Home
Gadgets

லேப்டாப் பயன்பாடுகளுடன் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த சாம்சங்.!

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனம் தொலைக்காட்சி தயாரிப்பில் முன்னணியில் உள்ளது.

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனம் தொலைக்காட்சி தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் 32 இன்ச் ஸ்க்ரீன் முதல் 82 இன்ச் ஸ்க்ரீன் வரை 8 மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சிகளின் விலை ரூ.24,900 முதல் ரூ.,15 லட்சம் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிமுகம் தொலைக்காட்சி தயாரிப்பில் முன்னணியில் உள்ள மற்ற நிறுவனங்களான வியூ, சியாமி மற்றும் டிசிஎல் ஆகிய நிறுவனங்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது.

லேப்டாப்  பயன்பாடுகளுடன்  ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த சாம்சங்.

சாம்சங் அறிமுகம் செய்திருக்கும் இந்த தொலைக்காட்சிகள், தொலைக்காட்சியாக மட்டுமின்றி ஒரு கம்ப்யூட்டர், மியூசிக் சிஸ்டம், நேரடி ஒளிப்பரப்பு மற்றும் டாக்குமெண்ட் பகிர்தல் ஆகியவற்றுக்கும் உதவுகிறது. 'மேக் இன் இந்தியா' கொள்கையில் உருவாகியுள்ள இந்த மாடல்கள் நல்ல விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல்கள் அனைத்து சாம்சங் ஷோரூம்களிலும் முன்னணி கடைகளிலும் தற்போது கிடைக்கின்றது

லேப்டாப்

லேப்டாப்

32 இன்ச் மாடல் எச்டி ரெசலூசனிலும், 82 இன்ச் மாடல் 4கே பேனல் போர்டிலும் கிடைக்கின்றது. இந்த தொலைக்காட்சியின் பயனாளிகள் இதனை கம்ப்யூட்டராகவும் பயன்படுத்துவதோடு தங்களுக்கு தேவையான டாக்குமெண்ட்டுகளையும் பகிர்ந்து கொள்ளலாம். மேலும் லேப்டாப்பில் இருக்கும் ஸ்க்ரீனை இந்த தொலைக்காட்சியில் பார்க்கும் வசதியும் உண்டு. எனவே வீட்டில் உட்கார்ந்து கொண்டு இந்த தொலைக்காட்சியின் உதவியால் உங்களால் அனைத்து பணிகளையும் முடித்துவிட முடியும்

மியூசிக் சிஸ்டம்

மியூசிக் சிஸ்டம்

மேலும் இந்த தொலைக்காட்சியில் வெர்ட்சுவல் மியூசிக் சிஸ்டம் ஆப்சன் இருப்பதால் இதன் மூலம் உங்களுக்கு விருப்பமான பாடல்கள், இசையை நல்ல தரத்தில் கேட்டு மகிழலாம். மேலும் இந்த தொலைக்காட்சியில் உள்ள ஸ்பீக்கர், உங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை தரும் என்பது உறுதி

டேட்டா, புகைப்படங்கள், வீடியோக்கள்

டேட்டா, புகைப்படங்கள், வீடியோக்கள்

மேலும் இந்த தொலைக்காட்சி மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ளவற்றையும் பார்க்கும் வசதி உண்டு. உங்கள் ஸ்மார்ட்போனை இந்த தொலைக்காட்சியுடன் இணைத்துவிட்டால் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டா, புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பெரிய திரையில் பார்க்கலாம்.

லைவ் கேஸ்ட்

லைவ் கேஸ்ட்

மேலும் நேரடி ஒளிபரப்பை இணையத்தின் உதவியால் இந்த தொலைக்காட்சியில் பார்க்க முடியும். லைவ் கேஸ்ட் என்ற ஆப்சன் மூலம் மிக எளிதாக அனைத்து நேரடி நிகழ்ச்சிகளையும் இண்டர்நெட் மூலம் நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டே பார்க்கலாம்

ஸ்மார்ட் ஹப்

ஸ்மார்ட் ஹப்

மேலும் இந்த சாம்சங் தொலைக்காட்சிகளில் உள்ளது என்னவெனில் ஸ்மார்ட் ஹப், டூ வே ஷேரிங், ஆகியவைகளை சொல்லலாம். இதனால் டேட்டாக்களை அனுப்ப, பெற முடியும். லைவ் டிவி, செயலிகள் டவுன்லோடு ஆகியவை மற்ற சிறப்பு அம்சங்கள் ஆகும்

Best Mobiles in India

English summary
Samsung launches new smart TVs in India at a starting price of Rs 24,900 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X