இந்தியா: வியக்கவைக்கும் விலையில் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

|

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் ஆக்டிவ் 2 மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் 4ஜி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் அனைத்து சிறப்பம்சங்கள் மற்றும்
விலை உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2

கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2

கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 மாடலில் இ சிம் மூலம் 4ஜி எல்.டி.இ கனெக்டிவிட்டி வசதி வழங்கப்படுகிறது. இதனால்ஸ்மார்ட்வாட்ச் கொண்டே வாடிக்கையாளர்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இ சிம் சேவையை தற்சமயம் ஏர்டெல்மற்றும் ஜியோ நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

 360x360 பிக்சல் திர்மானம்

360x360 பிக்சல் திர்மானம்

கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 மாடல் 1.4-இன்ச் AMOLED டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 360x360 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் DX+இவற்றுள் அடக்கம்.

பட்ஜெட் விலையில் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ Y11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!பட்ஜெட் விலையில் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ Y11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

 எக்சைனோஸ் 9110

எக்சைனோஸ் 9110

இந்த சாதனத்தில் எக்சைனோஸ் 9110 டூயல் கோர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதன்பின் வெளியான இயங்குதளங்களுடன் வேலை செய்யம் எனவும், ஐபோன் 5 அல்லது ஐ.ஒ.எஸ் 9.0 மற்றும் அதன்பின் வெளியான இயங்குதளங்களுடன் வேலை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இ.சி.ஜி அக்செல்லோமீட்டர்

இ.சி.ஜி அக்செல்லோமீட்டர்

கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 சாதனத்தில் 768எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியும் இடம்பெற்றுள்ளது. பின்பு இதயதுடிப்பு சென்சார்,இ.சி.ஜி அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், பாரோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார் உள்ளிட்ட ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம்.

WPC-சார்ந்த வயர்லெஸ் சார்ஜிங்

WPC-சார்ந்த வயர்லெஸ் சார்ஜிங்

குறிப்பாக 5ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL-STD-810G சான்று மற்றும் இ சிம், 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.0, வைபை, 340எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் WPC-சார்ந்த வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுஇவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 விலை

கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 விலை

கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 சாதனம் சில்வர், பிளாக்,கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். பின்பு இந்த சாதனத்தின்விலை ரூ.35,990-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Watch Active 2 4G Variant Launched in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X