Home
Gadgets

Samsung கேலக்ஸி டேப் A7 விரைவில் இந்தியாவில் அறிமுகம்! விலை இதுவாக கூட இருக்கலாம்!

சாம்சங் கேலக்ஸி டேப் A7 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் டேப்லெட்டின் ஆதரவு பக்கங்கள் இப்போது சாம்சங் இந்தியாவின் இணையதளத்தில் நேரடியாக காணப்பட்டுள்ளது. முன்கூட்டிய பட்டியல்கள் Wi-Fi மட்டும் மற்றும் LTE வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப்

சாம்சங் கேலக்ஸி டேப்லெட்டின் மாடல் எண்களான SM-T500 மற்றும் SM-T505 ஆகியவற்றைக் இணையதளத்தில் டிப்ஸ்டர்கள் பார்த்துள்ளனர். Samsung கேலக்ஸி டேப் A7 கடந்த வாரம் சாம்சங் வெளியிட்டின் போது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த டேப்லெட்டில் 10.4' இன்ச் டிஸ்பிளே, ஒரு பெரிய பேட்டரி மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் குவாட் ஸ்பீக்கர் அமைப்பு ஆகியவை உள்ளன.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 7 மாடல்

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 7 மாடல் இப்பொழுது இந்தியாவின் ஆதரவு பக்கங்களில் நேரலையில் உள்ளன, ஆனால் டேப்லெட்டைப் பற்றிய எந்த விவரங்களையும் அல்லது இந்தியாவில் எப்போது விற்பனைக்கு இடம்பெறும் என்பதையும் வலைத்தளம் விவரிக்கவில்லை. சாம்சங் கேலக்ஸி டேப் A7 இப்பொழுது இந்தியாவில் என்ன சிறப்பம்சங்கள் மற்றும் என்ன விலையில் எதிர்பார்க்கப்படும் என்பதை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி டேப் A7 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி டேப் A7 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

  • 10.4' இன்ச் டிஸ்பிளே
  • பிரீமியம் மெட்டல் பேசல்
  • டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம்
  • குவாட் ஸ்பீக்கர் அமைப்பு
  • குவால்காம்
    • அட்ரினோ 610 ஜி.பீ.யுடன்
    • ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC
    • 3ஜிபி ரேம்
    • அண்ட்ராய்டு 10 உடன் ஒன் யுஐ
    • சாம்சங் கேலக்ஸி டேப் A7 எதிர்பார்க்கப்படும் விலை

      சாம்சங் கேலக்ஸி டேப் A7 எதிர்பார்க்கப்படும் விலை
      சாம்சங் கேலக்ஸி டேப் A7 இன் விலையை சாம்சங் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை; இருப்பினும் ஒரு அறிக்கை படி, 32 ஜிபி சேமிப்பு வைஃபை மாடல் தோராயமாக ரூ. 20,500 என்ற விலையில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் LTE மாடல் சுமார் ரூ. 25,600 ) என்ற விலையில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் 64 ஜிபி வைஃபை மாடல் தோராயமாக ரூ. 23,200 என்றும் இதன் LTE மாடல் தோராயமாக ரூ. 28,200 என்ற விலையில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab A7 Support Pages Go Live on Samsung India Website : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X