Home
Gadgets

லேப்டாப்களை தூக்கி சாப்பிடும் சாம்சங் கேலக்ஸி டேப்கள்! 16GB ரேம், 1TB மெமரி! விலையும் கொஞ்சம் அதிகம்!

ஒரு லேப்டாப்புக்கு நிகரான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் சாம்சங் (Samsung) நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 9 சீரிஸ் (Samsung Galaxy Tab S9 Series) டேப்களின் விலை மற்றும் அம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேக போல்டபிள் போன்கள், வாட்ச்கள், டேப்லெட்கள் வரும் ஜூலை 26ஆம் தேததி நடக்கும் சாம்சங் கேலக்ஸி அன்பேக்ட் 2023 (Samsung Galaxy Unpacked 2023) நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவிருக்கின்றன. இதில் பலரது கவனத்தை இழுத்திருக்கும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 9 சீரிஸ் குறித்த விவரங்கள் இப்போது, வெளியாகி இருக்கின்றன.

லேப்டாப்களை தூக்கி சாப்பிடும் சாம்சங் டேப்கள்! 16GB ரேம், 1TB மெமரி!

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 9 சீரிஸ் டேப்களில் மூன்று வேரியண்ட்கள் உள்ளன. அந்த வகையில், சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 9 (Samsung Galaxy Tab S9), சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 9 பிளஸ் (Samsung Galaxy Tab S9 Plus), சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 9 அல்ட்ரா (Samsung Galaxy Tab S9 Ultra) ஆகிய மூன்றும் விற்பனைக்கு வரவிருக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 9 அம்சங்கள்: இந்த டேப் 11 இன்ச் டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. 13 எம்பி மெயின் மற்றும் 12 எம்பி செல்பீ கேமரா வருகிறது. குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் வருகிறது.

8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என்று 2 வேரியண்ட்களில் வருகிறது. 8,400mAh பேட்டரி வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 9 டேப்பின் விலையை பொறுத்தவரையில், 8ஜிபி வேரியண்ட் ரூ. 84,069ஆகவும், 12 ஜிபி வேரியண்ட் ரூ.94,929 ஆகவும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 9 பிளஸ் அம்சங்கள்: இந்த டேப் 12.4 இன்ச் டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. 13 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 12 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் வருகிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. 10,090mAh பேட்டரி வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 9 பிளஸ் டேப்பின் விலையை பொறுத்தவரையில், ரூ.1,03,973 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 9 அல்ட்ரா அம்சங்கள்: இந்த டேப் 14.6 இன்ச் டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. 13 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 12 எம்பி செல்பீ அதோடு 12 எம்பி அல்ட்ரா கேமரா வருகிறது.

குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் வருகிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் வருகிறது. 10,11,200mAh
பேட்டரி வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 9 பிளஸ் டேப்பின் விலையை பொறுத்தவரையில், ரூ. 1,23,875 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S9 Series With S9, S9 Plus, S9 Ultra Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X