Samsung-ன் 2 புதிய 5G டேப்லெட்.. Google Circle to Search, 10090mAh பேட்டரி, 13.1-இன்ச் டிஸ்பிளே.. என்ன விலை?
சாம்சங் (Samsung) நிறுவனம் கூடிய விரைவில் 2 புதிய டேப்லெட்களை அறிமுகப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவைகள் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ (Galaxy Tab S10 FE) மற்றும் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ் (Galaxy Tab S10 FE Plus) மாடல்களாக இருக்கலாம்.
இவ்விரண்டும் கடந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி டேப் எஸ்9 எப்இ சீரீஸ்-ன் (Samsung Galaxy S9 FE Series) அப்கிரேடெட் வெர்ஷன்களாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இதற்கிடையில் இவ்விரு டேப்லெட்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ, எஸ்10 எப்இ பிளஸ்: என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ மாடலில் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 10.9-இன்ச் WUXGA+ IPS LCD டிஸ்பிளே
- சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ் மாடலில் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 13.1-இன்ச் WQXGA+ டிஸ்பிளே
- இரண்டு டேப்லெட்டுகளும் எக்ஸினோஸ் 1580 சிப்செட் மூலம் இயக்கப்படலாம்
- இரண்டுமே ஆட்டோஃபோகஸ் மற்றும் LED ஃபிளாஷ் கொண்ட 13எம்பி ப்ரைமரி கேமராவை கொண்டிருக்லாம்
- முன்பக்கத்தில் 120-டிகிரி FoV உடனான 12MP செல்பீ கேமரா இருக்கலாம்
- டால்பி அட்மோஸ் உடனான டூயல் ஸ்பீக்கர்கள்
- ஐபி 68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ரேட்டிங்
- எஸ் பென் ஆதரவு
- கூகுளின் சர்க்கிள் டூ சேர்ச் ஏஐஅம்சம்.
- 128GB / 256GB ஸ்டோரேஜ்
- 2டிபி வரை மைக்ரோஎஸ்டி கார்டு ஆதரவு
- சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ மாடலில் 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 8,000mAh பேட்டரி இடம்பெறலாம்
- சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ் மாடலில் 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பெரிய 10,090mAh பேட்டரி இடம்பெறலாம்
என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ வைஃபை ஒன்லி வேரியண்ட்டின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.53,600 க்கு அறிமுகம் செய்யப்படலாம். 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.62,800 க்கு அறிமுகம் செய்யப்படலாம்
5ஜி நெட்வொர்க் ஆதரவுடன் வரும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ, எஸ்10 எப்இ பிளஸ் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.62,800 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இதேபோல 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.72,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம்
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ் மாடலின் வைஃபை ஒன்லி வேரியண்ட்டின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.69,300 க்கு அறிமுகம் செய்யப்படலாம். 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.78,500 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
5ஜி நெட்வொர்க் ஆதரவுடன் வரும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ, எஸ்10 எப்இ பிளஸ் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.78,500 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இதேபோல 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.87,800 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








