Home
Gadgets

ப்பா.. வாங்குனா இப்படி ஒன்னு வாங்கனும்.. அடேங்கப்பான்னு சொல்ற விலைக்கு 6 புதிய Samsung TV-கள் அறிமுகம்!

"வாங்குறதே வாங்குறோம்.. இருக்குறதுலேயே ஒரு நல்ல சாம்சங் ஸ்மார்ட் டிவியா (Samsung Smart TV) பார்த்து வாங்கிடலாம்" என்கிற எண்ணம் உங்களிடம் இருந்தால்.. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 6 புதிய சாம்சங் டிவிகளுமே (New Samsung TVs) உங்களுக்கான தேர்வாக இருக்கலாம்.

சாம்சங் நிறுவனமானது, இந்தியாவில் வாங்க கிடைக்கும் அதன் ஓஎல்இடி (OLED) ஸ்மார்ட் டிவிகளின் வரம்பை விரிவுபடுத்துவதும் நோக்கத்தின் எஸ்95சி (S95C) மற்றும் எஸ்90சி (S90C) ஆகிய இரண்டு சீரீஸின் கீழ், 3 வெவ்வேறு ஸ்க்ரீன் அளவுகளில் (Screen Size) மொத்தம் 6 ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.

அடேங்கப்பான்னு சொல்ற விலைக்கு 6 புதிய Samsung TV-கள் அறிமுகம்!

புதிய சாம்சங் ஓஎல்இடி டிவிகளில் அப்படி என்ன ஸ்பெஷல்? சாம்சங்கின் அனைத்து புதிய ஓஎல்இடி டிவிகளுமே மேம்படுத்தப்பட்ட விவரங்கள் (Improved details) மற்றும் ஸ்க்ரீன் ப்ரைட்னஸை (Screen brightness) வழங்குவதற்காக நியூரல் குவாண்டம் ப்ராசஸர் 4கே-வை (Neural Quantum Processor 4K) கொண்டுள்ளன.

மேலும் இந்த டிவிகள் பான்டோன் (Pantone) மூலம் வேலிடேட் செய்யப்பட்டுள்ளது. இது 2,030 பான்டோன வண்ணங்களின் துல்லியமான வெளிப்பாட்டை உறுதிசெய்கிறது மற்றும் பரந்த அளவிலான யதார்த்தமான மற்றும் துடிப்பான வண்ணங்களுக்கான 110 ஸ்கின் கலர் ஷேட்களையும் (Skin tone shades) கொண்டுள்ளது.

இந்த டிவிகளில் உள்ள ஐகம்ஃபோர்ட் (Eye Comfort) பயன்முறையானது இனிமையான பார்வை அனுபவத்திற்காக, டிவியை சுற்றியுள்ள ஒளியின் அடிப்படையில் ப்ரைட்னஸ் அளவை சரிசெய்கிறது. மேலும் இதன் வயர்லெஸ் டால்பி அட்மோஸ் மற்றும் ஓடிஎஸ்+ தொழில்நுட்பமானது ஸ்க்ரீனில் உள்ள பொருட்களைப் பின்தொடர்ந்து ஒலியை வழங்குகின்றன.

மேலும் இதிலுள்ள க்யூ சிம்பொனி தொழில்நுட்பம் ஆனது டிவி மற்றும் சவுண்ட்பார் ஸ்பீக்கர்களை ஒன்றாக வேலை செய்ய அனுமதிக்கிறது. வடிவமைப்பை பொறுத்தவரை, இன்ஃபினிட்டி ஒன் டிசைன், எட்ஜ்-டு-எட்ஜ் பிக்சர்ஸ் மற்றும் தடையற்ற பார்வை அனுபவத்திற்காக அனைத்து புதிய சாம்சங் டிவிகளுமே நேர்த்தியான பெசல்களை கொண்டுள்ளன.

இந்த டிவிகளுடன் வரும் சோலார்செல் ரிமோட் ஆனது பேட்டரிகள் இல்லாமலேயே வேலை செய்யும், இது வீட்டில் உள்ள விளக்குகள் அல்லது மின்காந்த அலைகள் மூலம் சார்ஜ் ஆகிக்கொள்ளும். மேலும் இந்த இந்த டிவிகள் மோஷன் எக்ஸ்சலரேட்டர் டர்போ ப்ரோ (Motion Xcelerator Turbo Pro) தொழில்நுட்பம், 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது.

கேமிங் அம்சங்களை பொறுத்தவரை, கேம் பார் மற்றும் விர்ச்சுவல் ஏம் பாயிண்ட் போன்றவைகளை கொண்டுள்ளது. கடைசியாக இந்த டிவிகள் கூகுள் மீட் (Google Meet) மூலம் டிவி ஸ்க்ரீனில் வீடியோ கால் மற்றும் கான்ஃபிரென்ஸ்களை இயக்கும் ஸ்லிம்ஃபிட் கேம் (SlimFit Cam) ஆதரிக்கிறது.

விலை விவரங்கள்: எஸ்95சி மற்றும் எஸ்90சி ஆகிய இரண்டு சீரீஸின் கீழும் 77-இன்ச், 65-இன்ச் மற்றும் 55-இன்ச் ஆகிய மூன்று அளவுகளில் மொத்தம் 6 டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, இவற்றின் ஆரம்ப விலை ரூ.1,69,990 முதல் தொடங்குகிறது. அனைத்து மாடல்களுமே இந்தியா முழுவதும் உள்ள முன்னணி ரீடெயில் கடைகளின் வழியாக வாங்க கிடைக்கிறது.

ஒருவேளை நீங்கள் ஆன்லைன் வழியாக வாங்க விரும்பினால் சாம்சங்.காம் வழியாக வாங்கலாம். அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, முன்னணி வங்கி கிரெடிட் கார்டுகளில் 20% வரை கேஷ்பேக் கிடைக்கும் மற்றும் ரூ. 2,990 முதல் தொடங்கும் ஈஸி இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கும். கடைசியாக சாம்சங்கின் அனைத்து ஓஎல்இடி டிவிகளுமே 2 வருட உத்தரவாதத்துடன் வருகின்றன.

Best Mobiles in India

English summary
Samsung New 55 inch 65 inch and 77 inch OLED Smart TV Models Launched in India under S95C S90C series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X