சாம்சங் கியர் ஐகான்எக்ஸ்(IconX) இயற்பட்ஸ் 4ஜிபி பாடல் உள் சேமிப்பா.!
சாம்சங் கியர் ஐகான்எக்ஸ் 4GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்புடன் இந்திய சந்தையில் வயர்லெஸ் இயற்பட்ஸ்-ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

சாம்சங் கியர் ஐகான்எக்ஸ் 4GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்புடன் இந்திய சந்தையில் வயர்லெஸ் இயற்பட்ஸ்-ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது உங்களுக்குப் பிடித்த இசை மற்றும் பாடல்களை இயற்பட்ஸ்ஸில் சேமிக்க அனுமதிப்பதுடன், ஸ்ட்ரீமிங் இசைக்கு ஒரே நேரத்தில் ஃபோனைப் பயன்படுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த வயர்லெஸ் இயற்பட்ஸ்கள் சிக்கலில்லாத பயன்பாட்டிற்கும் மற்றும் சிறந்த இசை அனுபவத்திற்கும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. நம் காதுகளுக்கு வசதியாகவும் கச்சிதமாகவும் பொருந்தும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
வயர்லெஸ் அல்லது USB கேபிள் வழியாக மற்றும் தொலைப்பேசி அல்லது கணினியிலிருந்து பாடல்களை ஏற்றிக்கொள்ளலாம். இந்த இயற்பட்ஸ் பாடல்களை தொடர, நிறுத்த, இடைநிறுத்தம், ஸ்கிப் மற்றும் முழு பிளேலிஸ்ட்களை தொடு சைகைகள் திறன் படி அனுமதிக்கிறது. பின்னணி தரத்தை சரிசெய்ய ஐந்து மெல்லிய ட்யூன் ஆப்ஷன்களாக பாஸ் பூஸ்ட், சாப்ட், டைனமிக், தெளிவான மற்றும் ட்ரிபிள் பூஸ்ட் அம்சத்தை உள்ளடக்கியுள்ளது.
கியர் ஐகான்எக்ஸ் உங்கள் வாய்ஸ் கால்களை ஸ்டீரியோபோனிக் கிளாரிட்டியுடன் உங்களுக்கு வரும் இன்கம்மிங் கால் , மெசேஜ் மற்றும் நோட்டிபிகேஷன்களை குரல் செய்தியாக தருகிறது. அதேபோல் உங்கள் இசையைக் கட்டுப்படுத்த அல்லது அழைப்பைத் துண்டிக்க உங்கள் குரலைப் பயன்படுத்தலாம்.
5 மணிநேர இசை ஸ்ட்ரீமிங் அல்லது ஏழு மணிநேர முழுமையான இசை பின்னணியுடன், வேகமான சார்ஜ்ஜிங் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுளுடன் வருகிறது. பயனர்களின் பல வித உபாயத்துக்கு ஏற்றவாரு வியர்வை ரெஸிஸ்டண்ட் மற்றும் கார்ட் பிரீ அமைப்புடன் வருகிறது.
இயற்பட்ஸ் தானாக உங்கள் நடை மற்றும் தூரத்தினை கணக்கு செய்வதுடன் கலோரிகள் அளவையும் துல்லியமாக தெரிவிக்கின்றது.
கியர் ஐகான்எக்ஸ் 13,990 ரூபாயில் பிளாக் நிறத்தில் இன்று முதல் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications