சாம்சங் அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. 11600எம்ஏஎச் பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? என்ன விலை?
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ் (Samsung Galaxy Tab S12 Plus) மற்றும் கேலக்ஸி டேப் எஸ்12 அல்ட்ரா (Samsung Galaxy Tab S12 Ultra) ஆகிய இரண்டு டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த டேப்லெட் மாடல்கள் வெளியாகி உள்ளன. இப்போது இந்த டேப்லெட் மாடல்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 12 அல்ட்ரா அம்சங்கள்: 14.6-இன்ச் Dynamic AMOLED 2எக்ஸ் டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 நிட்ஸ் பிரைட்னஸ், 2960 x 1848 பிக்சல்ஸ் உள்ளிட் பல அம்சங்கள் உள்ள. பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் வெளியாகி உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த சாம்சங் டேப்டெல் கிரே மற்றும் சில்வர் நிறங்களில் வாங்க கிடைக்கும்.

ONE UI 9 சார்ந் சார்ந்த ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் மூலம் இந்த டேப்லெட் இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 12 அல்ட்ரா மாடல் வெளியாகி உள்ளது. நீங்கள் 2டிபி மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
13எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 12 அல்ட்ரா மாடல். 12எம்பி செல்பி கேமரா, எஸ் பெண் சப்போர்ட், ஐபி68 ரேட்டிங், 11600எம்ஏஎச் பேட்டரி, 45W சார்ஜிங், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், மீடியாடெக் டைனம்சிட்டி 9500 சிப்செட் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 12 அல்ட்ரா விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 12 அல்ட்ரா (வைஃபை) மாடலின் விலை ரூ.1,49,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 12 அல்ட்ரா (வைஃபை) மாடலின் விலை ரூ.1,69,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 12 அல்ட்ரா (5ஜி) மாடலின் விலை ரூ.1,64,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 12 அல்ட்ரா (5ஜி) மாடலின் விலை ரூ.1,84,999-ஆக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ் அம்சங்கள்: 12.6-இன்ச் Dynamic AMOLED 2எக்ஸ் டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 நிட்ஸ் பிரைட்னஸ், 2800 x 1752 பிக்சல்ஸ் உள்ளிட் பல அம்சங்கள் உள்ள.
ONE UI 9 சார்ந் சார்ந்த ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் மூலம் இந்த டேப்லெட் இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ் மாடல் வெளியாகி உள்ளது. நீங்கள் 2டிபி மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
13எம்பி ரியர் கேமரா கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ் மாடல். 12எம்பி செல்பி கேமரா, எஸ் பெண் சப்போர்ட், 10600எம்ஏஎச் பேட்டரி, 45W சார்ஜிங், மீடியாடெக் டைனம்சிட்டி 9500 சிப்செட் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. இந்த சாம்சங் டேப்டெல் கிரே மற்றும் சில்வர் நிறங்களில் வாங்க கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ் அல்ட்ரா விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ் (வைஃபை) மாடலின் விலை ரூ.1,29,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ் (வைஃபை) மாடலின் விலை ரூ.1,49,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ் (5ஜி) மாடலின் விலை ரூ.1,44,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்12 பிளஸ் (5ஜி) மாடலின் விலை ரூ.1,64,999-ஆக உள்ளது.
அக்டோபர் 7-ம் தேதி இந்த டேப்லெட் மாடல்கள் விற்பனைக்கு வரும். சாம்சங்.காம் மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் இந்த டேப்லெட் மாடல்கள் வாங்க கிடைக்கும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடல்களை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
