Home
Gadgets

ஆதார், PAN போதும்.. டெய்லி ரூ.33 ஈஸி EMI இல் Samsung பிரிட்ஜ், AC, வாஷிங் மெஷின்.. வாங்குவது எப்படி?

நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தனது ஸ்மார்ட் ஹோம் ஹோம் அப்ளையன்ஸ்களை எளிதில் கிடைக்க செய்வதற்காக, சாம்சங் இந்தியா (Samsung India) நிறுவனம் ஆனது சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் (Samsung Finance Plus) திட்டத்தின் கீழ் புதிய திட்டங்களை (New schemes) அறிமுகப்படுத்தி உள்ளது.

ரெப்ரிஜிரேட்டர்கள் (Refrigerators), வாஷிங் மெஷின்கள் (Washing machines), ஏசிகள் (ACs) மற்றும் மைக்ரோவேவ்கள் (Microwaves) போன்ற சாம்சங் அப்ளையன்ஸ்களை வாங்குவதற்கு நுகர்வோர் இப்போது ஈஸி பைனான்ஸிங் சொல்யூஷன்களை பெறலாம். இந்த சேவை நாடு முழுவதும் 8000 க்கும் மேற்பட்ட கடைகளில் கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

டெய்லி ரூ.33 ஈஸி EMI இல் Samsung பிரிட்ஜ், AC, வாஷிங் மெஷின்!

சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் ஆனது, பொருட்களை வாங்கும் செயல்முறையை மிகவும் எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன் 'அனைவருக்கும் எளிதான இஎம்ஐ' (Easy EMI for All) விருப்பங்கள் ஆனது, முற்றிலும் டிஜிட்டல் மற்றும் காகிதமில்லா செயல்முறையைவெறும் ஐந்து நிமிடங்களில் வழங்குகிறது.

ஒரு நாளைக்கு வெறும் ரூ.33 இல் தொடங்கும் மலிவு விலை இஎம்ஐ விருப்பங்களுடன், கிரெடிட் ஹிஸ்டரி இல்லாதவர்கள் உட்பட, முதல் முறை கடன் வாங்குபவர்களுக்கு இந்த சொல்யூஷன் மிகவும் ஏற்றதாக அமைகிறது. இந்த அறிமுகத்தை கொண்டாடும் விதமாக, சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் மூலம் செய்யப்படும் வாங்குதல்களுக்கு, சாம்சங் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அறிமுக சலுகையாக ரூ.1000 கேஷ்பேக்கையும் வழங்குகிறது.

ஆதார் மற்றும் பான் போதும்: இப்படியாக சாம்சங் இந்தியா தொடர்ந்து புதுமைகளை புகுத்தி, வாடிக்கையாளரை மையமாக கொண்ட சொல்யூஷன்களை வழங்கி, அதிநவீன தொழில்நுட்பம் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்கிறது. சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் மூலம், சாம்சங் நிறுவனம் தனது பல்வேறுபட்ட வாடிக்கையாளர் தளத்திற்கு மலிவான மற்றும் சிரமமற்ற நிதியுதவி விருப்பங்களை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் மற்றும் பான் அட்டைகளுடன் அருகில் உள்ள ஸ்டோர்களுக்கு சென்று பைனான்ஸிங் சொல்யூஷன்களை வித் தீர்வுகளைப் பெறலாம்.

சாம்சங்கின் பெஸ்போக் ஏஐ அப்ளையன்ஸ் சீரீஸ் ஆனது, நவீன இந்திய குடும்பங்களுக்கு அல்ட்ரா பெர்சனைலைஸ்டு, ஆற்றல் திறன்மிக்க மற்றும் பாதுகாப்பான ஸ்மார்ட் ஹோம் சொல்யூஷன்களை வழங்குகிறது. ஏஐ ஹோம் ஸ்கிரீன் இன்டர்பேஸ் ஆனது இயல்பான தகவல்தொடர்புடன் கூடிய பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டன்ட், சாம்சங் நாக்ஸ் பாதுகாப்பு மற்றும் ஸ்மார்ட் திங்ஸ் இணைப்பு ஆகியவற்றால் இயக்கப்படும் இது, தடையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட பயனர் அனுபவத்தை உறுதி செய்கிறது.

சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் என்றால் என்ன? இது வாடிக்கையாளர்கள் நிதி சுமையின்றி சமீபத்திய தொழில்நுட்பத்தை சொந்தமாக்கி கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பைனான்ஸிங் சொல்யூஷன் ஆகும். இதன்கீழ் "புதிய அறிமுகங்கள் மூலம், இந்திய குடும்பங்கள் புதுமைகளை ஏற்றுக்கொண்டு தங்கள் வீடுகளை மேம்படுத்துவதை, முன்னெப்போதையும் விட எளிதாக்குகிறோம்," என்று சாம்சங் இந்தியாவின் டிஜிட்டல் அப்ளையன்சஸ் துணைத் தலைவர் குஃப்ரன் ஆலம் கூறுகிறார்.

மேலும் "சாம்சங்கில், அர்த்தமுள்ள டிஜிட்டல் புதுமைகளின் மூலம் எங்கள் தயாரிப்புகளின் அணுகலை சாம்சங் இந்தியா தொடர்ந்து புதுமைகளை புகுத்தி, வாடிக்கையாளர்களை மையமாக கொண்ட சொல்யூஷன்களை வழங்கி, அதிநவீன தொழில்நுட்பம் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்கிறது. சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் மூலம், நிறுவனம் தனது பல்வேறுபட்ட வாடிக்கையாளர் தளத்திற்கு மலிவு விலையில் மற்றும் சிரமமில்லாத நிதி விருப்பங்களை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது" என்றும் கூறியுள்ளார்.

மேலும் தகவல்களுக்கு அல்லது சாம்சங் டிஜிட்டல் டிவைஸ்களின் வகைகளை பற்றி அறிந்துகொள்ள, உங்களுக்கு அருகிலுள்ள சாம்சங் ஸ்டோருக்கு செல்லுங்கள் அல்லது சாம்சங்கின் அதிகாரப்பூர்வ
இணையதளத்தை பார்வையிடவும்.

Best Mobiles in India

English summary
Samsung India Announced New Samsung Finance Plus Offers on Smart Fridge AC Washing Machine Home appliances
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X