இதுக்கு தானே வெயிட் பண்ணோம்.. 7040mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. புது Samsung டேப்லெட்.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் சாம்சங் பிரியர்களை வெயிட் செய்ய வைத்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் (Samsung Galaxy Tab A11+) டேப்லெட் வெளியாகிவிட்டது. 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட மாடலாக இருப்பதால், சாம்சங் பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற டேப்லெட் பிரியர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் மாடலின் முழு அம்சங்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் டேப்லெட்களில் வை-பை வேரியண்ட்கள் அதிகமாக இருக்கின்றன. இதனால் 4ஜி மற்றும் 5ஜி டேப்லெட்கள் மீது எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதிலும் 5ஜி டேப்லெட்களுக்கு தனி வரவேற்பே இப்போது ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால், இந்தியாவில் அதிக கஸ்டமர்கள் 5ஜி சேவைக்கு மாறிவருகின்றனர். இதனாலேயே இந்த டேப்லெட்டுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் அம்சங்கள் (Samsung Galaxy Tab A11+ Specifications): 11 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) டிஎப்சி (TFT) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 16 மில்லியன் கலர் டெப்த் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. கலர் டெப்த் அதிகமாக இருப்பதால், கலர் அக்கியூரசி நேர்ச்சுவல் அனுபவம் கொடுக்கும். இதற்கு ஏற்ப ஆடியோ சிஸ்டம் கிடைக்கிறது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) கிடைக்கின்றன. ஆகவே, ஹெட்போன்கள் மட்டுமல்லாமல், ஸ்பீக்கர்களில் கிடைக்கும் ஆடியோவும் பிரீமியம் மற்றும் ஸ்டீரியோ அனுபவம் கொடுக்கும். ஒட்டுமொத்தமாக டிஸ்பிளே மற்றும் ஆடியோ அம்சங்கள் ஓடிடி பிரியர்களுக்கு பக்காவாக இருக்கிறது. அதேபோல வீடியோவும் பக்காவாக இருக்கும்.
லேட்டஸ்ட் யுஐ அனுபவம் கொடுக்க ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மட்டுமல்லாமல், ஒன் யுஐ 8 (One UI 8) கிடைக்கிறது. இதற்கு 7 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் கொடுக்கப்படுகிறது. மேலும், 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. 8 மெகாபிக்சல் ரியல் கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் டேப்லெட் கொடுத்து இருக்கிறது.
இதில் ஆட்டோ போகஸ் சப்போர்ட் கிடைத்துள்ளது. மேலும், செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் இதில் கிடைக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7040mAh பேட்டரி கிடைக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி, வை-பை கனெக்டிவிட்டி உள்ளது. 6 ஜிபி + 128 ஜிபி, 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்கள் உள்ளன. 2 டிபிக்கான எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) உள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் விலை (Samsung Galaxy Tab A11+ Price): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. வை-பை மற்றும் 5ஜி வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட்டின் விலை ரூ.28,999ஆக இருக்கிறது.
அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வை-பை மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.32,999ஆக இருக்கிறது. கிரே (Gray) மற்றும் சில்வர் (Silver) கலர்களில் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் டேப்லெட் கிடைக்கிறது. சாம்சங் இந்தியா தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. மற்ற தளங்களில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








