சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டீவ் 2 இல் என்ன சிறப்பம்சம் இருக்கு தெரியுமா?

|

கொரிய நிறுவனமான சாம்சங், தனது கேலக்ஸி டேப் ஆக்டீவ் 2-யை ரூ. 50,990 என்ற விலை நிர்ணயத்தில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 2019 மார்ச் மத்தியில் நாடு முழுவதும் விற்பனைக்கு வர உள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டீவ் 2 இல் என்ன சிறப்பம்சம் இருக்கு தெரியுமா?

ராணுவம், லாஜிஸ்டிக்ஸ், தயாரிப்பு துறை, கட்டிட பணி, சட்ட துறை, போக்குவரத்து போன்ற துறைகளை சேர்ந்த வல்லுனர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த டேப்லெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.அனுதின பணிகளின் இடையே தொடர்ந்து இணைப்பில் இருக்க இது பயன்படும்.

முக்கிய அம்சங்கள்:

முக்கிய அம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டீவ் 2 நீண்ட உழைப்பிற்கு ஏற்ற வடிவமைப்பை பெற்றுள்ளது. கட்டமைப்பு, தண்ணீர், தூசி, மழை மற்றும் சிக்கலான சுற்றுப்புற காரியங்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. பொருத்தமற்ற சூழ்நிலைகளில் கூட பயன்படுத்தும் வகையில், இதன் உடன் தண்ணீரை எதிர்கொள்ளும் எஸ் பென் அளிக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு:

வடிவமைப்பு:

MIL-STD-840 சான்றிதழ் பெற்ற இந்த டேப்லெட், IP68 சான்றிதழையும் பெற்று, மழை அல்லது பொருத்தமற்ற காலநிலை கொண்ட சூழ்நிலையில் பணியாற்றுபவர்களுக்கு ஒரு பெரிய திரையுடன் கூடிய டேப்லெட் பயன்பாட்டின் தேவையை பூர்த்தி செய்கிறது. வாகன அதிர்வுகள், விபத்து அதிர்வுகள், நீர் துளிகள், மழை, தூசி ஆகியவற்றை எதிர்கொள்கிறது. 1.5 மீட்டர் ஆழமுள்ள நீரில் 30 நிமிடங்கள் தாக்குபிடிக்கிறது. அதேபோல -40°C முதல் 80°C வரையிலான வெப்பநிலை மாறுபாட்டில் வைத்து கொள்ளலாம். அதேபோல -20°C முதல் 71°C வரையிலான வெப்பநிலை வேறுபாட்டில் செயலாற்றுகிறது.

மொத்தமாக பார்த்தால், உப்பு பனி, படியக்கூடிய தூசி, பறக்கும் தூசி, பனி, பெய்யும் மழை, புயல் மழை, நீரில் மூழ்குவது, பனி பொழிவு, அதிர்வு, பந்து போன்ற மோதல், நீர் துளி விழுதல், குறைந்த வெப்பநிலையில் வைப்பது, குறைந்த வெப்பநிலையில் செயல்படுத்துவது, உயர் வெப்பநிலையில் (நிரந்தரமாக, சூழ்ச்சி முறையில்), வெப்பநிலை தாக்கம் உள்ளிட்ட 21 விதமான சூழ்நிலைகளை தாக்குபிடிக்கிறது.

நாக்ஸ் பாதுகாப்பு மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரம்:

நாக்ஸ் பாதுகாப்பு மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரம்:

சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டீவ் 2 இல் பாதுகாப்பிற்கு ஏற்ற தரமான நாக்ஸ் பாதுகாப்பு தளம் அளிக்கப்பட்டுள்ளதால், மால்வேர் மற்றும் ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாப்பை அளிக்கிறது. இந்த டேப்லெட்டில் பயோமெட்ரிக் அங்கீகாரம், தகவல்களை பாதுகாக்கிறது. இது தவிர, முக அங்கீகாரமும் அளிக்கப்படுகிறது.

வழக்கமான டேப்லெட்களை விட இதன் ஆயுட்காலம் அதிகம், அதாவது 4 அல்லது அதற்கு அதிகமாக இருக்கும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் அறிக்கையில், இதன் பாதுகாப்பு விகிதம் 30% வரையுள்ள நிலையில் சாதாரண டேப்லெட்களில் 4% மட்டுமே உள்ளது.

கீபேட் மற்றும் ஏஆர் ஆதரவிற்கான போகோ பின்:

கீபேட் மற்றும் ஏஆர் ஆதரவிற்கான போகோ பின்:

இந்த டேப்லெட்டில் போகோ பின் இருப்பதால், பல்வேறு சாதனங்களை ஒரே நேரத்தில் இணைத்து சார்ஜ் செய்ய முடிகிறது. மேலும் ஒரு லேப்டாப் அல்லது கீபோர்டை இணைத்து பணியை இன்னும் எளிதாக்கவும் முடியும். மிகவும் குளிரான சூழ்நிலையில் கையில் உறை அணிந்து கொண்டு கூட இதை இயக்க முடிகிறது.

வயரிங், பைப்லைன் வடிவமைப்பு, சூப்பர்வைஸர் கன்ட்ரோல் மற்றும் பைப்லைன்கள் / ரிலே நிலையங்களுக்கான தகவல் தொகுப்பாளர் ஆகிய பணிகளில் உள்ள என்ஜினியர்கள் மற்றும் கள பணியாளர்களுக்கு மிகவும் பொருத்தமான எண்ணற்ற ஏஆர் அம்சங்கள் இதில் காணப்படுகின்றன.

சிறப்பம்சங்கள், கேமரா, பேட்டரி மற்றும் சென்ஸர்கள்:

சிறப்பம்சங்கள், கேமரா, பேட்டரி மற்றும் சென்ஸர்கள்:

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் ஒரு நானோ சிம் மூலம் இந்த கேலக்ஸி டேப் ஆக்டீவ் 2 செயல்படுகிறது. இதில் 8 இன்ச் WXGA (1280x800 பிக்சல்கள்) TFT டிஸ்ப்ளே உடன் கூடிய கொரில்லா கிளாஸ் 3 பேனல் காணப்படுகிறது. அபாயகரமான தருணங்களில் பாதுகாப்பை அளிக்கும் வகையில், அதிர்வை தவிர்க்கும் கவர் அளிக்கப்பட்டுள்ளது. ஆக்டா-கோர் எக்ஸ்னோஸ் எஸ்ஓசி மூலம் ஆற்றலை பெறும் இது, 3GB ரேம் கொண்டது. 16GB உள்ளக நினைவகம் உள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256GB வரை நீட்டிக்கலாம்.

கேமரா & பேட்டரி

கேமரா & பேட்டரி

கேமராவை பொறுத்த வரை, இதில் 8MP பின்பக்க கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமரா உள்ளது. இணைப்பை பார்த்தால், 4G LTE, ப்ளூடூத் v4.2, வைஃபை 802.11 a/b/g/n/ac, NFC, USB டைப்-C மற்றும் போகோ பின் இணைப்பு காணப்படுகிறது. மேலும் அக்ஸிலிரோமீட்டர், ஜியோமேக்னட்டிக், பிங்கர்பிரிண்ட், கைரோஸ்கோப் மற்றும் ப்ரோசிமிட்டி சென்ஸர்கள் காணப்படுகின்றன.

இதன் பேட்டரியை பொறுத்த வரை, 4,450mAh பேட்டரி காணப்படுகிறது. களத்தில் அதிக நேரம் செயலாற்ற வேண்டிய பட்சத்தில், முழுமையாக சார்ஜ் செய்த மற்றொரு பேட்டரியை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

முடிவு:

முடிவு:

தொழிற்சாலை பயன்பாட்டிற்கு இந்த டேப்லெட் ஒற்றை தீர்வாக அமைகிறது. தொழிற்சாலை பயன்பாட்டிற்காகவே, சிறப்பாக வடிவமைக்கப்ட்ட சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களை இது கொண்டுள்ளது. ஒரு சிறந்த மல்டிமீடியா அனுபவத்தை இது அளிப்பது இல்லை. சிக்கலான சூழ்நிலைகளில் ஒரு டிஜிட்டல் சாதனம் தேவைப்படும் பட்சத்தில், இந்த டேப்லெட் ஒரு சிறந்த தேர்வாக அமையும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab Active 2 Specifications Price and targeted audience : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X