Home
Gadgets

அமேசான் அதிருது.. ரூ.4,000 டிஸ்கவுண்ட்.. 10.9 இன்ச் டிஸ்பிளே.. 8,000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பிரீமியம் மாடல்களாக களமிறங்கிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ (Samsung Galaxy Tab S10 FE) மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ் (Samsung Galaxy Tab S10 FE+) டேப்லெட்களின் விற்பனை தொடங்கி இருக்கிறது. ரூ.4,000 டிஸ்கவுண்ட் போக கிடைப்பதால், சாம்சங் பிரியர்கள் குஷியாகிவிட்டனர். இந்த டேப்லெட்களின் விலை, விற்பனை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ அம்சங்கள், விலை (Samsung Galaxy Tab S10 FE Specifications, Price): இந்த சாம்சங் டேப்லெட்டில் 10.9 இன்ச் (2304 x 1440 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது. என்ஸினோஸ் 1580 (Exynos 1580​) சிப்செட் கிடைக்கிறது.

அமேசான் அதிருது.. ரூ.4,000 டிஸ்கவுண்ட்.. 10.9 இன்ச் டிஸ்பிளே.. மாடல்?

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), 12 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் 13 எம்பி ரியர் கேமரா கிடைக்கிறது. 8,000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers), டைப்-சி போர்ட் (Type-C Port), எஸ் பென் (S Pen) சப்போர்ட் கிடைக்கிறது. வை-பை மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி உள்ளது.

இந்த டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி (Wi-Fi) மாடலின் விலை ரூ.42,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி (Wi-Fi) மாடலின் விலை ரூ.50,999 ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி (Wi-Fi + 5G) மாடலின் விலை ரூ.53,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி (Wi-Fi + 5G) மாடலின் விலை ரூ.61,999 ஆக இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ் அம்சங்கள், விலை (Samsung Galaxy Tab S10 FE+ Specifications, Price): இந்த டேப்லெட்டில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 13.1 இன்ச் (2304 x 1440 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே வருகிறது. ஆகவே, பெரிய டிஸ்பிளேவை இந்த பிளஸ் மாடல் பேக் செய்துள்ளது.

முந்தைய மாடலை போலவே ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் என்ஸினோஸ் 1580 சிப்செட்டை கொடுக்கிறது. ஆனால், கூடுதல் பேக்கப் வருகிறது. ஆகவே, 10,090mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கொண்ட செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

இந்த டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி (Wi-Fi) மாடலின் விலை ரூ.55,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி (Wi-Fi + 5G) மாடலின் விலை ரூ.63,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி (Wi-Fi) மாடலின் விலை ரூ.65,999ஆகவும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி (Wi-Fi + 5G) மாடலின் விலை ரூ.73,999ஆக இருக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ மாடல்களை அமேசான் (Amazon) மற்றும் சாம்சங்.காம் (Samsung.com) தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். எஸ்10 எப்இ மாடலுக்கு ரூ.4,000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் எஸ்10 எப்இ பிளஸ் மாடலுக்கு ரூ.5,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S10 FE And FE Plus Goes On Sale in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X