Samsung Odyssey Ark கேமிங் மானிட்டர் அறிமுகம்.! விலையை கேட்டா தலை சுற்றிடும் போல.!

|

சாம்சங் (Samsung) நிறுவனம் இந்தியாவில் சாம்சங் ஒடிஸி ஆர்க் (Samsung Odyssey Ark) எனப்படும் புதிய கேமிங் மானிட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாம்சங் மானிட்டர் வளைந்த பேனல் உடன் வருகிறது.

அதாவது, கர்வுட் டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது. இந்த புதிய சாம்சங் கேமிங் மானிட்டர் 55' இன்ச் அளவில் மட்டுமே இப்போது இந்தியாவில் கிடைக்கிறது. இது 60W டால்பி அட்மோஸ் ஆதரவுடன் குவாட்-ஸ்பீக்கர் அமைப்புடன் வருகிறது.

Samsung அறிமுகம் செய்த Odyssey Ark 55 இன்ச் கர்வுட் கேமிங் மானிட்டர்

Samsung அறிமுகம் செய்த Odyssey Ark 55 இன்ச் கர்வுட் கேமிங் மானிட்டர்

இந்த மானிட்டர் வரிசை முதலில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் CES நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது.

பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் அறிமுகமானது. இப்போது, இறுதியாக இந்த கேமிங் மானிட்டர் ஒரு வழியாக இந்தியச் சந்தையை அடைந்துள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Odyssey Ark 55 இன்ச் கர்வுட் மானிட்டர் விலை, இத்துடன் இப்போது கிடைக்கும் இலவசங்கள் மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

Samsung Odyssey Ark மானிட்டர் சிறப்பம்சங்கள்

Samsung Odyssey Ark மானிட்டர் சிறப்பம்சங்கள்

புதிய Samsung Odyssey Ark மானிட்டர் ஆனது 4K தரத்தில் வருகிறது. இது 2,160 x 3,840 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக இருக்கிறது.

இது 165Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 16:9 விகிதத்துடன் கூடிய 55' இன்ச் 1000R கர்வுட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.இது சாம்சங்கின் நியூரல் குவாண்டம் ப்ராசசர் அல்ட்ரா மற்றும் குவாண்டம் மினி எல்இடி பேக்லைட் உடன் லோக்கல் டிம்மிங் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த 55 இன்ச் பேனல் 1ms (GTG) ரெஸ்பான்ஸ் நேரத்தைக் கொண்டுள்ளது.

ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!

55

55" இன்ச் டிஸ்பிளேவை 27" இஞ்ச ஆக மாற்றலாமா?

இந்த Samsung Odyssey Ark மானிட்டர் 1,000,000:1 என்ற மாறுபட்ட விகிதத்தைக் கொண்டுள்ளது. இது AMD FreeSync பிரீமியம் ப்ரோவுக்கான ஆதரவுடன் வருகிறது.

இந்த அம்சத்தின் உதவியுடன் டிஸ்பிளேயில் நிறையச் செயல்கள் நடக்கும் போது டியரிங், கோஸ்ட் விளைவுகளைக் குறைக்க மற்றும் பயனர்களுக்கு வெவ்வேறு ரெப்ரெஷ் ரேட் வீத விருப்பத்தை வழங்குகிறது.

Samsung Odyssey Ark டயல் கன்ட்ரோலரைப் பயன்படுத்தி பயனர்கள் திரை அளவை 27 இன்ச் டிஸ்ப்ளேவுக்கு மாற்றலாம்.

Cockpit Mode என்றால் என்ன? இது என்ன செய்யும்?

Cockpit Mode என்றால் என்ன? இது என்ன செய்யும்?

அதேபோல், டிஸ்பிளே விகிதத்தை 16:9, 21:9 மற்றும் 32:9 -க்கு இடையில் சரிசெய்ய அனுமதிக்கும் என்று சாம்சங் கூறுகிறது.

இந்த டிஸ்பிளேவில் காக்பிட் மோட் (Cockpit Mode) என்ற பயன்முறையும் உள்ளது. இதைப் பயன்படுத்தி பயனர்கள் HAS உடன் டிஸ்பிளேவை போர்ட்ரெய்ட் நிலைக்கு சுழற்றலாம். அதேபோல், மானிட்டரின் டிஸ்ப்ளேவை சாய்த்து, பிவோட் செய்ய முடியும்.

அதே சமயம் மல்டி வியூ செயல்பாடு பயனர்களை ஒரே நேரத்தில் நான்கு திரைகள் வரை காட்ட அனுமதிக்கிறது.

இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!

Samsung Odyssey Ark டிஸ்பிளேவின் விலை என்ன?

Samsung Odyssey Ark டிஸ்பிளேவின் விலை என்ன?

இந்த Samsung Odyssey Ark டிஸ்பிளேவின் விலை பற்றி பேசுகையில், இது ரூ. 2,19,999 விலையில் வருகிறது. இது சாம்சங் ஷாப் வழியாக பிளாக் வண்ண விருப்பத்தில் விற்கப்படும். வெளியீட்டுச் சலுகைகளைப் பொறுத்தவரை, நிறுவனம் அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் இந்த மானிட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 2TB போர்ட்டபிள் SSD T7 ஷீல்டு USB 3.2 SSD உடன் ரூ.10,000 உடனடி கார்ட் தள்ளுபடியை வழங்குகிறது.

அக்டோபர் 10 முதல் அக்டோபர் 31 வரை வாங்கினால் இந்த இலவசம் உங்களுடையது.!

அக்டோபர் 10 முதல் அக்டோபர் 31 வரை வாங்கினால் இந்த இலவசம் உங்களுடையது.!

அதேபோல், இந்த Samsung Odyssey Ark கர்வுட் கேமிங் மானிட்டரை அக்டோபர் 10 முதல் அக்டோபர் 31 வரை மானிட்டரை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உடனடி கார்ட் தள்ளுபடி ரூ.10,000 மற்றும் 1TB Portable SSD T7 Shield USB 3.2 சாலிட் ஸ்டேட் டிரைவ் இலவசமாகக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த மானிட்டரை 2 லட்சம் கொடுத்து வாங்க விருப்பமுள்ளவர்கள் தாராளமாக சாம்சங் ஷாப் சென்று வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Odyssey Ark Has Been Launched In India Price and Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X