இந்தியா: சாம்சங் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள்.!
குறிப்பாக கான்செர்ட் சரீஸ் மாடல்கள் பொறுத்தவரை ஸ்மார்ட் கான்செர்ட் மற்றும் ஜாய் கான்செர்ட் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.
சியோமி நிறுவனத்திற்கு போட்டியா சாம்சங் நிறுவனம் புதிய கியூ எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி 55-இன்ச் முதல் 75-இன்ச் வரை ஸ்மார்ட் டிவிகள் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களில் இன்விசிபிள் கனெஷன் மற்றம் சிறிய கேபிள் பயனரின் பவர் மற்றும் ஏவி தகவல்களை டிவிக்கு கொண்டு செல்கிறது. மேலும் 15மீட்டர் நீலமாக இருக்கும் இந்த கேபிள் டிவியை டேட்டா அல்லது மின்சார இணைப்பு இருக்கும் இடத்தில் வைக்க வேண்டிய தேவையை போக்குகிறது.

எஸ் வாய்ஸ்:
இப்போது வெளிவந்துள்ள சாம்சங் கியூ எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல்களின் சிறப்பம்சம் என்னவென்றால் எஸ் வாய்ஸ் உடன் உரையாட
முடியும். பின்பு ஸ்மார்ட் திங்ஸ் செயலி வழங்கப்பட்டுள்ளது, எனவே டிவியை மாற்ற இன்டெர்நெட் ஆப் திங்ஸ் சாதனங்களுடன்
இணைத்து தகவல் பரிமாற்றம் மற்றும் நோட்டிஃபிகேஷன் மற்றும் ஸ்கீரின் மிரரங் போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.

டீப் கான்ட்ராஸ்ட்
சாம்சங் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் சுப்பீரியர் ஹை-டைனமிக் ரேஞ்ச் மூலம் இயங்குகிறது. இந்த அம்சத்தின் சிறப்பு என்னவென்றால் நுனுக்கமான பிரைட்னஸ், டீப் கான்ட்ராஸ்ட், தெளிவான காட்சிகள் போன்றவற்றை வழங்கும் தன்மை கொண்டுள்ளது.

டைனமிக் கிரிஸ்டல் கலர் தொழில்நுட்பம்:
மேலும் இந்த ஸ்மார் டிவி மாடல்களில் டைனமிக் கிரிஸ்டல் கலர் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, இது காட்சிகளை அதிக தரத்தில் பார்க்க வழி செய்கிறது. மேலும் யுஎச்டி ரிமோட் கன்ட்ரோல், ஸ்மார்ட் ஹப், ஸ்மார்ட் கன்வெர்ஜன்ஸ் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

கான்செர்ட் சீரிஸ்
குறிப்பாக கான்செர்ட் சீரிஸ் மாடல்கள் பொறுத்தவரை ஸ்மார்ட் கான்செர்ட் மற்றும் ஜாய் கான்செர்ட் என இரண்டு வகைகளில்
கிடைக்கிறது. மேலும் இவற்றில் புதிய சவுண்ட் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. பின்னர் சிறந்த சினிமா அனுபவம் தரும் வகையில் இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளது. இவற்றில் 4 ஸ்பீக்கர்கள் வீதம் 10 வாட் சவுண்ட் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ சினிமா:
வைஃபை, ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி மாடல்களில் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு அமேசான், ஜியோ சினிமா, நெட்ஃப்ளிக்ஸ் போன்ற பல்வேறு சேவைகளை பயன்படுத்த முடியும்.

விலை:
ஸ்மார்ட் கான்செர்ட் மற்றும் ஜாய் கான்செர்ட் டிவி மாடல்கள் விலை ரூ.27,500 முதல் துவங்குகிறது, அதன்பின்பு என்ட்ரி லெவல் யுஎச்டி மாடல் சீரிஸ் விலை ரூ.64,900 முதல் துவங்குகிறது. பின்னர் சாம்சங் கியூ எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல்களின் விலை ரூ.2,45,000 முதல் துவங்குகிறது.


Click it and Unblock the Notifications