மிரளவிட்ட சாம்சங்.. 11600mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. புது S11 சீரிஸ் அறிமுகம்!
சாம்சங் நிறுவனத்தின் புதிய மற்றும் பிரீமியமான சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 (Samsung Galaxy Tab S11) மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 அல்ட்ரா (Samsung Galaxy Tab S11 Ultra) ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அப்கிரேட் செய்யப்பட்ட கேலக்ஸி ஏஐ பீச்சர்கள், பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் சிப்செட் போன்றவற்றில் பின்னியெடுக்கின்றன.
ஸ்மார்டர் மல்டி டாஸ்கிங், அட்வான்ஸ்டு ஏஐ, எஸ் பென் ரீடிசைன் மற்றும் ஸ்லிம் பாடியில் அதிக பேட்டரி கேபாசிட்டி போன்று ஒட்டுமொத்தமாக பட்டையை கிளப்புகின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 சீரிஸ் மாடல்களின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது, தெரிந்து கொள்ளலாம்.

கேலக்ஸி ஏஐ பீச்சர்கள் (Galaxy AI Features): கேலக்ஸி ஏஐ (Galaxy AI) பீச்சர்கள் மற்றும் எஸ் பென் (S Pen) அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் டெக்ஸ் (Samsung DeX) மூலம் ஸ்மார்ட் மல்டிடாஸ்கிங் சப்போர்ட் கிடைக்கிறது. இதில் டூயல் ஸ்கிரீன் செட்டப், கஸ்டமைசபிள் வொர்க்ஸ்பேஸ் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.
சாம்சங் டெக்ஸ் மூலம் டிவி உள்ளிட்ட எக்ஸ்டர்னல் டிவைஸ்களிலும் ஸ்கிரீன் ஷேர் செய்ய முடியும். மேலும் வழக்கமாக கிடைக்கும் ஜெமினி லைவ் (Gemini Live), ரைட்டிங் அசிஸ்ட் (Writing Assist), டிராயிங் அசிஸ்ட் (Drawing Assist), சர்கிள் டூ சர்ச் (Circle to Search), குயிக் டூல்ஸ் (Quick Tools) மற்றும் ஸ்டிக்கி நோட் (Sticky Note) வருகின்றன. இதில் பல்வேறு பீச்சர்கள் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளன.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 சீரிஸ் அம்சங்கள் (Samsung Galaxy Tab S11 Series Specifications): கேலக்ஸி எஸ்11 மாடலில் 11.0 இன்ச் (2560 x 1600 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் எச்பிஎம் மோட் கிடைக்கிறது.

கேலக்ஸி எஸ்11 அல்ட்ரா மாடலில் 14.6 இன்ச் (2960 x 1848 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஆன்டி ரெஃப்ளெக்சன் (Anti Reflection) சப்போர்ட் கிடைக்கிறது. 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் எச்பிஎம் மோட் வழக்கம்போல கிடைக்கிறது.
கேலக்ஸி எஸ்11 மாடலில் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைடு செல்பீ கேமரா கிடைக்கிறது. எஸ்11 அல்ட்ரா மாடலில் 13 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயர் ரியர் சிஸ்டம் உள்ளது. 12 எம்பி அல்ட்ரா வைடு செல்பீ கேரா கிடைக்கிறது. 2 மாடல்களிலும் தலா 3 வேரியண்ட்கள் இருக்கின்றன.
கேலக்ஸி எஸ்11 மாடலில் 12 ஜிபி + 512 ஜிபி, 12 ஜிபி + 256 ஜிபி மற்றும் 12 ஜிபி + 128 ஜிபி ஆகிய வேரியண்ட்கள் வருகின்றன. எஸ்11 அல்ட்ரா மாடலில் 16 ஜிபி + 1 டிபி, 12 ஜிபி + 512 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி ஆகிய வேரியண்ட்கள் இருக்கின்றன. கேலக்ஸி எஸ்11 மாடலில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8,400mAh பேட்டரி கிடைக்கிறது.

எஸ்11 அல்ட்ரா டேப்லெட்டில் 11,600mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. அதேபோல எஸ்11 மாடலில் 5ஜி மற்றும் வை-பை 6 கனெக்டிவிட்டியும், எஸ்11 அல்ட்ராவில் 5ஜி மற்றும் வை-பை 7 கனெக்டிவிட்டியும் இருக்கிறது. இதுவரையில் பார்த்த பீச்சர்களை தவிர மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.
ஆகவே, இந்த டேப்லெட்களில் ஆண்ட்ராய்டு 16.0 (Android 16.0) மற்றும் ஒன் யுஐ 8 (One UI 8) கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 9400 பிளஸ் (MediaTek Dimensity 9400+) சிப்செட் கிடைக்கிறது. குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) வருகின்றன. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இப்போது விலை விவரங்களை பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 மாடலின் ஆரம்ப விலை 799 அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.70,421) இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 அல்ட்ரா மாடலின் ஆரம்ப விலை 1199 அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.1,05,690) இருக்கிறது. இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் அப்டேட் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications