தலை சுத்துது ப்ரோ.. முழுசா ரூ.1.5 லட்சம்.. கேலக்ஸி S25 அல்ட்ராவை விட அதிகம்.. முரட்டு ரேட்ல Tab S11 சீரிஸ்!
இந்திய மார்கெட்டில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 (Samsung Galaxy Tab S11) மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 அல்ட்ரா (Samsung Galaxy Tab S11 Ultra) ஆகிய மாடல்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதோடு அறிமுக சலுகைகள் போக ப்ரீ-ஆர்டருக்கும் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனைவிட அதிமாக விலைக்கு இந்த மாடல்கள் கிடைக்க இருக்கின்றன. மீடியாடெக் டைமன்சிட்டி 9400பிளஸ் சிப்செட் கொடுக்கும் இந்த மாடல்களின் விலை விவரங்கள் இதோ.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 வை-பை வேரியண்ட் (Samsung Galaxy Tab S11 Wi-Fi Variant): 12 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.80,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.85,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.96,999ஆகவும் இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 5ஜி வேரியண்ட் (Samsung Galaxy Tab S11 5G Variant): 12 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.93,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.98,999ஆகவும் இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 அல்ட்ராவில் தலா 2 வேரியண்ட்கள் மட்டுமே இருக்கின்றன.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 அல்ட்ரா வை-பை வேரியண்ட் (Samsung Galaxy Tab S11 Ultra Wi-Fi Variant): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,10,999ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோர்ஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,21,999ஆக இருக்கிறது. 5ஜி வேரியண்ட்டின் விலை அல்ட்டா பிரீமிமாக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 அல்ட்ரா 5ஜி வேரியண்ட் (Samsung Galaxy Tab S11 Ultra 5G Variant): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,24,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.1,35,999ஆக இருக்கிறது. இந்த விலை சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவை விட அதிமாக இருக்கிறது.
சாம்சங்.காம் (Samsung.com) தளத்தில் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. அதேபோல சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்கள், ரீடெயில் ஸ்டோர்கள் ஆகியவற்றிலும் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது. அல்ட்ரா பிரீமியம் விலையாக இருப்பதால், பல்வேறு அறிமுக சலுகைகளுடன் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது. அதேபோல அப்கிரேட் செய்யப்பட்ட புதிய ஏஐ எஸ் பென் (AI S Pen) கிடைக்கிறது.
ப்ரீ-ஆர்டர் சலுகைகள் (Pre-order Offers): இப்போது ப்ரீ-ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட டிராவல் அடாப்டர் இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதேபோல 9 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையில் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 மாடல்கள் கிடைக்கிறது. 24 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ குறிப்பிட்ட கார்டுகளுக்கு கிடைக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 மாடல்களில் டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. அப்கிரேட் செய்யப்பட்ட ஜெமினி ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன. மீடியாடெக் டைமன்சிட்டி மீடியாடெக் டைமன்சிட்டி 9400பிளஸ் சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைப்பதால், லேட்டஸ்ட் யுஐ கிடைக்கும். கிட்டத்தட்ட லேப்டாப் மாடல்களுக்கு நிகரான பீச்சர்களை கொடுத்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications








