Home
Gadgets

ஆத்தாடி ஆத்தா.. ரூ.39,500 விலை குறைப்பு.. 8400mAh பேட்டரி.. 13MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 (Amazon Great Indian Festival Sale 2025) என்னும் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 (Samsung Galaxy Tab S9) மாடலானது, கிட்டத்தட்ட பாதிக்குப்பாதி விலைக்கு வாங்க கிடைக்கிறது. நேரடியாக விலை குறைப்பு, பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட் போக நம்ப முடியாத பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 மாடலின் விலை, டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.72,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.33,000 நேரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இப்போது, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் ரூ.39,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதுபோக ரூ.5,500 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆத்தாடி ஆத்தா.. ரூ.39,500 விலை குறைப்பு.. 8400mAh பேட்டரி.. எந்த டேப்?

இந்த டிஸ்கவுண்ட்டை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பெற்று கொள்ளலாம். கூடுதலாக, ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த சலுகைகளையும் சேர்த்தால் மொத்தமாக ரூ.39,500 விலை கம்மியாக வாங்க கிடைக்கிறது. இதில் பேங்க் டிஸ்கவுண்ட் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

ஈஎம்ஐ ஆப்ஷன் வேண்டாம் என்றால், அதே ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.5,250 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. அதாவது, ரூ.250 டிஸ்கவுண்ட் குறைக்கப்பட்டு கிடைக்கிறது. எப்படி பார்த்தாலும், இந்த விலை கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி விலையாகவே இருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 மாடலின் முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 அம்சங்கள் (Samsung Galaxy Tab S9 Specifications): இந்த சாம்சங் டேப்லெட்டில் 11 இன்ச் டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 2K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது. சினிமாடிக் அனுபவம் கொடுக்க 16:10 அஸ்பெக்ட் ரேசியோ கிடைக்கிறது.

ஆட்டோ போகஸ் (Auto Focus) கொண்ட 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைடு செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 5.1.1 (One UI 5.1.1) கிடைக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் கிடைக்கிறது. செக்யூரிட்டிக்கு சாம்சங் கிநாக்ஸ் (Samsung Knox) கிடைக்கிறது.

எஸ் பென் (S Pen) மட்டுமல்லாமல், எஸ் பென் கிரியேட்டர் எடிஷன் புக் கவர் கீபோர்ட், ஸ்மார்ட் புக் கவர், அவுட்டோர் கவர் போன்ற பல்வேறு அசசரிகள் கிடைக்கின்றன. இதில் எஸ் பென்னுக்கு IP68 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. அதேபோல சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 டேப்லெட்டுக்கும் IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

ஆடியோவில் பிரீமியமாக இருக்கிறது. ஏனென்றால், குவாட் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Quad Stereo Speakers) மட்டுமல்லமால், ஏகேஜி (AKG) ஆடியோ மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. 8400mAh பேட்டரி கிடைக்கிறது. பெய்ஜ் (Beige) மற்றும் கிராஃபைட் (Graphite) கலர்களில் கிடைக்கிறது. வை-பை 6இ, ப்ளூடூத் வி5.3 கனெக்டிவிட்டி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S9 Available at Rs 33499 in Amazon from the introductory price of Rs 72999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X