Home
Gadgets

களமிறங்கும் 10.5 இன்ச் அமோலேட் டிஸ்ப்ளே சாம்சங் கேலக்ஸி டேப் S4.!

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் , அதன் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட் போன்-ஐ ஆகஸ்ட் 9ல் நடைபெறவுள்ள நியூயார்க் விழா ஒன்றில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

By Sharath
களமிறங்கும் 10.5 இன்ச் அமோலேட் டிஸ்ப்ளே சாம்சங் கேலக்ஸி டேப் S4.!

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் , அதன் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட் போன்-ஐ ஆகஸ்ட் 9ல் நடைபெறவுள்ள நியூயார்க் விழா ஒன்றில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இத்துடன் நியூயார்க் விழாவில் சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் S4 மாடல்களை வெளியிடுமென்று தகவல்கள் வலைத்தளம் முழுதும் கசிய தொடங்கியுள்ளது.

சாம்சங் பயனாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக, சாம்சங் கேலக்ஸி டேப் S4 பற்றிய வதந்திகள் உண்மை என்று உறுதிப்படுத்தும் விதமாக அதனுடைய தகவல் வீடியோ தற்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

வீடியோவில் டேப்லட்டின் கருப்பு மற்றும் வெள்ளை நிற வெறியன்ட்கள் இடம்பெறுகின்றது. வீடியோவின் படி, டேப்பின் முன் மற்றும் பின் இருபுறமும் கண்ணாடி குழுவுடன் இரும்பு கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் முந்தைய மாடலில் உள்ள ஹோம் பட்டன்-ஐ நீக்கியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் S4 ஒரு 16 மெகா பிக்சல் பின் கேமரா மற்றும் வீடியோ காலிங்காக 8 மெகா பிக்சல் கேமராவுடன் 7300mah பேட்டரியுடன் களமிறங்குகிறது.

2560 × 1600 ரெசொலூஷன் மற்றும் 16:10 விகிதத்துடன் 10.5 இன்ச் அமோலேட்(AMOLED) டிஸ்ப்ளே தொடுதிரையுடன் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 ப்ராசசர் மற்றும் 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்தச் டேப் 64 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் S4 இல் யூஎஸ்பி சி போர்ட் உடன்கூடிய டெக்ஸ் சேவையுடன் வருகிறது, இச்சேவை உங்கள் டேப் மானிட்டருடன் இனைத்து கம்ப்யூட்டர் போன்ற அனுபவத்தை அளிக்கிறது. சமீபத்திய அறிக்கை படி சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி டேப் S4 மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட் 9 உடன் நியூயார்க் விழாவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S4 spotted in hands-on video, may launch with Galaxy Note 9 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X