வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ! 2 வாங்கலாம் போலயே!

|

ஸ்மார்ட் டிவி (Smart TV) மட்டும் இல்லை! ஸ்மார்ட்போன் என்றாலும் சரி.. லேப்டாப் என்றாலும் சரி..

அவ்வளவு ஏன்? இயர்பட்ஸ், ஸ்மார்ட் வாட்ச், டேப்லெட், வாஷிங் மெஷின், ஏசி, பிரிட்ஜ், மைக்ரோ ஓவன் என்று எதுவாக இருந்தாலும் சரி..

Samsung-க்கு இருக்கும் மவுசே தனி!

Samsung-க்கு இருக்கும் மவுசே தனி!

சாம்சங் (Samsung) என்கிற பிராண்டின் மீது இருக்கும் இந்திய மக்களின் நம்பகத்தன்மைக்கு இதுநாள் வரை எந்த குறையும் இல்லை!

மார்க்கெட்டில் எத்தனையோ புதிய பிராண்டுகள் வந்து கொண்டே இருந்தாலும் கூட, சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இருக்கும் மவுசே தனி!

விலை குறைக்கலாம்! அதுக்காக இப்படியா? Amazon ஆபர் மழையில் 4 Samsung போன்கள்!விலை குறைக்கலாம்! அதுக்காக இப்படியா? Amazon ஆபர் மழையில் 4 Samsung போன்கள்!

Samsung-இன் புதிய ஸ்மார்ட் டிவி!

Samsung-இன் புதிய ஸ்மார்ட் டிவி!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகும் ஸ்மார்ட் டிவிகள் மீதான "மோகத்தை" மிகவும் சரியாக பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனங்களில் சாம்சங்கும் ஒன்றாகும்.

அதனொரு பகுதியாக தென் கொரியாவை அடிப்படையாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், இந்தியாவில் உள்ள பட்ஜெட் வாசிகளை குறிவைத்து மிகவும் மலிவான ஒரு ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது.

வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ!

வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ!

சாம்சங்கின் இந்த புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவி, ஒரு 32-இன்ச் எச்டி டிவி (32-inch HD TV) மாடல் ஆகும்.

மூன்று பக்கங்களிலும் பெசல்-லெஸ் வடிவமைப்பிலான டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த டிவியின் இந்திய விலை நிர்ணயம் வெறும் ரூ.12,499 மட்டுமே ஆகும்!

மொத்தம் 7 போன்கள்! இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஆபர் அறிவிக்கப்பட்டதே இல்ல!மொத்தம் 7 போன்கள்! இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஆபர் அறிவிக்கப்பட்டதே இல்ல!

55 சேனல்களை FREE ஆக வழங்கும்!

55 சேனல்களை FREE ஆக வழங்கும்!

இந்த டிவி மேம்படுத்தப்பட்ட சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) சேவையுடனும் வருகிறது. அறியாதோர்களுக்கு, Samsung TV Plus சேவையானது, 55 சர்வதேச மற்றும் உள்ளூர் (லைவ்) சேனல்களுக்கான இலவச அணுகலை வழங்கும்.

மேலும் இந்த 32-இன்ச் சாம்சங் டிவி ஆனது டைசன் இயங்குதளம் (Tizen OS) மூலம் இயங்குகிறது. இந்த டிவி ஹை டைனமிக் ரேன்ஞ்சையும், சிறந்த பிக்சர் குவாலிட்டியையும் வழங்குவதாகவும் சாம்சங் நிறுவனம் கூறுகிறது.

அல்ட்ரா க்ளீன் வியூ!

அல்ட்ரா க்ளீன் வியூ!

சாம்சங்கின் இந்த லேட்டஸ்ட் டிவியானது, இருண்ட மற்றும் பிரகாசமான காட்சிகளின் போது சிறந்த பிக்சர் குவாலிட்டியை (Picture Quality) வழங்கும் PurColor தொழில்நுட்பங்களுடன் வருகிறது.

மேலும் இந்த டிவி அல்ட்ரா க்ளீன் வியூ (Ultra Clean View) தொழில்நுட்பத்துடனும் வருகிறது, நிறுவனத்தின் கூற்றுப்படி, இது ஒரிஜினல் கன்டென்ட்டை பகுப்பாய்வு செய்து, நாம் காணும் காட்சிகளை மேம்படுத்துமாம்!

திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!திடீர்னு 57% ஆபர்! இந்த 4 Samsung போன்களுக்கும்.. இனி செம்ம டிமாண்ட்!

3டி சரவுண்ட் சவுண்ட் எஃபெக்ட்

3டி சரவுண்ட் சவுண்ட் எஃபெக்ட்

இந்த 32 இன்ச் சாம்சங் டிவி ஆனது டால்பி டிஜிட்டல் பிளஸ் உடன் வருகிறது, இது 3டி சரவுண்ட் சவுண்ட் எஃபெக்ட்களை வழங்குகிறது.

இதன் டிஸ்பிளேவை பொறுத்தவரை, இந்த Samsung TV ஆனது 50Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 1366x768 ஸ்க்ரீன் ரெசல்யூஷனை பேக் செய்யும் HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

என்னென்ன கனெக்டிவிட்டி விருப்பங்களை வழங்கும்?

என்னென்ன கனெக்டிவிட்டி விருப்பங்களை வழங்கும்?

இந்த சாம்சங் டிவி 2 HDMI போர்ட்கள் மற்றும் 1 USB போர்ட் உடன் வருகிறது.

மேலும் டால்பி டிஜிட்டல் பிளஸ் சப்போர்ட் உடனான 20W ஸ்பீக்கர் யூனிட்டையும் கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இந்த டிவி சாம்சங் டிவி பிளஸ் உடனாக Tizen OS-இன் கீழ் இயங்குகிறது.

உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?

இந்த டிவி.. எதன் வழியாக வாங்க கிடைக்கும்?

இந்த டிவி.. எதன் வழியாக வாங்க கிடைக்கும்?

பிசி மோட், கேம் மோட் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் ஆதரவுடன் வரும், சாம்சங் நிறுவனத்தின் இந்த 32-இன்ச் டிவி ஆனது சாம்சங் நிறுவனத்தின் இ-ஸ்டோர் வழியாக ரூ.15,490 க்கு வாங்க கிடைக்கிறது.

ஆனால் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது

Best Mobiles in India

English summary
Samsung New 32 inch TV with HD Display Launched in India For Rs 12499

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X