும் வரை மட்டுமே கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications








