Samsung கெத்து.. 55 to 75 இன்ச் டிஸ்பிளே.. ஏர் ஸ்லிம் டிசைன்.. சுவரில் இருப்பதே தெரியாது.. விலை என்ன?
சாம்சங் (Samsung) நிறுவனம், அதன் ஸ்மார்ட் டிவி (Smart TV) வரிசையியல் புதிதாக சாம்சங் 2024 கியூஎல்இடி 4கே டிவி சீரிஸ் (Samsung 2024 QLED 4K TV series) என்ற புதிய ஸ்மார்ட் டிவி வரிசையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி சீரிஸ் பல அற்புதமான அம்சங்களை பேக் செய்து, புது டிவி அனுபத்தை வழங்கும் வகையில் உருவாக்கியுள்ளதாக சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் விலை என்ன? இதன் அளவு எவ்வளவு? இதில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சாம்சங் 2024 கியூஎல்இடி 4கே டிவி சீரிஸ் (Samsung 2024 QLED 4K TV series) சாதனங்கள் புதிய குவாண்டம் பிராசஸர் லைட் 4கே அம்சத்துடன் வருகிறது. இது 100% கலர் மற்றும் வால்யூம் அம்சத்தை வழங்குகிறது. குறிப்பிட்டு கூறும் வகையில், இதில் குவாண்டம் டாட் (Quantum Dot) மற்றும் குவாண்டம் எச்டிஆர் (Quantum HDR), 4கே அப்ஸ்கெலிங் அம்சம் போன்ற பல அம்சங்களை வழங்குகிறது.

சாம்சங் 2024 கியூஎல்இடி 4கே டிவி சீரிஸ் (Samsung 2024 QLED 4K TV series):
இந்த ஸ்மார்ட் டிவி ஹை-ரெசொலூஷன் 4கே கண்டன்ட் தரத்தை வழங்குகிறது. இதில் கியூ-சிம்பொனி சவுண்ட் டெக்னாலஜி (Q-Symphony sound technology) போன்ற மிகவும் பிரத்தியேகமான ஸ்மார்ட் டிவி அம்சங்களும் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் டூயல் எல்இடி (Dual LED), கேமிங் அம்சத்தை சிறப்பிக்க மோஷன் எக்ஸ்சிலரேட்டர் (Motion Xcelerator) மற்றும் பண்டோன் வெலிடேஷன் (Pantone Validation) போன்ற அம்சங்களுடன் இதில் உள்ளன.
இந்த சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள் சீம்லெஸ் ஏர் ஸ்லிம் டிசைன் (seamless AirSlim design) உடன் வருகிறது. இது உங்கள் வீட்டு சுவருடன், அப்படியே ஒரு போஸ்டர் போல கச்சிதமாக பொருந்திவிடுகிறது. இந்த சாம்சங் 2024 கியூஎல்இடி 4கே டிவி சீரிஸ் (Samsung 2024 QLED 4K TV series) சோலார்செல் ரிமோட் (SolarCell Remote) உடன் வருகிறது. இது வழக்கமான டிவி ரிமோட் போன்றதல்ல.
இதை இயக்க உங்களிடம் பேட்டரி செல்கள் (Battery cell) இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. காரணம், இந்த ஸ்மார்ட் ரிமோட்டின் (Smart remote) பெயர் குறிப்பிடுவது போல, இது பேட்டரி செல்கள் எதுவும் இல்லாமல் நேரடியாக சூரிய ஒளியின் மூலம் இயங்கும் திறன் கொண்டது. அதேபோல், இதில் ஏஐ எனர்ஜி மோட் (AI Energy Mode) அம்சம் கூட உள்ளது. இது சக்தியை சேமிக்க உதவுகிறது.
சாம்சங் 2024 கியூஎல்இடி 4கே டிவி சீரிஸ் சிறப்பம்சம் (Samsung QLED 4K TVs 2024):
- இந்த டிவி 55″ இன்ச்
- 65″ இன்ச் மற்றும் 75" இன்ச் மாடலாக வருகிறது.
- இவை 3,840 x 2,160 பிக்சல் உடன் HDR ஆதரவை கொண்டுள்ளது.
- HDR10+, 4K அப்ஸ்கெலிங்
- பில்ம்மேக்கர் மோட் (Filmmaker Mode - FMM)
- மோஷன் எக்ஸ்சிலரேட்டர் (Motion Xcelerator)
- டூயல் எல்இடி (Dual LED)
- காண்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Contrast Enhancer)
- குவாண்டம் பிராசஸர் லைட் 4கே (Quantum Processor Lite 4K)
- 2CH; 20W ஸ்பீக்கர்
- சோலார் செல் ரிமோட்
- ALLM, சூப்பர் அல்ட்ரா வைட் கேம் வியூ (Super Ultra Wide Game View)
- கேம் மோஷன் பிளஸ் (Game Motion Plus)
- HGiG
- டைசன் ஸ்மார்ட் டிவி (Tizen Smart TV)
- அலெக்ஸ்சா, கூகிள் வாய்ஸ் அசிஸ்டன்ட், பிக்ஸ்பி (Alexa), (Google Assistant), (Bixby)
- ப்ளூடூத் v5.2
- வைஃபை (Wi-Fi 5, x3 HDMI with eARC/ARC)
- 2 x USB-A
- RF In
சாம்சங் 2024 கியூஎல்இடி 4கே டிவி சீரிஸ் விலை (Samsung 2024 QLED 4K TV series Price):
சாம்சங் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய Samsung QLED 4K TV 2024 ஸ்மார்ட் டிவியின் 55″ இன்ச் மாடலின் விலை ரூ. 65,990 என்றும், இதன் 65″ மாடலின் விலை ரூ. 1,15,990 என்றும் கூறப்பட்டுள்ளது. 75" இன்ச் மாடலின் விலை விரைவில் குறிப்பிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications