மார்க்கெட்டை கலக்கும் புது Samsung டிவி.. டால்பி அட்மாஸ்.. டச் ஸ்கிரீன் பேனல்.. எந்த மாடல்? என்ன விலை?
சாம்சங் நிறுவனம் தி மூவிங்ஸ்டைல் போர்ட்டபிள் ஸ்மார்ட் டிவியை (Samsung Movingstyle Portable Smart TV) அறிமுகம் செய்துள்ளது. அனைத்து இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய இந்த ஸ்மார்ட் டிவி ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சாம்சங் தி மூவிங்ஸ்டைல் போர்ட்டபிள் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Samsung Movingstyle Portable Smart TV Specifications): 27-இன்ச் QHD டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் டிவி. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2560 x 1440 பிக்சல்ஸ், 1,000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), எச்டிஆர்10 பிளஸ் அடாப்டிவ், மோஷன் எக்ஸ்செலரேட்டர் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. அதுவும் இது டச் ஸ்கிரீன் பேனல் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான NQ4 AI Gen2 பிராசஸர் உடன் இந்த சாம்சங் தி மூவிங்ஸ்டைல் போர்ட்டபிள் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டிவியில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த டிவியில் இன் பில்ட்-பேட்டரி வசதியும் உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.
அதேபோல் இந்த டிவியை யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழியாக சார்ஜ் செய்யலாம். பின்பு இந்த டிவியின் டிஸ்பிளே பிரைட்னஸ்-ஐ தானாகச் சரிசெய்ய இதில் இன்-பில்ட் லைட் சென்சார் உள்ளது. இது ஆட்டோ பவர் ஆஃப்-ஐயும் ஆதரிக்கிறது. மேலும் இந்த டிவி ஒரு ஸ்டாண்டுடன் வருகிறது. அதுவும் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
டிசைன் ஓஎஸ் (Tizen OS) மூலம் சாம்சங் தி மூவிங்ஸ்டைல் போர்ட்டபிள் ஸ்மார்ட் டிவி இயங்குகிறது. ஆகவே நெட்பிளிக்ஸ் (Netflix), டிஸ்னி+, யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். பின்பு இந்த டிவி சாம்சங் கேமிங் ஹப்பையும் ஆதரிக்கிறது, இது கன்சோல் தேவையில்லாமல் எக்ஸ்பாக்ஸ் கிளவுட் கேமிங்கை அணுக அனுமதிக்கிறது.
ஆட்டோ லோ-லேட்டன்சி மோட் (ALLM), டைனமிக் பிளாக் ஈக்யூ, கேம் பார், கேம் மோஷன் பிளஸ், மினி மேப் ஜூம் மற்றும் சூப்பர் அல்ட்ரா வைட் கேம் வியூ உள்ளிட்ட பல கேமிங் அம்சங்களும் இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவியில் உள்ளது. சாம்சங் ஆர்ட் ஸ்டோர் அணுகல், டெய்லி போர்டு விட்ஜெட்டுகள், ஜெனரேட்டிவ் AI வால்பேப்பர்கள் உள்ளிட்ட அனைத்து இந்த சாம்சங் டிவியில் கிடைக்கிறது.
இந்த புதிய சாம்சங் டிவி ஆப்பிள் ஏர்ப்ளே, கூகிள் காஸ்ட் மற்றும் அலெக்சா மற்றும் பிக்ஸ்பி போன்ற வாய்ஸ் அசிஸ்ட்ண்ட் ஆதரவுகளைக் கொண்டுள்ளது. கியூ-சிம்பொனி (Q-Symphony), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஓடிஜி லைட் உள்ளிட்ட ஆடியோ அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. பின்பு 2-சேனல் 10W ஸ்பீக்கர் செட்டப் உடன் புதிய சாம்சங் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும்.

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை 5, ஏர்பிளே 2, கூகுள் காஸ்ட், புளூடூத் 5.3 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும் இந்த டிவிக்கு ஐந்து வருடங்களுக்கு சாப்ட்வேர் செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும். இந்த புதிய சாம்சங் டிவி ஸ்டாண்டுடன் 25.7 கிலோ எடை கொண்டது மற்றும் சோலார்செல் ரிமோட் ஒன்றும் இதன் உடன் கிடைக்கும்.
சாம்சங் தி மூவிங்ஸ்டைல் போர்ட்டபிள் ஸ்மார்ட் டிவி ஆனது தற்போது இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டிவி அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டிவியின் விலை £1,199 (இந்திய மதிப்பில் ரூ.1,42,485)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








