ஆப்பிளுக்கே தூக்கலாக வந்த சாம்சங் வாட்ச் 6 சீரிஸ்.. 2GB ரேம், 16GB மெமரி வேற.. விலை எப்படி?
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2023 (Samsung Galaxy Unpacked 2023) நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் (Samsung Galaxy Watch 6 Series) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச்களுக்கு நிகரான பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 அம்சங்கள் (Samsung Galaxy Watch 6 Specifications): இந்த கேலக்ஸி வாட்ச் 44மிமீ மற்றும் 40மிமீ என்று 2 அளவில் வருகிறது. இதில் 44 மிமீ அளவு கொண்ட வாட்ச் 1.5 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது.

அதேபோல 40மிமீ அளவு கொண்ட வாட்ச் 1.3 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. வியர் ஓஎஸ் 4 (Wear OS 4) கொண்ட எக்ஸினோஸ் டபுள்யூ930 (Exynos W930) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. 2 ஜிபி ரேம் + 16 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. 44மிமீ வாட்ச் 425mAh பேட்டரி கொண்டிருக்கிறது.
40மிமீ வாட்ச் 300mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இதற்கு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 40 மணி நேரம் பேக்கப் கிடைக்கும். இதில் ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார், எலக்ட்ரிகல் ஹார்ட் சிக்னல் சென்சார், பயோஎலக்ட்ரிகல் இம்பெடன்ஸ் அனலைசிஸ் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. கிராஃபைட் (Graphite), சில்வர் (Sliver), கோல்டு (Gold) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் அம்சங்கள் (Samsung Galaxy Watch 6 Classic Specifications): இந்த கிளாசிக் வாட்ச் 47மிமீ மற்றும் 43மிமீ என்று 2 அளவில் வருகிறது. இதில் 47 மிமீ அளவு கொண்ட வாட்ச் 1.5 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது.
அதேபோல 43மிமீ அளவு கொண்ட வாட்ச் 1.3 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. வியர் ஓஎஸ் 4 (Wear OS 4) உடன் எக்ஸினோஸ் W930 (Exynos W930) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. 2 ஜிபி ரேம் + 16 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. 47மிமீ வாட்ச் 425mAh பேட்டரி கொண்டிருக்கிறது.
43மிமீ வாட்ச் 300mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இதற்கும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 40 மணி நேரம் பயன்படுத்தலாம். முந்தைய மாடலை போலவே, இவற்றிலும், ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார், எலக்ட்ரிகல் ஹார்ட் சிக்னல் சென்சார், பயோஎலக்ட்ரிகல் இம்பெடன்ஸ் அனலைசிஸ் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
சில்வர் (Sliver), பிளாக் (Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த 2 வேரியண்ட்களிலும் ப்ளூடூத் 5.3, IP68 வாட்டர் ரெசிஸ்டென்ட், என்எஃப்சி உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலையை பொறுத்தவரையில், சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 வேரியண்ட்களின் விலை முறையே ரூ.22,884 மற்றும் ரூ.24,524ஆகவும், சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 வேரியண்ட்களின் விலை முறையே ரூ.28,702 மற்றும் ரூ.32,722ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அமேசான் அல்லது பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருவது குறித்த அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


Click it and Unblock the Notifications








