Home
Gadgets

Samsung கேலக்ஸி வாட்ச் 8 மற்றும் வாட்ச் 8 கிளாசிக் மாடல் இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 (Samsung Galaxy Watch 8) மற்றும் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 கிளாசிக் (Samsung Galaxy Watch 8 Classic) மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8, வாட்ச் 8 கிளாசிக் அம்சங்கள் (Samsung Galaxy Watch 8, Watch 8 Classic Specifications): ஒன் யுஐ 8.0 வாட்ச் (Wear OS 6) மூலம் இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களும் இயங்குகின்றன. அதுவும் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 மாடல் ஆனது 40mm மற்றும் 44mm டயல் விருப்பங்களில் வருகிறது. பின்பு வாட்ச் 8 கிளாசிக் ஆனது 46mm டயல் விருப்பத்தில் கிடைக்கிறது.

Samsung கேலக்ஸி வாட்ச் 8 இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை?

அதேபோல் சாம்சங் 8 கிளாசிக் மாடல் ஆனது ஸபையர் கிளாஸ் கோட்டிங் (Sapphire glass coating) மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட் வாட்ச் மாடல்கள் 3000 நட்ஸ் பீக் பிரைட்னஸ் வசதி கொண்ட AMOLED டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளன.

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி 8 கிளாசிக் மாடல் ஆனது 438x438 பிக்சல்கள் கொண்ட 1.34-இன்ச் டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. அதேசமயம் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8-இன் 40mm வேரியண்ட் 438x438 பிக்சல்ஸ் கொண்ட 1.34-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவந்தது. மேலும் இதன் 44mm வேரியண்ட் மாடல் ஆனது 480×480 பிக்சல்ஸ் கொண்ட 1.47-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது.

எக்ஸ்நோஸ் டபிள்யூ1000 (Exynos W1000) சிப் உடன் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 மற்றும் வாட்ச் 8 கிளாசிக் மாடல்கள் வெளிவந்துள்ளன. பின்பு சாம்சங் வாட்ச் 8 கிளாசிக் மாடல் ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 மாடல் ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உடன் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 கிளாசிக் ஆனது 445mAh பேட்டரியை கொண்டுள்ளது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8-இன் 40mm வேரியண்ட் 325mAh பேட்டரி வசதியும், இதன் 44mm வேரியண்ட் 435mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளன. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச மாடல்களும் IP68 ரேட்டிங் மற்றும் MIL-STD-810H சான்றிதழ் உடன் வெளிவந்துள்ளன.

சாம்சங் பயோஆக்டிவ் சென்சார் Samsung BioActive Sensor), ஆப்டிகல் பயோ-சிக்னல் சென்சார் (optical bio-signal sensor), கைரோஸ்கோப் சென்சார், ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic sensor), லைட் சென்சார், டெம்ப்ரேச்சர் சென்சார் (Temperature Sensor), 3D ஹால் சென்சார் உள்ளிட்ட பல சென்சார் வசதிகள் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் உள்ளன.

ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Heart Rate Monitoring), எலக்ட்ரோ கார்டியோகிராம், ஸ்லீப் டிராக்கர் (Sleep Tracker), ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டரிங் (Stress Level Monitoring), போன்ற பல்வேறு உடற்பயிற்சி மற்றும் சுகாதார கண்காணிப்பு அம்சங்கள் இந்த சாம்சங் சாதனங்களில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 விலை

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 (Bluetooth, 40mm) மாடலின் விலை ரூ.32,999-ஆக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 (Bluetooth, 44mm) மாடலின் விலை ரூ.35,999-ஆக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 (LTE, 40mm) மாடலின் விலை ரூ.36,999-ஆக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 (LTE, 44mm) மாடலின் விலை ரூ.39,999-ஆக உள்ளது.

Samsung கேலக்ஸி வாட்ச் 8 இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை?

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 கிளாசிக் விலை

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 கிளாசிக் விலை (Bluetooth, 46mm) மாடலின் விலை ரூ.46,999-ஆக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 கிளாசிக் விலை (LTE, 46mm) மாடலின் விலை ரூ.50,999-ஆக உள்ளது.

கேலக்ஸி வாட்ச் 8 ஆனது கிராஃபைட் மற்றும் சில்வர் நிறங்களில் வாங்க கிடைக்கும். அதேபோல் கேலக்ஸி வாட்ச் 8 கிளாசிக் ஆனது பிளாக் மற்றும் ஒயிட் நிறங்களில் வாங்க கிடைக்கும். ஜூலை 25 முதல் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் சாம்சங்.காம் தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனங்களின் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Watch 8 and Galaxy Watch 8 Classic launched in India: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X