Home
Gadgets

யாரு சாமி அவன்.. பாக்கத்தான் போட்டோ ஃபிரேம்.. ஆனால், 6 ஸ்பீக்கர்கள்.. டால்பி அட்மோஸ்.. வயர்லெஸ் கனெக்டிவிட்டி!

போட்டோ ஃபிரேம் டிசைனில் 120W ஆடியோ அவுட்புட், டால்பி அட்மோஸ், வயர்லெஸ் மியூசிக் ஸ்ட்ரீமிங், அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட், ப்ளூடூத், வை-பை கனெக்டிவிட்டி போன்ற மிரளவிடும் பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஒன் ரிமோட் மற்றும் ஆப் கன்ட்ரோல் சப்போர்ட் உடன் சாம்சங் மியூசிக் ஃபிரேம் (Samsung Music Frame) சவுண்ட்பார் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. 6 ஸ்பீக்கர்கள், டால்பி டிஜிட்டல் பிளஸ் போன்ற பக்கா பிரீமியமாக வந்திருக்கும் இந்த சாம்சங் மியூசிக் ஃபிரேம் மாடலில் முழு விவரங்கள் இதோ.

சாம்சங் மியூசிக் ஃபிரேம் அம்சங்கள் (Samsung Music Frame Specifications): இந்த மியூசிக் ஃபிரேம் கஸ்டமைசபிள் டிசைன் (Customizable Design) கொண்டிருக்கிறது. கலர் பெசல் (Color Bezel) மற்றும் ஆர்ட் பேனல் (Art Panel) வருகிறது. வால்-மவுண்ட் மற்றும் டேபிள் டாப் இன்ஸ்டாலேஷன் செய்துகொள்ளலாம். ஆகவே, புதுவித மியூசிக் சிஸ்டமாக இருக்கும்.

யாரு சாமி அவன்.. பாக்கத்தான் போட்டோ ஃபிரேம்.. ஆனால், 6 ஸ்பீக்கர்கள்!

இந்த மியூசிக் ஃபிரேம் மூலம் 120W ஆடியோ அவுட்புட் கிடைக்கும். டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட 6 ஸ்பீக்கர்கள் வருகின்றன. சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) அவுட்புட் வருகிறது. ஆடியோ பீச்சர்களை பொறுத்தவரையில், டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus), அட்மோஸ் மியூசிக் (ATMOS Music) வருகிறது.

மேலும், வாய்ஸ் என்ஹான்ஸ் மோட் (Voice Enhance Mode), நைட் மோட் (Night Mode), ஸ்பேஸ்பிட் சவுண்ட் (SpaceFit Sound), ஆக்டிவ் வாய்ஸ் ஆம்ப்ளிபயர் (Active Voice Amplifier) வருகின்றன. மியூசிஸ் சிஸ்டம் போலவே அடாப்டிவ் (Adaptive), மியூசிக் (Music), ஸ்டான்டர்ட் (Standard) போன்ற சவுண்ட் மோட்கள் (Sound Modes) வருகின்றன.

சாம்சங் சவுண்ட் பார்களில் வரும் கியூ-சிம்பொனி (Q-Symphony) சப்போர்ட் வருகிறது. இதுவொரு வைடு ஸ்வீட் ஸ்பாட் (Wide Sweet Spot) ஆடியோ அவுட்புட் மாடலாகும். ஆகவே, சரவுண்ட் அனுபவம் பட்டையை கிளப்பும்படி இருக்கும். இந்த சாம்சங் மியூசிக் ஃபிரேம் மாடலில் பிரீமியம் கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன.

யாரு சாமி அவன்.. பாக்கத்தான் போட்டோ ஃபிரேம்.. ஆனால், 6 ஸ்பீக்கர்கள்!

எக்ஸ்1 ஆப்டிகல் இன் (X1 Optical In), ப்ளூடூத் (Bluetooth), வை-பை (Wi-Fi) மற்றும் ஒன் ரிமோட் கன்ட்ரோல் (One Remote Control) வருகிறது. ஆகவே, வயர்லெஸ் ஆடியோவில் புதுவித அனுபவம் கிடைக்கும். இந்த சாம்சங் மியூசிக் ஃபிரேம் மாடலில் பட்டையை கிளப்பும் ஸ்மார்ட் பீச்சராக ஸ்மார்ட்திங்ஸ் ஆப் (SmartThings App) சப்போர்ட் வருகிறது.

ஆகவே, கியூ-சிம்பொனி, டேப் சவுண்ட் (Tap Sound), குரோம்காஸ்ட் (Chromecast), வயர்லெஸ் டால்பி அட்மோஸ் (Wireless Dolby ATMOS) போன்ற பல பீச்சர்களை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், வயர்லெஸ் மியூசிக் ஸ்ட்ரீமிங் (Wireless Music Streaming), ஏர்பிளே 2 (AirPlay 2), ஸ்பாட்டிஃபை கனெக்ட் (Spotify Connect) மற்றும் ரூன் டெஸ்டட் (Roon Tested) வருகிறது.

இந்த சாம்சங் மியூசிக் ஃபிரேம் மாடலில் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), அலெக்சா பில்ட்-இன் (Alexa Built-In), பிக்ஸ்பை (Bixby) ஆகிய வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் வருகிறது. ஆகவே, வாய்ஸ் மூலம் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது.

பிளே, பாஸ், டிராக் ஸ்கிப்பிங் மற்றும் வால்யூம் அட்ஜஸ்ட்மென்ட் வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் செய்து கொள்ளலாம். இவ்வளவு பிரீமியம் பீச்சர்களை கொண்ட இந்த சாம்சங் மியூசிக் ஃபிரேம் மாடலின் விலை ரூ.29,990ஆக இருக்கிறது. ஆனால், அறிமுக சலுகையில் வெறும் ரூ.23,990 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Music Frame With Dolby Atmos Soundbar Launched Sale From Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X