இனி சாம்சங் நேரம்: கேலக்ஸி வாட்ச் 3 அறிமுகம்., விலை என்ன தெரியுமா?

|

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 அமோலேட் டிஸ்ப்ளே, டைசன் ஓஎஸ் 5.5 உடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாட்ச் ஆனது 41 மிமீ, 45 மிமீ என்ற இரண்டு அளவில் வெளியிடப்பட்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3, 45 மிமீட்டர் வேரியண்டில் 360 x 360 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடனோடு கூடிய 1.4 அங்குல அமோலெட் டிஸ்ப்ளேயுடன் உள்ளது. அதேபோல் மற்றொரு அளவானது 41 மிமீட்டர் வேரியண்டில் 360 x 360 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடனோடு கூடிய 1.2 அங்குல அமோலெட் டிஸ்ப்ளே இதில் உள்ளது. இந்த இரண்டு மாடல்களும் கார்னிங் கொரில்லா க்ளாஸ் டிஎக்ஸ் பாதுகாப்பு அம்சத்தோடு வருகிறது.

புதிய ஸ்மார்ட்வாட்ச்

புதிய ஸ்மார்ட்வாட்ச்

சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆன கேலக்ஸி வாட்ச் 3 மாடலை கேலக்ஸி அன்ஓபன்ட் 2020 நிகழ்வில் அறிமுகம் செய்தது. இது இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது ஒன்று வைபை மற்றொன்று எல்டிஇ.

41 மிமீ மற்றும் 45 மிமீ

41 மிமீ மற்றும் 45 மிமீ

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 41 மிமீ அளவின் விலை 399 யூரோ தோராயமாக ரூ.30,000 என்ற விலையும் 45 மிமீ அளவின் விலை 429 யூரோ தோராயமாக ரூ. 32,000 என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது. அதேபோல் எல்டிஇ மாடல் விலை 41 மமீக்கு தோராயமாக ரூ.33600 மற்றும் 45 மிமீ-க்கு ரூ.35900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மிஸ்டிக் சில்வர் மற்றும் மிஸ்டிக் பிளாக்

மிஸ்டிக் சில்வர் மற்றும் மிஸ்டிக் பிளாக்

கேலக்ஸி வாட்ச் 3, 41 மிமீ மிஸ்டிக் ப்ரான்ஸ் மற்றும் மிஸ்டிக் சில்வர் வண்ணத்திலும், 45 மிமீ பயன்பாடு மிஸ்டிக் சில்வர் மற்றும் மிஸ்டிக் பிளாக் நிறத்திலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அம்சம்: புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7, எஸ்7+ அறிமுகம்!இதுவரை இல்லாத அம்சம்: புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7, எஸ்7+ அறிமுகம்!

ஆகஸ்ட் 6 முதல் கிடைக்கும்

ஆகஸ்ட் 6 முதல் கிடைக்கும்

மேலும் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் இன்று ஆகஸ்ட் 6 முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. கேலக்ஸி வாட்ச்சின் டைட்டானியம் தயாரிப்பு இந்தாண்டுக்குள் கிடைக்கும் என தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 விவரக்குறிப்புகள்

கேலக்ஸி ஸமார்ட் வாட்சில் சுழற்றக்கூடிய பெசல்கள் உள்ளது. இது ஆண்ட்ராய்டு 5.0, 1.5 ஜிபி ரேம்மிற்கு மேற்பட்ட சாதனங்களுடன் இயக்குவதற்கு இணக்கமாக இருக்கும். இதில் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னெல் ஸ்டோரேஜ் வசதியோடு உள்ளது. இதில் ப்ளூடூத், வைபை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

340 எம்ஏஹெச் பேட்டரி

340 எம்ஏஹெச் பேட்டரி

45 மிமீ அளவில் மாடலில் 247 எம்ஏஹெச் பேட்டரி, 41 மிமீ அளவில் 340 எம்ஏஹெச் பேட்டரியும் உள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தோடு கிடைக்கும் இந்த வாட்ச்சில் 56 மணிநேரங்கள் வரை பேட்டரி ஆயுள் நீடிக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy Watch 3 Lauches with Corning Gorilla Glass DX

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X