இனி மொத்த ஆரோக்கியமும் ஒற்றை கையில்: நீடித்த ஆயுளுடன் Samsung Smart Watch அறிமுகம்!

|

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சாம்சங் Galaxy Unpacked நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 மற்றும் ஃப்ளிப் 4 மாடல்களை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா, விலைக்கேற்ற அம்சங்கள் இருக்கிறதா என பல கணிப்புகள் வெளியாகி வருகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், இந்த ஸ்மார்ட்போன்களுடன் மிகவும் எதிர்பார்த்த Samsung Galaxy Watch 5, Galaxy Watch 5 Pro மற்றும் Galaxy Buds2 Pro சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

Samsung Galaxy Watch 5 அம்சங்கள்

Samsung Galaxy Watch 5 அம்சங்கள்

Samsung Galaxy Watch 5 ஆனது அதன் முந்தைய மாடல் வாட்ச்சை விட வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் செயல்திறன் அடிப்படையில் பல மேம்பாடுகளை கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 தொடரில் இரண்டு மாடல்கள் இருக்கிறது. அது சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 மற்றும் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ ஆகும்.

sapphire crystal body வடிவமைப்புடன் நீடித்த உழைப்பு ஆதரவுகளை இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் கொண்டிருக்கிறது.

இரட்டை வேரியண்ட்களில் விற்பனை

இரட்டை வேரியண்ட்களில் விற்பனை

புதிய Samsung Galaxy Watch 5 ஆனது 40mm மற்றும் 45mm என இரண்டு வேரியண்ட்டில் கிடைக்கிறது.

அதேபோல் Samsung Galaxy Watch 5 Pro ஆனது 45mm என்ற வேரியண்ட்டில் கிடைக்கிறது.

Samsung Galaxy Watch 5 இன் 45mm வேரியண்ட் 1.4 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 40mm மாடல் 1.2 இன்ச் 396 x396 பிக்சல்கள் தீர்மான டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது.

1.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

1.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ மாடல் ஆனது அதீத தெளிவுத்திறனைக் கொண்டிருக்கிறது. ப்ரோ மாடல் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 450 x 450 தெளிவுத்திறன் உடன் வெளியாகி இருக்கிறது.இது 1.4 இன்ச் சூப்பர் AMOLED பேனலைக் கொண்டுள்ளது.

இரண்டு மாடல் ஸ்மார்ட்வாட்ச்களும் Exynos W920 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் 1.5 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் கிடைக்கும்.

சிறந்த பேட்டரி செயல்திறன்

சிறந்த பேட்டரி செயல்திறன்

Samsung Galaxy Watch 5 இன் 40mm வேரியண்ட் ஆனது 284 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. அதேபோல் 44mm வேரியண்ட் 410 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது.

Samsung Galaxy Watch 5 Pro இல் 550 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டு மாடல் ஸ்மார்ட் வாட்ச்களும் சிறந்த பேட்டரி செயல்திறனைக் கொண்டிருக்கிறது.

சிறந்த கண்காணிப்பு அம்சம்

சிறந்த கண்காணிப்பு அம்சம்

சாம்சங் ஸ்மார்ட்வாட்ச்களின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ECG ஆதரவு, இதய துடிப்பு மானிட்டர், பெண்கள் ஆரோக்கியம் என பல மேம்பட்ட ஆதரவுகளை வழங்குகிறது.

அதோடு தூக்க கண்காணிப்பு, இன்ஃப்ராரெட் டெம்பரேச்சர் சென்சார் உள்ளிட்ட ஆதரவுகளையும் கொண்டுள்ளது.

சிறந்த கண்காணிப்பு அம்சம், தனியுரிமை அம்சங்கள் என பல மேம்பாடுகள் என ப்ரீமியம் தரத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் வெளியாகி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 விலை

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 விலை

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 இன் அடிப்படை மாடல் விலை $279 (தோராயமாக ரூ.22,166), உச்சபட்ச வேரியண்ட் விலை $329 (தோராயமாக ரூ.26,130) ஆகும்.

அதேபோல் ப்ரோ மாடலின் விலை $449 (தோராயமாக ரூ.35,600) ஆகும்.

இதன் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்வாட்ச் குறிப்பிட்ட சந்தைகளில் ஆகஸ்ட் 10 முதல் முன்பதிவுக்கு கிடைக்கும் எனவும் ஆகஸ்ட் 26 முதல் விற்பனை தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

Samsung Galaxy Buds2 Pro அம்சங்கள்

Samsung Galaxy Buds2 Pro அம்சங்கள்

Samsung Galaxy Buds2 Pro அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 24-பிட் ஆடியோ ஆதரவுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இயர்பட்கள் 360 டிகிரி ஆடியோ மற்றும் HD குரல் அம்சங்களுடன் ஸ்டுடியோ தர ஆடியோ அனுபவத்தை வழங்கும் என சாம்சங் குறிப்பிட்டுள்ளது.

இதில் உள்ள நுண்ணறிவு செயலியானது தனித்துவமான முறையில் சுற்றுப்புற ஒலியை ரத்து செய்ய அனுமதிக்கிறது.

Samsung Galaxy Buds2 Pro விலை

Samsung Galaxy Buds2 Pro விலை

Samsung Galaxy Buds2 Pro ஆனது மேம்பட்ட பேட்டரி ஆயுளைக் கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ்களானது 515 mAh பேட்டரி கேஸ் மற்றும் 61 mAh பேட்டரியை கொண்டுள்ளது.

இந்த இயர்பட்ஸ்-ம் ப்ரீமியம் தர அனுபவத்தை வழங்கும் என்பது உறுதியான விஷயம். காரணம் இதன் விலை $229.99 (தோராயமாக ரூ.18,000) ஆகும்.

இந்த இயர்பட்ஸ்கள் போரா பர்ப்பிள், கிராஃபைட் மற்றும் வெள்ளை வண்ண விருப்பத்தில் ஆகஸ்ட் 26 முதல் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
samsung galaxy watch 5, watch 5 pro, galaxy buds2 pro launched: Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X