சாம்சங் அறிமுகம் செய்யும் பட்ஜெட் விலை funbelievable ஸ்மார்ட் டிவி! விலை என்ன தெரியுமா?

|

சாம்சங் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட் டிவி மாடலுக்கு #funbelievable என்று பெயரிட்டுள்ளது. இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவியின் விலை என்ன சிறப்பம்சம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

பட்ஜெட் விலை என்ன தெரியுமா?

பட்ஜெட் விலை என்ன தெரியுமா?

இந்த ஃபன்பிலிவபிள் 32' இன்ச் சாம்சங் ஸ்மார்ட் டிவி, இந்திய மதிப்பின்படி வெறும் ரூ.12,990 என்ற விலையில் கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்த சீரிஸ் மாடலில் கிடைக்கும் 42' இன்ச் டிஸ்பிளே மாடல் ஸ்மார்ட் டிவியின் விலையை சாம்சங் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் 2 வருட வாரன்டியுடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட் டிவி எங்கெல்லாம் கிடைக்கும்

இந்த ஸ்மார்ட் டிவி எங்கெல்லாம் கிடைக்கும்

இந்த புதிய funbelievable சாம்சங் டிவி சீரிஸ், சாம்சங் ஸ்மார்ட் பிளாசாக்கள் மற்றும் முன்னணி ஆன்லைன் தளங்கள் வழியாகக் கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. சாம்சங்கின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர், சாம்சங் ஷோரூம் வழியாகவும் டிவிகளை பயனர்கள் வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

உங்கள் போனில் வரும் கொரோனா காலர் டியூனை OFF செய்வது எப்படி?உங்கள் போனில் வரும் கொரோனா காலர் டியூனை OFF செய்வது எப்படி?

பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்முறை

பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்முறை

இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளை பயனர்கள் பர்சனல் கம்ப்யூட்டராகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கான 'பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்முறை' ஆப்ஷனையும் சாம்சங் வழங்கியுள்ளது. இது பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் டிவியை தனிப்பட்ட கணினியாக மாற்ற அனுமதிக்கிறது, ப்ரொவ்சிங் மட்டுமின்றி அதிகமான அம்சத்தை வழங்குகிறது.

இவ்வளவும் டிவியில் செய்துகொள்ளலாமா?

இவ்வளவும் டிவியில் செய்துகொள்ளலாமா?

பள்ளி அல்லது அலுவலக வேலைகளுக்கான பவர்பாயிண்ட் உருவாக்குவதற்கும், பயனர்கள் ஆவணங்களை உருவாக்குவதற்கும் அல்லது கிளவுட் ஸ்டோரேஜ் இல் இருந்து வேலை செய்துகொள்வதற்கும் இனி இந்த ஸ்மார்ட் டிவி மட்டும் போதுமானது என்று சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல், ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களை ஸ்கிரீனிங் செய்துகொள்ளும் சேவையும் இதில் உள்ளது.

இனி ஆமைபோல நடக்காதே எனக் கூறவேண்டாம்.! 37,000 கிமீ பயணித்த அடிப்பட்ட ஆமை.! விஞ்ஞானிகள் பிரமிப்பு.!இனி ஆமைபோல நடக்காதே எனக் கூறவேண்டாம்.! 37,000 கிமீ பயணித்த அடிப்பட்ட ஆமை.! விஞ்ஞானிகள் பிரமிப்பு.!

எக்கச்சக்க FUN

எக்கச்சக்க FUN

நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ 5, சோனிலிவ் மற்றும் வூட் போன்ற பயன்பாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட உள்ளடக்கங்களின் பட்டியலிலிருந்து பயனர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளைக் கண்டறிய உதவும் உள்ளடக்க வழிகாட்டியுடன் இந்த ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வரவிருக்கிறது.

சாதாரண டிவியும் இருக்கு

சாதாரண டிவியும் இருக்கு

ஸ்மார்ட் டிவி இல்லாமல் சாதாரண டிவியாக வாங்க நினைக்கும் பயனர்களுக்கு இந்த மாடல் சீரிஸ் இன் கீழ் ஒரு 32' இன்ச் மாடலையும் சம்சுங்க அறிமுகம் செய்யவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி பற்றிய ரேம், சேமிப்பு மற்றும் பிற விவரக்குறிப்புகள் உள்ளிட்ட பல தகவல்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Launches New Funbelievable TV Series In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X