Galaxy Unpacked: சாம்சங் கேலக்ஸி வாட்ச் 9 மற்றும் சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 அறிமுகம்.. என்ன விலை?
சாம்சங் நிறுவனம் இன்று நடைபெற்ற Galaxy Unpacked நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 9 மற்றும் சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய மாடல்கள் வெளிவந்துள்ளன.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 அம்சங்கள் (Samsung Galaxy Watch Ultra 2 specification): 1.52-இன்ச் சபையர் கிரிஸ்டல் சூப்பர் AMOLED டிஸ்பிளே (47mm) உடன் இந்த சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா2 மாடல் வெளியாகி உள்ளது. மேலும் 5000 நிட்ஸ் பிரைட்னஸ், ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த மாடலில் உள்ளன.

தரமான குவால்காம் SDW6100 பிராசஸர் வசதி இந்த சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 மாடலில் உள்ளது. அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியும் இந்த சாம்சங் ஸ்மார்ட் வாட்ச் மாடலில் உள்ளன. Wear OS 7-ஐ அடிப்படையாகக் கொண்ட OneUI 9 மூலம் இந்த கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா2 மாடல் இயங்குகிறது. இது ஒரு தனித்துவமான அனுபவத்தை தரும்.
800எம்ஏஎச் பேட்டரி, எல்டிஇ, என்எப்சி, புளூடூத் 6.0, வைஃபை, IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance), 10ATM+, ஆண்ட்ராய்டு 13, MIL-STD-810H புரொடெக்சன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 மாடலில் உள்ளன.
ஸ்லீப் அப்னியா (Sleep Apnea)என்ற அம்சத்தை வழங்குகிறது கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 மாடல். இது தூக்கத்தின் போது ஏற்படும் சுவாச இடையூறுகள் குறித்த தகவல்களை அளிக்கிறது. மேலும் இதில் உள்ள சென்சார்களின் பட்டியலில் பயோ-சிக்னல் சென்சார், எலக்ட்ரிக்கல் ஹார்ட் சென்சார், டெம்பரேச்சர் சென்சார், ஆக்சிலரோமீட்டர், பாரோமீட்டர், கைரோஸ்கோப், ஜியோமேக்னடிக் சென்சார், லைட் சென்சார் ஆகியவை அடங்கும்.
அதேபோல் உடல்நலத்தைக் கண்காணிப்பதற்கா, இந்த கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 மாடல் ஹார்ட் ரேட் மானிட்டரிங், பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டரிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking)ஆகியவற்றை வழங்கும், அதே நேரத்தில் இந்த மாடல் சத்தமான சூழல்களுக்கான எச்சரிக்கைகளையும் காண்பிக்கும். டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் கிரே நிறங்களில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 மாடல் வாங்க கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 9 அம்சங்கள் (Samsung Galaxy Watch 9 specifications): Super AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 9 மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக 1.47-இன்ச் (44mm) டிஸ்பிளே மற்றும் 1.34-இன்ச் (40mm) டிஸ்பிளே என இரண்டு வேரியண்ட்களில் இந்த மாடலை வாங்க முடியும்.
குவால்காம் SDW6100 பிராசஸர் உடன் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 9 மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உடன் இந்த சாதனம் வெளியாகி உள்ளது. Wear OS 7-ஐ அடிப்படையாகக் கொண்ட OneUI 9 மூலம் இந்த கேலக்ஸி அல்ட்ரா வாட்ச் 9 மாடல் இயங்குகிறது.
அதேபோல் இதன் 44mm அளவு கொண்ட மாடல் 445எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் 40mm அளவு கொண்ட மாடல் 390எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance), 5ATM+, ஆண்ட்ராய்டு 13, MIL-STD-810H புரொடெக்சன் போன்ற அம்சங்களுடன் இந்த கேலக்ஸி அல்ட்ரா 9 மாடல் வெளியாகி உள்ளது.
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உடன் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 9 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எல்டிஇ, புளூடூத் 6.0, வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.

துல்லியமான உடல்நலக் கண்காணிப்பிற்காக, இதில் டெம்பரேச்சர் சென்சார், ஆக்சிலரோமீட்டர், பாரோமீட்டர், கைரோஸ்கோப், ஜியோமேக்னடிக் சென்சார் ஆகியவை உள்ளன. மேலும் ஹார்ட் ரேட் மானிட்டரிங், பயோஎலக்ட்ரிக்கல் இம்பிடென்ஸ் அனாலிசிஸ் சென்சார் (bioelectrical impedance analysis sensor) போன்ற பல அம்சங்கள் உள்ளன.
விலை மற்றும் விற்பனை
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 9 மாடலின் ஆரம்ப விலை ரூ.38,999-ஆக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 ஆரம்ப விலை ரூ.69,999-ஆக உள்ளது.
விரைவில் இந்த இரண்டு ஸ்மார்ட் வாட்ச் மாடல்களும் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications