இதன் விலை ரூ.3 லட்சம்; சாம்சங் இந்தியாவின் "அடேங்கப்பா" வெளியீடு.!

இதன் சிறிய வடிவமானது, வட்ட வடிவிலான விவாதங்களுக்கும் வசதியாக இருக்கும்.

|

சாம்சங் இந்தியா அதன் புதிய இன்டர்ஆக்டிவ் டிஸ்பிளேவான சாம்சங் ப்ளிப் (Samsung flip) சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பி2பி (பிஸ்னஸ்-டூ-பிஸ்னஸ்) வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த வளையும் தன்மை கொண்ட டிஸ்பிளேவின் விலை ரூ.3,00,000/- ஆகும்.

இதன் விலை ரூ.3 லட்சம்;  சாம்சங் இந்தியாவின்

4கே யூஎச்டி தீர்மானம் உடனான 55 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ள சாம்சங் ப்ளிப் ஆனது ஒரு 8 ஜிபி நெட்வொர்க் சேமிப்பு உடனான டைசென் (Tizen) செயலி மூலம் இயக்கப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் கருத்துப்படி இந்த சாதனமானது, தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டங்கள் அல்லது கலந்துரையாடல்களை நடத்துவதற்கு மிக எதுவாக அமையும்.

பாரம்பரிய பலகங்களைப் போலல்லாமல், இந்த சாம்சங் டிஸ்பிளேவை தொடர்பு கொள்ள எந்தவிதமான அர்ப்பணிப்பு மிக்க டச் பேனாவும் தேவையில்லை. அதேபோல எழுதப்பட்டதை அழிக்க டஸ்டர் எதுவும் தேவையில்லை, வெறுமனே கைகளை கொண்டு ஸ்வைப் செய்வதின் வழியாகவே 'ஏரேஸ்' பணியை நிகழ்த்தலாம்.

மேலும் இந்த சாம்சங் ப்ளிப் டிஸ்ப்ளே தனிப்பயனாக்கக்கூடியது மற்றும் தேவைகளுக்கேற்ப லேண்ட்ஸ்கேப் (3840 × 2160 பிக்சல்கள்) அல்லது போர்ட்ரெயிட் (2160 × 3840) நோக்குநிலைகளில் பயன்படுத்த ஏதுவானது. இதன் சிறிய வடிவமானது, வட்ட வடிவிலான விவாதங்களுக்கும் வசதியாக இருக்கும்.

மேலும் இந்த சாம்சங் ப்ளிப் ஒரே நேரத்தில் மல்டி-யூஸர்ஸ் ஆதரவைம் தன்னுள் கொண்டுள்ளது. அதாவது இது நான்கு வெவ்வேறு பங்கேற்பாளர்களுக்கான உள்ளடக்கத்தை ஒரே நேரத்தில் திரையில் தோன்ற வைக்கும் அம்சமும் கொண்டுள்ளது.

இதன் விலை ரூ.3 லட்சம்;  சாம்சங் இந்தியாவின்

சேமிக்கப்படும் தரவுகளின் பாதுகாப்பை பொறுத்தமட்டில், சாம்சங் ப்ளிப் டிஸ்ப்ளேவானது ஒரு மைய தரவுத்தளத்தில் கடவுச்சொல் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து உள்ளடக்கத்தையும் சேமித்து, பாதுகாப்பு சார்ந்த அபாயங்களை நீக்குகிறது. அதாவது அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே இதனுள் உள்ள தகவல்களை அணுக முடியும் என்று அர்த்தம்.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?

தவிர இமெயில் அல்லது ப்ரிண்டர் வழியாக பதிவிறக்கம் செய்து பகிரும் விருப்பம், யூஎஸ்பி டிரைவ் அல்லது எக்ஸ்டெர்னல் டிவைஸ்களில் விவரங்களை சேமிக்கும் விருப்பமும் கூட சாம்சங் ப்ளிப் சாதனத்தில் கிடைக்கும். சரியாக 28.9 கிலோ எடை கொண்டுள்ள இந்த சாதனம் லைட் சாம்பல் நிற விருப்பத்தில் மட்டுமே வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Launches Interactive Flip Display for Rs 3 Lakh in India. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X