புரட்டிப்போடும் பட்ஜெட்.. 10ATM வாட்டர் ரெசிஸ்டன்ட்.. DUAL ஃபிரிகொன்சி ஜிபிஎஸ்.. கேலக்ஸி ஏஐ.. எந்த மாடல்?
சாம்சங் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா (Samsung Galaxy Watch Ultra) மாடாலானது, சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு ஜூலை 2024 (Samsung Galaxy Unpacked July 2024) இவென்டில் வெளியாகியது. 10 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட், 100 ஹவர்ஸ் பவர் சேவிங் மோட், பயோஆக்டிவ் சென்சார் போன்ற பீச்சர்களில் பின்னிப்பெடல் எடுக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா மாடலின் முழு பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy Watch Ultra Specifications): இந்த அல்டா மாடலானது, டைட்டானியம் (Titanium) மற்றும் குஷன் (Cushion) டிசைன் கொண்டிருக்கிறது. சபையர் கிரிஸ்டல் கிளாஸ் (Sapphire Crystal Glass) வருகிறது. ஆகவே ரக்கட் பில்ட் குவாலிட்டி எதிர்பார்க்கலாம். 10 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது.

ஆகவே, கடல் நீரில் கூட தாக்குப்பிடிக்கும்படி வகையில் பில்ட் செய்யப்பட்டுள்ளது. கூடவே IP68 டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. எம்ஐஎல்-எஸ்டிடி 810எச் (MIL-STD 810H) மிலிட்டரி ஸ்டான்டர்ட் வருகிறது 1.5 இன்ச் (480 x 480 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட்(Super AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
ஹெல்த் மானிட்டர்களை பார்க்கையில், ஆக்டிவிட்டி டிராக்கிங், ஹார்ட் ரேட் டிராக்கிங் மற்றும் வாட்டர் லாக் சப்போர்ட் உள்ளது. 100 ஸ்போர்ட் மோட்கள் மற்றும் மல்டி-கோர்ஸ் வொர்க்அவுட் மோட்கள் சப்போர்ட் உள்ளது. ஸ்விம்மிங் போன்ற வாட்டர் ஆக்டிவிட்டிகளை வாட்டல் லாக் டிராக்கர் மூலம் தெரிந்து கொள்ளாலாம்.
கேலக்ஸி ஏஐ சப்போர்ட் உடன் பயோஆக்டிவ் சென்சார் (BioActive Sensor) வருகிறது. ஸ்லீப் அனலைசிஸ், ஹார்ட் ரேட், பிளட் பிரசர் போன்றவற்றில் அப்நார்மல் கன்டிஷன்களை டிடெக்ட் செய்து கொள்ளலாம். ஃபால் டிடெக்சன் (Fall Detection), எமர்ஜென்சி எஸ்ஓசி (Emergency SOS) பீச்சர்கள் வருகின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா மாடலில் 590mAh பேட்டரி வருகிறது.
இந்த பேட்டரி மூலம் 48 ஹவர்ஸ் பேக்கப் பெறலாம். பவர் சேவிங் மோடில் 100 ஹவர்ஸ் பேக்கப் எதிர்பார்க்கலாம். எக்ஸினோஸ் டபுள்யூ1000 3என்எம் (Exynos W1000 3nm) சிப்செட் வருகிறது. 2 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது. 32 ஜிபி மெமரி வருகிறது. டூயல் ஃபிரிகொன்சி ஜிபிஎஸ் (Dual- Frequency GPS) கனெக்விட்டி சப்போர்ட் கொண்டிருக்கிறது.
ப்ளூடூத் மற்றும் எல்டிஇ கனெக்டிவிட்டிகளும் வருகின்றன. டபுள் பிஞ்ச் (Double Pinch) கெஸ்ச்சர் கன்ட்ரோல் வருகிறது. இதன் மூலம் கால் கன்ட்ரோல், கேப்ச்சர் போட்டோ, சைலன்ஸ் அலாரம் போன்றவற்றை செய்து கொள்ளலாம். டைட்டானியம் கிரே (Titanium Gray), டைட்டானியம் ஒயிட் (Titanium White) மற்றும் டைட்டானியம் சில்வர் (Titanium Silver) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ராவின் விலை ரூ.54,279ஆக இருக்கிறது. இது அமெரிக்க விலையாகும். இந்திய விலை பட்டியல் விரைவில் வெளியாகும். இந்த மாடலின் ப்ரீ-ஆர்டர் இன்று முதல் தொடங்குகிறது. வரும் ஜூலை 24ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களுக்கு கூட இந்த மாடல் லக்சரி ஆப்ஷனாகும்.


Click it and Unblock the Notifications








