சாம்சங் நிறுவனத்தின் புதிய கூட்டணியால் உலக லெவலுக்கு செல்லும் தரம்

By Siva
|

சாம்சங் எலெக்ட்ரானிக் நிறுவனம் உலகின் மிகச்சிறந்த தர கட்டுப்பாட்டு நிறுவனமான TUV SUD உடன் கைகோர்த்துள்ளதாக சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் அறிவித்துள்ளது. TUV SUD என்பது ஒரு கொரிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் தரம், பாதுகாப்பு, மற்றும் நிலைத்தன்மையின் முன்னேற்றத்திற்கான தொழில்நுட்ப சேவைகளை வழங்குகிறது.

சாம்சங் நிறுவனத்தின் புதிய கூட்டணியால் உலக லெவலுக்கு செல்லும் தரம்

இது ஒரு உலகளாவிய அங்கீகார சோதனை மற்றும் சான்றிதழ் பெற்ற நிறுவனம். இந்த நிறுவனத்துடன் சாம்சங் இணைவது அதன் LED அம்சங்களின் தரம், செயல்திறன், மற்றும் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தவே என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு LED பொருட்களின் உற்பத்தியாளர் மிகப்பெரிய சோதனை மற்றும் சான்றிதழ் தரும் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள இந்த நிகழ்வு உலகின் முதல் நிகழ்வாக கருதப்படுகிறது என்று சாம்சங் பெருமையுடன் கூறிக்கொள்கிறது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் சாம்சங் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் LED பொருட்கள் TUV SUD உடன் சோதனை செய்யப்பட்டு அந்த பொருள் உலக தரமானது என்பதை உறுதி செய்யும். ஏற்கனவே சாம்சங் நிறுவனமும் அடிப்படை தர சோதனைகளை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

அனைத்து தளங்களுக்கான கூகுள் போட்டோஸ் சேவையில் லைவ் போட்டோ வசதி அறிமுகம்அனைத்து தளங்களுக்கான கூகுள் போட்டோஸ் சேவையில் லைவ் போட்டோ வசதி அறிமுகம்

TUV SUD நிறுவனத்தின் தலைவர் மற்றும் சி.இ.ஓ ஸ்டேபன் ரெண்ட்ஸ் என்பவர் இதுகுறித்து கூறியபோது, 'சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்த முயற்சிகள், அவற்றின் எல்.ஈ. பொருட்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை சோதித்துப் பரிசோதிப்பதற்கு அதிக மதிப்பீடுகளை நாங்கள் கொண்டுள்ளோம்.

இந்த கூட்டு முயற்சி முழுமையாக தரமான பாகங்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்துகிறது மற்றும் உற்பத்தித் தரம் மற்றும் தரம் வாய்ந்த தொழில்துறைத் தரத்தை ஒரு புதிய லெவலுக்கு கொண்டு செல்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.

சாம்சங் நிறுவனத்தின் எல்.இ.டி தர குழுவின் துணைத்தலைவர் சான் குவான் லிம் என்பவர் இந்த புதிய இணைப்பு குறித்து கூறியபோது, 'ஒரு பொருளின் உற்பத்தி சிறப்பம்சத்தை மேலும் நிரூபிக்க முன்னோக்கி ஒரு பெரிய படியை எடுத்து வைத்துள்ளோம்.

நாங்கள் TUV SUD தரம், பாதுகாப்பு, மற்றும் எங்கள் வாகன எல்.ஈ. டி நம்பகத்தன்மை சரிபார்த்தல் சாம்சங் எல்இடிகளின் மேன்மையை மற்றொரு மிக முக்கியமான பங்களிப்பாக வழங்கும் என்று நம்புகிறேன்.

எங்களுடைய எல்.ஈ.டி பாகங்களின் தரத்தை மறுவரையறை செய்வோம் மற்றும் எமது பொருகளின் தரத்தீர்வுகளை பரிசீலிப்பதில் உலகளாவிய வாகன உபகரண வழங்குநர்களுக்கு மிக உறுதியான உத்தரவாதத்தை வழங்குவதற்கு தேவையான வழிவகைகளை செய்வோம்' என்று கூறினார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Electronics and TUV SUD have partnered to test and certify the automotive LED products manufactured by Samsung.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X