இதுக்குதான ரொம்ப நாளா வெயிட்டிங்.. 11 இன்ச் டிஸ்பிளே.. QUAD ஸ்பீக்கர்ஸ்.. 7025mAh பேட்டரி.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் டேப்லெட் பிரியர்கள் எதிர்பார்த்த நேரம் அடுத்த வாரத்தில் வர இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் (Samsung Galaxy Tab A11+) மாடல் வெளியாக இருக்கிறது. 11 இன்ச் டிஸ்பிளே, குவாட் ஸ்பீக்கர்கள், 7025mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் கிடைக்க இருக்கின்றன. இந்த டேப்லெட் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் சாம்சங் ஏ சீரிஸ் டேப்லெட்களுக்கு தனி ரகிகர் பட்டாளம் இருக்கும். ஸ்லிம் டிசைன் மற்றும் மலிவான விலையில் இந்த மாடல்கள் கிடைக்கின்றன. ஏற்கனவே, செப்டம்பர் மாதத்தில் கேலக்ஸி டேப் ஏ11 (Galaxy Tab A11) வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது, சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் மாடல் களமிறங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

சாம்சங் இந்தியா நிறுவனம் அடுத்த வாரத்தில் இந்த டேப்லெட் வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளது. ஆனால், தேதியை குறிப்பிடவில்லை. இருப்பினும், நவம்பர் 28ஆம் தேதி கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் மாடலின் விற்பனை தொடங்கும் என்று சாம்சங் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆகவே, அதற்கு முன்னதாக வெளியாகும். இல்லையென்றால், அதே தேதியில் வெளியாகவும் வாய்ப்புள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் அம்சங்கள் (Samsung Galaxy Tab A11+ Specifications): இந்த டேப்லெட்டில் 11 இன்ச் டபுள்யூஎக்ஸ்ஜிஏ (WXGA) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஎப்சி டிஸ்பிளே மாடலில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) கிடைக்கின்றன. ஆகவே, வீடியோ, ஆடியோ பக்காவாக எதிர்பார்க்கலாம்.
மீடியாடெக் எம்டி8775 4என்எம் (MediaTek MT8775 4nm) சிப்செட் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கிடைக்கிறது. இதில் 2 டிபிக்கான ஸ்டோரேஜ் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் மாடலில் 8 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 7025mAh பேட்டரி கொடுக்கப்படுகிறது.
இந்த பேட்டரிக்கு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. கிரே (Gray) மற்றும் சில்வர் (Silver) கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த டேப்லெட்டின் விலையை தெரிந்து கொள்ள முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 மாடலை பார்க்க வேண்டி இருக்கிறது. இதில் கிடைத்த பீச்சர்கள், அந்த பீச்சர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 அம்சங்கள் (Samsung Galaxy Tab A11 Specifications): இந்த டேப்லெட்டில் 8.7 இன்ச் (800 x 1340 பிக்சல்கள்) டிஎப்சி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் கிடைக்கிறது. இதில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வருகிறது.
அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 8 எம்பி ஆட்டோ போகஸ் ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள் கிடைக்கிறது. 5100mAh பேட்டரி மற்றும் 15W சார்ஜிங் உள்ளது. இந்த பீச்சர்களுடன் ரூ.12,999 ஆரம்ப விலைக்கு கிடைத்தது. ஆகவே, பிளஸ் மாடலை ரூ.15,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








