Google Gemini AI ஆதரவு, Circle to Search அம்சம்.. Meta, Apple-ஐ ஆட்டம் காண வைக்கும் Samsung-ன் XR ஹெட்செட்!
நேரம் நெருங்க நெருங்க கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வு குறித்து பல சர்ப்ரைஸ் ஆன தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்நிகழ்வு நாளை, ஜனவரி 22 ஆம் தேதி, இந்திய நேரடி இரவு 11.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிகழ்வின் ஹைட்லட் ஆக கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை அப்படியே ஓரங்கட்டும்படியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது!
அது என்னவென்றால், சாம்சங் நிறுவனம் நாளை (ஜனவரி 22) நடக்கும் வெளியீட்டு நிக்வில், தனது முதல் எக்ஸ்டென்டட் ரியாலிட்டி (எக்ஸ்ஆர்) ஹெட்செட்டை அறிமுகப்படுத்தலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த ஹெட்செட்டை 'ப்ராஜெக்ட் மூஹன்' (Samsung Project Moohan XR Headset) என்று அழைக்கிறது. அதாவது கொரிய மொழியில் இன்ஃபினிட்டி என்று அர்த்தம்.

தென் கொரிய பப்ளிகேஷன் ஆன பிசினஸ் கொரியாவின் சமீபத்திய அறிக்கையின்படி, சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் அதன் ப்ராஜெக்ட் மூஹன் ஹெட்செட்டின் முன்மாதிரிகள் (Prototypes) அல்லது டீஸர் வீடியோக்களை காண்பிக்கும். சாம்சங்கின் இந்த எக்ஸ்ஆர் ஹெட்செட் ஆனது, ஆப்பிள் நிறுவனத்தின் விஷன் ப்ரோவிற்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இந்த ஹெட்செட்டின் சரியான அம்சங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக்கப்படவில்லை என்றாலும் கூட, இது மல்டிமாடல் இன்புட், ஸ்டேட்-ஆப்-தி-ஆர்ட் டிஸ்பிளே மற்றும் பாஸ்த்ரூ திறன்கள் உட்பட சில முக்கிய அம்சங்களை டீஸ் செய்துள்ளது. கூகுள் மற்றும் குவால்காம் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹெட்செட் அந்த எக்ஸ்ஆர் டிவைஸ்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டம் (ஆண்ட்ராய்டு எக்ஸ்ஆர்) கொண்டு இயங்கும் முதல் டிவைஸ் ஆக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த எக்ஸ்ஆர் ஹெட்செட் ஆப்பிள் விஷன் ப்ரோ மற்றும் மெட்டா குவெஸ்ட் 3 ஆகிய ஹெட்செட்களில் கிடைக்கும் முக்கிய அம்சமான பாஸ்த்ரூ ஆதரவுடன் வரும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது. கூடவே இது கூகுளின் ஜெமினி ஏஐ அசிஸ்டென்ட்டிற்கான ஆதரவை வழங்கும் என்றும், இதில் மிகவும் பிரபலமான சர்க்கிள் டூ சேர்ச் அம்சம் இடப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அறியாதோர்களுக்கு எக்ஸ்ஆர் என்பது மூன்று விஷுவல் தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாகும். அதாவது ஆக்மென்ட் ரியாலிட்டி (ஏஆர்), விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) மற்றும் மிச்ஸடு ரியாலிட்டி (எம்ஆர்) ஆகிய 3 தொழில்நுட்பங்களை ஒண்றிணைக்கிர்து. சாம்சங் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டில் விஆர் ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியிருந்தாலும், ப்ராஜெக்ட் மூஹன் ஹெட்செட்டின் வெளியீடு எக்ஸ்ஆர் ஹெட்செட் சந்தையில் ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
சாம்சங்கின் எக்ஸ்டென்டட் ரியாலிட்டி (எக்ஸ்ஆர்) ஹெட்செட்டின் அறிமுகம் ஒருபக்கம் இருக்க, கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் இன்னொரு சுவாரசியமான தயாரிப்பின் அறிவிப்பும் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் மாடல் ஆகும். சில தகவல்கள் இது மே 2025 இல் அறிமுகமாகும் என்கின்றன. சில தகவல்கள் இது கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்படும் என்கின்றன.
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வு குறித்த மற்ற லேட்டஸ்ட் அப்டேட்களை பொறுத்தவரை, தருண் வாட்ஸ் (@tarunvats33) வழியாக கேலக்ஸி எஸ்25 சீரீஸின் அனைத்து மாடல்களின் இந்திய விலை விவரங்களும் லீக் செய்யப்பட்டுள்ளன. அதன்படி கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெரனல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.84,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
அடுத்ததாக உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெரனல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1.04,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். கடைசியாக உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெரனல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1.34,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








