Samsung-ஆ கொக்கா.. ஸ்மார்ட்போன் விலையில் 10.4' இன்ச் டிஸ்பிளே டேப்லெட்.. விலை ரொம்ப கம்மி.. என்ன மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய டேப்லெட் (Tablet) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த டேப்லெட் சாதனம் Samsung Galaxy Tab S6 Lite (2024) என்ற பெயரில் 10.4" இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. இது பற்றிய விபரம் இதோ.
சாம்சங் கேலக்ஸி டேப் S6 லைட் (2024) - Samsung Galaxy Tab S6 Lite (2024) என்ற மாடல் பெயருடன் லைட் வெர்ஷன் டேப்லெட் சாதனமாக S6 வரிசையில் சேர்ந்துள்ளது. இந்த டேப்லெட் சாதனத்தின் பெயர் குறிப்பிடுவது போல் இதுவொரு லைட் வேரியண்ட் மாடல் என்பதனால், இதன் அம்சங்களும், விலையும் எல்லோரும் அணுகுவது போன்ற எளிமையான விலை புள்ளியை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் S6 லைட் (2024):
இந்த Samsung Galaxy Tab S6 Lite (2024) டேப்லெட் சாதனத்தில் இடம்பெறும் அம்சம் மற்றும் விலை விபர தகவலை இப்போது பார்க்கலாம். இந்த டேப்லெட் சாதனம் 10.4" இன்ச் அளவு கொண்ட 2000 x 1200 பிக்சல் உடைய WUXGA+ டிஸ்பிளேவை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. இது 60Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் S பென் ஆதரவையும் பெறுகிறது. S பென் 4096 ப்ரெஷர் சென்சிட்டிவிட்டி உடன் வரும்.
இந்த டேப்லெட் சாதனம் முன்பக்கத்தில் 5MP செபி கேமராவுடன் பின்பக்கத்தில் 8MP கொண்ட ரியர் கேமராவை கொண்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் S6 லைட் (2024) சாதனம் 2 வேரியண்ட் விருப்பங்களில் வருகிறது. ஒன்று வைஃபை (Wi-Fi) மாடலாகவும் மற்றொன்று வோல்ட்டி (LTE) மாடலாகவும் வருகிறது. சாம்சங் கேலக்ஸி டேப் S6 லைட் (2024) Wi-Fi மாடல் 465g எடையுடன் வருகிறது.
அதேபோல், சாம்சங் கேலக்ஸி டேப் S6 லைட் (2024) (LTE) மாடல் 467g எடையுடன் வருகிறது. இந்த டேப்லெட் சாதனம் எக்சினோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் உடன் சக்தி பெறுகிறது. இந்த டேப்லெட் சாதனம் 4GB ரேம் உடன் 128GB | 256GB ஸ்டோரேஜ் விருப்பங்களை பெறுகிறது. இந்த டேப்லெட் சாதனம் 1TB வரையிலான எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவையும் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி டேப் S6 லைட் (2024) விலை:
இந்த சாம்சங் கேலக்ஸி டேப் S6 லைட் (2024) டேப்லெட் சாதனம் டூயல் ஸ்பீக்கர் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்பீக்கர்கள் AKG மூலம் டியூன் செய்யப்பட்டுள்ளது. இது டால்பி அட்மாஸ் ஆதரவையும் ஆதரிக்கிறது. இந்த சாம்சங் டேப்லெட் (Samsung Tablet) சாதனம் 7040mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் மூலம் 14 மணி நேர வீடியோ பிளே நேரத்தை வழங்குகிறது.
இந்த டேப்லெட் சாதனம் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான One UI 6.1 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது சாம்சங்கின் பிரத்தியேகமான க்நாக்ஸ் செக்யூரிட்டி (Knox security) அம்சத்தையும் கொண்டுள்ளது. இது வரும் மார்ச் 28ம் தேதி தைவானில் ஆக்ஸ்போர்ட் க்ரேய் (Oxford Gray), சிஃப்பான் பிங்க் (Chiffon Pink), மற்றும் மின்ட் (Mint) நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி டேப் S6 லைட் (2024) டேப்லெட் சாதனத்தின் 4GB+64GB (Wi-Fi) மாடல் இந்திய மதிப்பின்படி, ரூ. 28,375 விலையில் வெளிவரும். அதேபோல், 4GB+128GB (Wi-Fi) மாடல் ரூ. 30,980 விலையிலும்; இதன் 4+64GB (LTE) மாடல் ரூ. 33,583 விலையிலும் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








