ஜீரோ EMI.. 5% கேஷ்பேக் உடன் சூறாவளி சேல்.. Samsung-ன் புத்தம் புது 43-இன்ச் ஸ்மார்ட் TV.. எந்த மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனம் தனது 2026 மினி எல்இடி டிவி சீரீஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இது பிரீமியம் ஸ்மார்ட் டிவி பிரிவில் - புதிய விஷன் ஏஐ (Vision AI) தொழில்நுட்ப அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட பிக்சர் ப்ராஸஸிங் மற்றும் பிக் ஸ்க்ரீன் விருப்பங்களை கொண்டு வருகிறது.
விலை: சாம்சங் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் சீரீஸின் கீழ் 43-இன்ச் முதல் 100-இன்ச் வரையிலான மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் 43-இன்ச் மாடலின் விலை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் 43 இன்ச் 2026 மினி எல்இடி டிவி மாடலின் விலை ரூ.42,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விற்பனை: சாம்சங் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் மினி எல்இடி டிவிகள் ரீடெயில் ஸ்டோர்கள், சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிளிப்கார்ட் மூலம் வாங்க கிடைக்கிறது. அறிமுக சலுகைகளாக 5 சதவீதம் வரை கேஷ்பேக் மற்றும் 30 மாதங்கள் வரை ஜீரோ டவுன்பேமண்ட் இஎம்ஐ விருப்பங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரகாசமான டிஸ்பிளேக்கள், மேம்பட்ட கான்ட்ராஸ்ட் மற்றும் ஸ்மார்ட்டான பொழுதுபோக்கு அம்சங்களை தேடும் பயனர்கள் இந்த டிவியை கருத்தில் கொள்ளலாம்.
அம்சங்கள்: இந்த புதிய மினி எல்இடி டிவிகள், சாம்சங்கின் மெட்டல்ஸ்ட்ரீம் டிசைனுடன் (MetalStream Design) வருகின்றன. இது ஸ்லிம் ஆன மெட்டல் பாடி மற்றும் குறுகிய பெசல்களை பயன்படுத்தி, மிகவும் ஆழமான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது. வழக்கமான எல்இடி டிவிகளுடன் ஒப்பிடும்போது, மினி எல்இடி பேக்லைட்டிங் சிஸ்டம் மிகச்சிறிய எல்இடிகளை பயன்படுத்துகிறது என்று சாம்சங் நிறுவனம் கூறுகிறது.
இது ஆழமான பிளாக் கலர்கள், சிறந்த கான்ட்ராஸ்ட் மற்றும் மேம்பட்ட எச்டிஆர் (HDR) செயல்திறனுக்காக மிகவும் துல்லியமான ஒளி கட்டுப்பாட்டை அனுமதிக்கிறது. இந்த சீரீஸ், மிகவும் துல்லியமான கலர் ரீப்ரொடெக்ஷன் மற்றும் பரந்த கலர் கேமட்டிற்கு ப்யூர் ஸ்பெக்ட்ரம் கலர் (Pure Spectrum Color) தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது.
திரைப்படங்கள், விளையாட்டு மற்றும் ஸ்ட்ரீமிங் கன்டென்ட்களில் ப்ரைட்னஸ், கான்ட்ராஸ்ட் மற்றும் ஒட்டுமொத்த படத் தரத்தை மேம்படுத்துவதற்காக கலர் பூஸ்டர் (Color Booster) மற்றும் மினி எல்இடி எச்டிஆர் (Mini LED HDR) போன்ற கூடுதல் மேம்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. கேமர்களுக்காக, இந்த டிவிகள் மோஷன் எக்ஸலரேட்டர் 144ஹெர்ட்ஸ்-ஐ ஆதரிக்கின்றன.
இது வேகமான கேம்ப்ளே மற்றும் விளையாட்டு போட்டிகளை காணும்போது ஏற்படும் மங்கலை குறைத்து, மென்மையான அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த சீரீஸ்க்கு சாம்சங்கின் NQ4 AI ஜென்2 பிராசஸர் ஆற்றல் அளிக்கிறது. இது ரியல்டைம் பிக்சர் ஆப்டிமைசேஷன் (Real-time picture optimization), ஏஐ அப்ஸ்கேலிங் (AI upscaling) மாற்று ஆடியோ ட்யூனிங்கிற்காக (audio tuning) வடிவமைக்கப்பட்ட 20-நியூரல்-நெட்வொர்க் கட்டமைப்பை கொண்டுள்ளது.
சாம்சங் ஒரு ஏஐ சவுண்ட் கண்ட்ரோலரையும் சேர்த்துள்ளது. இது பார்க்கப்படும் கன்டென்ட்டின் வகை மற்றும் பயனர் விருப்பங்களின் அடிப்படையில் ஒலி அமைப்புகளை சரிசெய்கிறது. இந்த டிவிகள் ஒன் யுஐ டைசன் (One UI Tizen) இயங்குதளத்தில் இயங்குகின்றன. மேலும் சாம்சங் ஏழு ஆண்டுகள் வரை ஓஎஸ் அப்டேட்களை வழங்குவதாக உறுதியளிக்கிறது.
கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான ஸ்மார்ட் அம்சங்களை பொறுத்தவரை, 14 மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட இலவச சேனல்களுக்கான அணுகலை வழங்கும் சாம்சங் டிவி பிளஸ், ஸ்மார்ட் திங்ஸ் ஒருங்கிணைப்பு, சாம்சங் நாக்ஸ் செக்யூரிட்டி, ஆப்பிள் ஏர்பிளே, அலெக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஆதரவு ஆகியவைகள் அடங்கும்.


Click it and Unblock the Notifications