Home
Gadgets

TV வாங்கினால் TV இலவசம்.. சவுண்ட் பார் இலவசம்.. Samsung விஷன் AI டிவிகள் மீது வெயிட்டு ஆபர் அறிவிப்பு!

2026 கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில்.. சரியான நேரம் பார்த்து சாம்சங் இந்தியா (Samsung India) சரியான சலுகைகளை அறிவித்துள்ளது. சாம்சங் நிறுவனம் கால்பந்து ரசிகர்களுக்காக தனது விஷன் ஏஐ பிக் டிவிகளில் (Vision AI Big TVs) பிரத்யேக சலுகைகளை அறிவித்துள்ளது.

பிக் கேம், பிக்கர் ஸ்க்ரீன், பிக்கஸ்ட் மொமெண்ட்ஸ்' (Big Game, Bigger Screen, Biggest Moments) என்ற வாசகத்தின் கீழ், ஏஐ சாக்கர் மோட் (AI Soccer Mode) உடன் வரும் சாம்சங் விஷன் ஏஐ டிவிகள் மூலம் கால்பந்து விளையாட்டை வீட்டிற்கே கொண்டு வாருங்கள் என்று சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.

Samsung விஷன் AI டிவிகள் மீது வெயிட்டு ஆபர் அறிவிப்பு!

2026 விஷன் ஏஐ டிவி சீரீஸில் வகிடைக்கும் ஏஐ சாக்கர் மோட் ஆனது, மென்மையான பந்து அசைவு, துடிப்பான வண்ணங்கள் மற்றும் ஆழ்ந்த ஸ்டேடியம் ஒலிக்காக நிகழ்நேர காட்சி பகுப்பாய் ஆகிய அம்சங்களின் கீழ், ஸ்மார்ட் டிவி வழியாக கால்பந்து பார்க்கும் அனுபவத்தை ஸ்டேடியத்தில் இருந்து பார்க்கும் அளவிற்கு மேம்படுத்துகிறது.

சாம்சங்கின் விஷன் ஏஐ கம்பேனியன் (Vision AI Companion - VAC) ஆனது - பிக்ஸ்பி, பெர்பிளெக்சிட்டி மற்றும் மைக்ரோசாஃப்ட் கோபைலட் (Bixby, Perplexity, and Microsoft Copilot) போன்ற ஏஐ தளங்களை ஒருங்கிணைத்து, ஏஐ அப்ஸ்கேலிங் ப்ரோ மூலம் பெர்சனலைஸ்டு டிவி அனுபவத்தை வழங்குகிறது.

இது குறைந்த ரெசல்யூஷனை கொண்ட கன்டென்ட்-ஐ மேம்பட்ட டீடெயில், டெப்த் மற்றும் கான்ட்ராஸ்ட் உடன் மேம்படுத்துகிறது. இதன் கலர் பூஸ்டர் ப்ரோ, காட்சி வண்ணங்களை தத்ரூபமான துடிப்புடன் மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் ஏஐ சவுண்ட் கண்ட்ரோலர் ப்ரோ, ஆழ்ந்த ஒலிக்காக வர்ணனை, இசை மற்றும் கூட்டத்தின் சத்தத்தை சரிசெய்கிறது.

சாம்சங் அறிவித்துள்ள சலுகைகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் மாடலை பொறுத்து, ரூ.92,990 வரையிலான மதிப்புள்ள ஒரு இலவச சவுண்ட்பாரையோ அல்லது ரூ.2,14,990 வரையிலான மதிப்புள்ள ஒரு இலவச டிவியையோ பெறுகிறார்கள். இந்த சலுகையை மேலும் இனிமையாக்க, சாம்சங் 20% வரை கேஷ்பேக், முன்பணம் இல்லாத விருப்பங்கள் மற்றும் 30 மாதங்கள் வரையிலான இஎம்ஐ (EMI) திட்டங்களை வழங்குகிறது.

75-இன்ச் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் கிடைக்கும் சாம்சங் விஷன் ஏஐ பிக் டிவிகள் ஆனது சாம்சங் டிவி பிளஸ், சாம்சங் கேர் பிளஸ், சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ், சவுண்ட் பிளஸ், ஆர்ட் பிளஸ் மற்றும் ஏழு வருட ஓஎஸ் அப்டேட்ஸ் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஒரு முழுமையான, எதிர்காலத்திற்கு தயாரான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதாக சாம்சங் கூறுகிறது

சாம்சங் அறிவித்துள்ள இந்த புதிய சலுகைகள் மீது ஆராவமுள்ள வாடிக்கையாளர்கள் சாம்சங் இந்தியாவின் (Samsung India) சில்லறை மற்றும் ஆன்லைன் சேனல்களில் விஷன் ஏஐ பிக் டிவிக்களின் வகைகளை ஆராய்ந்து, இந்த பிரத்யேக சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சாம்சங் அறிவித்துள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான சாம்சங் 2026 விஷன் ஏஐ டிவி லைன்அப் (2026 Vision AI TV Lineup) மாடல்கள்: இதில் மைக்ரோ ஆர்ஜிபி, ஓஎல்இடி, நியோ க்யூஎல்இடி, தி ஃபிரேம், மினி எல்இடி மற்றும் யுஎச்டி என பல வகையான ஸ்மார்ட் டிவி மாடல்கள் அடங்கும்.

சாம்சங்கின் மைக்ரோ ஆர்ஜிபி மாடல்களின் (Samsung's Micro RGB range) விலை ரூ.1,24,990 முதல் தொடங்குகிறது. சாம்சங்கின் ஓஎல்இடி மாடல்களின் (Samsung's OLED range) விலை ரூ.1,14,990 முதல் தொடங்குகிறது. சாம்சங்கின் ஃபிரேம் டிவி மாடல்களின் (Samsung's Frame TV range ) விலை ரூ.56,990 முதல் தொடங்குகிறது.

சாம்சங்கின் நியோ க்யூஎல்இடி மாடல்களின் (Samsung's Neo QLED range) விலை ரூ.52,990 முதல் தொடங்குகிறது. சாம்சங்கின் மினி எல்இடி மாடல்களின் (Samsung's Mini LED range) விலை ரூ.42,990 முதல் தொடங்குகிறது. சாம்சங்கின் யுஎச்டி டிவி மாடல்களின் (Samsung's UHD TV range) விலை ரூ.36,990 முதல் தொடங்குகிறது.

Best Mobiles in India

English summary
Samsung India announced exclusive offers on Vision AI Big Smart TV Models for FIFA football World Cup 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X