43 -இன்ச் முதல் 75-இன்ச் வரை! நம்ப முடியாத விலையில் 5 புதிய Samsung டிவிகள்!

|

அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு சாம்சங் நிறுவனத்தின் பிரபல ஸ்மார்ட் டிவி சீரிஸ் ஒன்று இந்தியாவிற்கு வந்துள்ளது.

அதென்ன TV சீரிஸ்? அதன் கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் வாங்க கிடைக்கும்? அதன் விலை நிர்ணயம் என்ன? இந்த சீரீஸ் என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

எல்லோருடைய கண்களும் இந்த டிவிகள் மீதுதான் இருந்தது!

எல்லோருடைய கண்களும் இந்த டிவிகள் மீதுதான் இருந்தது!

நினைவூட்டும் வண்ணம், சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில், தி செரோ, தி செரிஃப், மைக்ரோ எல்இடி டிவி மற்றும் நியோ கியூஎல்இடி டிவிகள் உள்ளிட்ட பல புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியது.

ஆனால் எல்லோருடைய கண்களும் சாம்சங் நிறுவனத்தின் லைஃப்ஸ்டைல் ​​டிவி சீரிஸின் 2022 வெர்ஷன் மீது தான் இருந்தது. அதாவது தி ஃப்ரேம் டிவி சீரீஸ் தான் பலரின் கவனத்தையும் ஈர்த்தது!

கிடைக்காது! OnePlus TVகள் மீது இதை விட கிடைக்காது! OnePlus TVகள் மீது இதை விட "வெறித்தனமான" ஆபர் இனி கிடைக்காது!

43-இன்ச் முதல் 75-இன்ச் வரை!

43-இன்ச் முதல் 75-இன்ச் வரை!

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தி ஃபிரேம் ஸ்மார்ட் டிவி சீரீஸின் ஆனது 43-இன்ச் முதல் 75-இன்ச் வரையிலாக மொத்தம் 5 வகைகளின் கீழ் வாங்க கிடைக்கிறது.

43-இன்ச் மாடல் ஆனது ரூ.60,000 என்கிற மிட்-ரேன்ஜ் பிரீமியம் விலை நிர்ணயத்தில் அமர்ந்தாலும் கூட, இதன் 75-இன்ச் மாடல் ஆனது "பட்ஜெட் வாசிகளால் ஜீரணிக்க முடியாத" விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது!

விலை  விவரங்கள்:

விலை விவரங்கள்:

தி ஃபிரேம் டிவியின் புதிய 43-இன்ச் வேரியண்ட் ஆனது ரூ.61,990 என்கிற விலைக்கு வாங்க கிடைக்கிறது.

அதே சமயம் 50-இன்ச் வேரியன்ட் ஆனது ரூ.73,990 க்கும், 55-இன்ச் வேரியன்ட் ஆனது ரூ.91,990 க்கும் , 65-இன்ச் வேரியண்ட் ஆனது ரூ.1,27,990, மற்றும் 75-இன்ச் மாடலானது ரூ.2,99,990 க்கும் விற்பனை செய்யப்படுகிறது

இந்த டிவிகள் அனைத்துமே Samsung.com, Amazon, Flipkart மற்றும் முன்னணி ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கும்.

விட்டால் இலவசமா கொடுக்கும் போலயே! Amazon-ல் 6 TV-கள் மீது வேற லெவல் ஆபர்!விட்டால் இலவசமா கொடுக்கும் போலயே! Amazon-ல் 6 TV-கள் மீது வேற லெவல் ஆபர்!

இந்த டிவிகளை வாங்கினால்.. சில இலவசங்களும் உண்டு!

இந்த டிவிகளை வாங்கினால்.. சில இலவசங்களும் உண்டு!

மேலும் தி ஃபிரேம் டிவியை வாங்கும் நுகர்வோரகளுக்கு, ரூ.7,690 மதிப்புள்ள பெஸல் இலவசமாக கிடைக்கும்.

நீங்கள் 75-இன்ச் மாடலை வாங்கும் பட்சத்தில், ரூ.21,490 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி ஏ32 இலவசமாக கிடைக்கும்.

அதே போல 65-இன்ச் மாடலுடன் ரூ.9,499 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி ஏ03 இலவசமாக கிடைக்கும்.

இலவசங்களை தவிர்த்து 20% கேஷ்பேக்கும் உண்டு!

இலவசங்களை தவிர்த்து 20% கேஷ்பேக்கும் உண்டு!

உண்டு! சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் அல்லது சாம்சங் ஸ்டோர் வழியாக, தி ஃபிரேம் டிவி மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீதம் வரை கேஷ்பேக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது அனைவருக்கும் கிடைக்காது; சில குறிப்பிட்ட வங்கிகளின் கார்டுகளுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் என்பது வெளிப்படை.

5G கட்டணம்: அக்.1 முதல் ஒவ்வொரு ரீசார்ஜ்-க்கும் எவ்வளவு செலவு ஆகும்?5G கட்டணம்: அக்.1 முதல் ஒவ்வொரு ரீசார்ஜ்-க்கும் எவ்வளவு செலவு ஆகும்?

சாம்சங் தி ஃபிரேம் டிவியின் முக்கிய அம்சங்கள்:

சாம்சங் தி ஃபிரேம் டிவியின் முக்கிய அம்சங்கள்:

சாம்சங்கின் தி ஃபிரேம் ஸ்மார்ட் டிவியானது, 100Hz ஸ்கிரீன் ரெஃப்ரெஷ் ரேட், 3840 x 2160 பிக்சல்ஸ் வரையிலான ரெசல்யூஷனை கொண்ட QLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

சாம்சங்கின் குவாண்டம் ப்ராசஸர் 4K கொண்டு இயங்கும் இந்த டிவி HDR10+ அடாப்டிவ் மற்றும் HDR10+ கேமிங் சர்டிபிக்கேஷன், பீக் UHD டிம்மிங் மற்றும் மோஷன் எக்ஸ்செலரேட்டர் டர்போ+ தொழில்நுட்பம் போன்றவைகளையும் கொண்டுள்ளது.

சவுண்ட்டு.. சும்மா பிச்சுக்கும்!

சவுண்ட்டு.. சும்மா பிச்சுக்கும்!

ஆடியோவை பொறுத்தவரை, இது Dolby Atmos, Adaptive Sound+ மற்றும் Dolby Digital Plus MS12 5.1ch போன்ற ஆதரவுகளுடன் 40W 2.0.2 சேனல் ஸ்பீக்கரை கொண்டுள்ளது.

இது சாம்சங்கின் டைசன் ஓஎஸ் உடன் உள்ளமைக்கப்பட்ட கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் பிக்ஸ்பி மற்றும் அலெக்ஸாவிற்கான ஆதரவையும் வழங்கும்!

வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ! 2 வாங்கலாம் போலயே!வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ! 2 வாங்கலாம் போலயே!

அதுமட்டுமா?

அதுமட்டுமா?

இதில் ஒரு மோஷன் சென்சார் உள்ளது; உங்களின் இருப்பை உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல இயங்கும்.

இதில் ஒரு பிரைட்னஸ் சென்சாரும் உள்ளது, இது சுற்றுப்புற ஒளியை கண்டறிந்து, அறையில் உள்ள வெளிச்சத்தை பொருட்படுத்தாமல் ஸ்க்ரீனில் ப்ரைட்னஸையும், கலர் டோனையும் தானாகவே சரிசெய்யும்.

மேலும் இதில் EyeComfort மோட், ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung introduces 5 New Smart TV Models in India Under The Frame Series 2022 Check Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X