சாம்சங் அறிமுகப்படுத்தும் உலகத்தின் முதல் QLED 8கே ஸ்மார்ட் டிவி.! விலை தான் சற்று அதிகம்.!

புதிய சாம்சங் டிவிகளில் பிக்ஸ்பி ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வசதிகளும் உள்ளது

|

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது, தற்சமயம் உலகத்தின் முதல் QLED 8கே ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக அதிநவீன மென்பொருள் மற்றும் வன்பொருள்
அமைப்புகளுடன் இந்த ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு தியேட்டர் அனுபவத்தை வீட்டில் கொடுக்கும் அம்சங்களுடன் இந்த டிவி மாடல் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஸ்கிரீன்;

ஸ்கிரீன்;

சாம்சங் இப்போது அறிமுகம் செய்துள்ள டிவி மாடல்கள் 98-இன்ச், 82-இன்ச், 75-இன்ச்,65-இன்ச் ஸ்கிரீன் அளவுகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

குவாண்டம் செயலி

குவாண்டம் செயலி

சாம்சங் நிறுவனத்தின் QLED 8கே ஸ்மார்ட் டிவி மாடல்கள் Upscaling குவாண்டம் செயலி மற்றும் குவாண்டம் எச்டிஆர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு கூகுள் பிளே ஸ்டோரில்
கிடைக்கும் பல்வேறு செயலிகளைப் பயன்படுத்த முடியும்.

ஸ்ட்ரீமிங் சேவை

ஸ்ட்ரீமிங் சேவை

இதுதவிற ஸ்ட்ரீமிங் சேவை,செட்டாப் பாக்ஸ், எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, மொபைல் மிரரிங், குவாண்டம் பிராசஸர் 8கே தரவரிசை என பல்வேறு அம்சங்களும் இந்த ஸ்மார்ட் டிவி-களில் இடம்பெற்றுள்ளது. மற்ற நிறுவனங்களின் டிவி மாடல்களை விட அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்களுக்காகக் கூகுள் மேப்ல இப்படி எல்லாம் புது அப்டேட்டா?இந்தியர்களுக்காகக் கூகுள் மேப்ல இப்படி எல்லாம் புது அப்டேட்டா?

பிக்ஸ்பி ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட்

பிக்ஸ்பி ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட்

புதிய சாம்சங் டிவிகளில் பிக்ஸ்பி ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வசதிகளும் உள்ளது, பின்பு இந்த சாதனங்களின் ரிமோட் கண்ட்ரோலரில் உள்ள ஃபார் ஃபீல் வாய்ஸ் அம்சம் சிறந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும். வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை சுலபமாக இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவி கண்டுபிடித்த சூப்பர் ஏ.ஐ.! எதுக்குன்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.!பள்ளி மாணவி கண்டுபிடித்த சூப்பர் ஏ.ஐ.! எதுக்குன்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.!

விலை:

விலை:

75-இன்ச் QLED 8கே ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.10,99,900-ஆக உள்ளது.
82-இன்ச் QLED 8கே ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.16,99,900-ஆக உள்ளது.
98-இன்ச் QLED 8கே ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.59,99,900-ஆக உள்ளது.
65-இன்ச் QLED 8கே ஸ்மார்ட் டிவி மாடலின் விலை அறிவிக்கப்படவில்லை.

உங்களை வேவு பார்க்கும் மொபைல் லோக்ஷேனை ஆப் செய்வது எப்படி?உங்களை வேவு பார்க்கும் மொபைல் லோக்ஷேனை ஆப் செய்வது எப்படி?

Best Mobiles in India

English summary
Samsung Launches World's First QLED 8K In India For Rs 59,99,990 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X